ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
கலைமகள் துடுப்பாட்ட இறுதிப்போட்டி.
17 வருடங்களின் பின் யாழில் கம்பன் விழா
மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து, தலைமையுரையை தொடர்ந்து தொடக்கவுரையினை பேரசிரியர் எஸ். சிவலிங்கராஜா நிகழ்த்தினார்
தொடக்கவுரையில் 17ஆண்டு இடைவேளைக்கு பிறகு மிண்டும் யாழ் மண்ணிலே இவ்வாறானநிகழ்வு நடைபெறுவது தனக்கும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளதுஎனகுறிப்பிட்டா ர்
அரசியல் நன்றிமறவாபண்பு நட்பு குடும்ப வாழ்வு என அறபண்புகளையே கம்பராமயணம் வெளிப்படுத்தி நிற்கிறது
சுழரும் சொற்போர் நிகழ்வு இடம்பெற்றது இதில் கம்பராமயணத்தின் காண்டங்களை அடிப்படையாக கொண்டு பேரழகானான இராமன் எக்காண்டத்தவன் என்பதே வாதம் வாதத்தில் பங்கு பெற்றியவர்களாக பாலஇராமனேஎன கு.பாலசண்முகன் அயோத்திஇராமனேஎன ச.லலீசன் ஆரண்யஇராமனேஎன காலநிதி ஸ்ரீ. பிரசாந்தன் சுந்தரஇராமனேஎன த.இராமலிங்கம் யுத்தஇராமனேஎன புலவர் சண்முகவடிவேல்கிஷ்கிந்தஇராமனேஎன செல்வவடிவேலும் வாதங்களை முன்வைத்தனர் நடுவராக கம்பவாரிதிஇ.ஜெயராஜ் தலைமைதங்கினர்
கம்பவாரிதிஇ.ஜெயராஜ் உரையற்றும்போது தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை எடுக்கின்றபோதும் அவர்கள் ஆளுமை குறைந்தவர்களாகவே உள்ளனர்எனவும் நிலை தொடருமாக இருந்தால் மலையக மக்களை போல யாழ்ப்பாணசமூதாயம் மாறிவிடும் எனகுறிப்பி்ட்டார்
இதன்மாலைநிகழ்வுகளாக இன்று மங்களவிளக்கேற்றல், கடவுள்வாழ்த்து, தலைமையுரையை பேரசிரியர் வசந்தி அரசரட்ணம்
தொடர்ந்து தொடக்கவுரையினை திருமதி. யோகேஜ்வரி பற்குணராஜா நிகழ்த்தினார்
கவியரங்கம் தலைப்பு கம்பன் நாடன்கவிதையொடு காலம் எல்லாம் வாழ்திடலாம்,வழக்காடுமன்றம் என்பன நடைபெறஉள்ளது
யாழ் பல்கலைக்கழக அணி வெற்றி
நடாத்திய அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி வெற்றிக்கிண்ணத்தை யாழ் பல்கலைக்கழக அணி தட்டிச்சென்றது
நேற்று மாலை 4.00 மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் யாழ் பல்கலைக்களக அணியும் குறுநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணியும் மோதியது
ஆரம்பமாகிய முதல் பாதி ஆட்டத்தில் பல்கலைக்களக அணி 1-0 என முன்னணி வகித்தது இரண்டாவது பாதி ஆட்டத்தில் பாடும் மீன் விளையாட்டுக் கழக அணி 1 கோலையும் பல்கலைக்கழக அணி 3 கோல்களையும் போட்டது இறுதியில் பல்கலைக்களக அணி 4-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபாகை சூடியது
பல்கலைக்களக அணித்தலைவர ஞனரூபன் இறுதிப்போட்டியில் 3 கோல்களைப் போட்டமைக்காக இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காறராக தெரிவு செய்யப்பட்டதுடன் வெற்றி பெற்ற பல்கலைக்களக அணிவீரர்களுக்கு பதக்கம்கள் வளங்கப்பட்டதுடன் பங்கு பங்குபற்றி வெற்றி பெற்ற அணிக்கு 25.000 ரூபாவும் 2ஆம் இடத்தனை பெற்ற அணிக்கு 15.000 ரூபா காசோலையும் வழங்கப்பட்டது
இப்போட்டியில் பங்குபற்றிய எல்லா அணி வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது
உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானம்
உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு மைதானம் ஒன்றை பெற்றுத்தெருவதாகவும் , சகல வசதிகளுடக் கூடிய கலையரங்கினையும் அமைத்துத் தருவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா தெரிவித்தார்
நேற்று ( 21.04.2012 ) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான உதயசூசரியன் சனசமூக நிலையத்தில் உதயசூசரியன் சனசமூக நிலையமும் மக்கள் கலை இலக்கிய மன்றமும் இணைந்து நடாத்திய கலாச்சார விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
இந்த விழாவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானமென்று பெற்றுத்தரப்படும் எனவும் சகல வசதிகளோடு கலையரங்கு அமைத்துத்தரப்படும் எனவும் இக்கிராம மக்களுக்கு 2 மாதங்களுக்குள் தொழில் முயற்சிக்கான வாய்பு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்
தொடர்ந்து இசைஅரங்கம், நாடக அரங்கம், நடன அரங்கம், நாடகமகள் போன்றன நடைபெற்றது
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பசுபதி ஜீவரத்தினம் ஈழமக்கள் ஜனனாயகக் முன்னணி கோப்பாய் பொறுப்டபாளர் ஜங்கரன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்
சனி, 21 ஏப்ரல், 2012
இலகுவான வீடியோ ஓடியோ கன்வெர்ட்
நாம் பொதுவாக ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு சில மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவோம்.
ஆனால் இதனை VLC Media Player லிலேயே மேற்கொள்ளலாம்.
VLC Media Player-யை ஓபன் செய்து கொண்டு அதில் Mediaவில் Convert->Save என்பதை கிளிக் செய்யவும். அதில் File என்ற டேப்பில் உங்கள் Audio/Video File ஐ open செய்து Audio/Video வை தெரிவு செய்து Convert/Save என்பதனை Click செய்யுங்கள்.
அதன் பின் Stream output என்ற விண்டோ ஓபனாகும், அதில் Encapsulation டேப்ஐ Click செய்து உங்களுக்கு தேவையான போர்மட்டை தெரிவு செய்து Save என்பதை Click செய்யுங்கள்.
அவ்வளவு தான் உங்களது ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள் நீங்கள் தெரிவு செய்த போர்மட்டுக்கு மாறிவிடும்.
ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம்
நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார்.
நயன்தாரா - ஜெயம் ரவி இணையும் பூலோகம்
பேராண்மை பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் படம் பூலோகம் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை நயன்தாராவிடம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கூறியுள்ளார்.
படத்தின் கதையும் நாயகி கதாப்பாத்திரமும் பிடித்ததால் நாயகன் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெற்றி
ஏசியன் 5 நேஷன்ஸ் முதலாம்தர றக்பி தொடரில் சிங்கப்பூருக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 35க்கு 10 எனும் புள்ளிகள் கணக்கில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
தொடரில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை தனது முதல் போட்டியில் சீன தாய்பேயை வெற்றிகொண்டது.
இலங்கை எதிர்வரும் சனிக்கிழமை பிலிப்பைன்ஸை எதிர்த்தாடவுள்ளது.
வாகன விபத்தில் 43 பேர் பலி
மெக்சிக்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரக்குகளை ஏற்றிய ட்ரக் வாகனமொன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்றுடன் மோதியதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிக்கோ ஜனாதிபதி தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் நால்வரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை
இஸ்லாமாபாத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் உரிமை நிறுவனத்திற்கு எதிராக பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
127 பேரின் உயிர்களை காவு கொண்ட விபத்தினை அடுத்து, குறித்த ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நாட்டில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாரிய விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு எதிராக இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்விவகார அமைச்சர் ரஹ்மான் மாலிக்
பட்டதாரி ஆசிரியர் நியமனம்
மேல் மாகாண பாடசாலைகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தகவலை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகள் தமக்கான நியமனக் கடிதத்தை பெறுவதற்கு முன்னர் ஒருவார காலத்திற்கு தொண்டர் ஆசியர்களாக கடமையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்துப் பரீட்சை ஆகிய இரு பரீட்சைகளுக்கும் முகங் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கே நியமனம் வடங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியக்குளுவின் இலங்கை விஜயம் குறித்து...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தமது விஜயத்தின் இறுதிநாளான இன்று காலை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினர். இத்தூதுக்குழுவில் இடம்பெற்ற 12 இந்திய எம்.பிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் இதில் பங்குபற்றினர்
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே
இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு பாராளுமன்றக்குளு மூலமே பேசித்தீர்க்க வேண்டும் எனவும் அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள நம்பிக்கையுடன் எமது பிரச்சினையைத்தீர்க்க நாம்தான் முயற்சிக்க வேண்டும் எனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா தெரிவித்தார்
தமிழ் தேசியக்கூட்டமைப்புபோ அரசு தங்களுடன் பேசவரவில்லை என்கிறது ஆனால் அரசு பேச அழைததால் அரசின்மேல் நம்பிக்கை இல்லை என்தெரிவிதிது விலகிச்செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார்
பாராளுமன்ற தெரிவுக்குளு என்பது ஜெனீவாமானாட்டுக்கு 5 மாதத்திற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் முடிந்துள்ளதாகவும் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்திருந்தால் சிறப்பாக செயற்பாடுகள் அமைந்திருக்கும் என்றார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் பரிந்துரையை மறுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போது அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர் உண்மையில் ஈ.பி.டி.பி ஆகிய நாம் எதனை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த கூறிவருகிறோமோ அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அற்க்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லெண்ண ஆணைக்குளுவின் அறிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை ஈ.பி.டி.பி பற்றி தவறான குற்றச்சாட்டினையும் நாம்முற்றாக நிராகரிப்பதபகவும் அது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் குறிப்பிட்டார்
தமிழ்ச் சிறுமியான சுட்ட மூவருக்கும் ஆயுள்தண்டனை
பிரிட்டன், லண்டனில் தமிழ்ச் சிறுமி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொள்ளையடிப்பதற்காக புகுந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துசா கமலேஸ்வரன் என்ற சிறுமி நெஞ்சில் படுகாயமடைந்தார்.
இதனால் அவர் உடல் செயலிழந்த நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறுமி சுடப்பட்ட காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் பதிவானது.
இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவர் குறைந்தது 17 ஆண்டுகளும், ஏனைய இருவர் குறைந்தது 14 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதனை சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள மூவரும் 19, 20, 21 வயதுகளையுடைய கறுப்பினத்தவர்களாவர்.
இந்தச் சம்பவத்தின் போது வர்த்தக நிலைய உரிமையாளரான றொசான் செல்வக்குமாரின் தலையிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
அவரது தலையில் இருந்து அந்தக் குண்டு இன்னமும் அகற்ற முடியாதுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்புக் குறித்து சிறுமி துசாவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினை
ஈழத்தமிழருக்கும் இந்தியத் தமிழருக்குமிடையில் பிரிவினையை தூண்டிவிட அரசாங்கத்தினால் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முதற்கட்ட நடவடிக்கையினை இன்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்புடன் ஆரம்பித்துள்ளார்.
ஸ்ரீதர் தியேட்டரில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் மேற்குறித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்திற்குப் பல தடவைகள் மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் யாழ்.வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடமும், மகஜர் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் அவற்றுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அரசாங்கத்திற்கு தந்தியொன்று நான் அனுப்பவுள்ளேன். அதனையும் அரசாங்கம் நிராகரித்தால் இராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று சகோதரப் படுகொலைகளை நிறுத்துமாறு தான் பிரபாகரனிடம் கேட்டதாகவும் ஆனால் அவர் தன்னை துரோகிகள் பட்டியலில் முதல்வரிசையில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததுடன், நான் உயிருடன் இருக்கையில் தான் இறப்பேன் என பிரபாகரன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எனவும் தெரிவித்தார்.
இதற்கு புலிகளின் முன்னாள் ஊடக பிரிவு பொறுப்பாளர் தயா மாஸ்டர் புன்னகைத்தபடி ஆமாம் என தலையசைத்தார். தொடர்ந்து புலிகள் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கவில்லை என டக்ளஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம்
யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு குற்றத்திற்காக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வருபவர்கள் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை வைத்து தப்பித்து அல்லது பிணையில் வெளியில் வருபவர்கள் ஏனைய இடங்களுக்கு செல்வதாகவும் அவ்வாறு செய்பவர்களாலேயே அதிகம்மாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இன்று (20.04.2012) ஈ.பி.டீ.பி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தெரிவித்தார்
மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் நடைபெறும் குற்றச்செயல்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் குறைவாகவே நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர் இங்கு பொலிஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் கொழும்பைப்போண்று அரசியல்தலையீடுகள் இங்கு இல்லை என்றும் இதனால் தங்களினால் இயல்பாக செயல்ப்படக்கூடயதாக உள்ளது என்றார்
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கத் தயார்- Eut தளபாட நிலைய தொழிலதிபர்
போரினால் பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக் கு கல்வித் தகைமையை அடிப்படையில் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் வழங்கத்; தயாராக உள்ளதாக Eut தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் அனைத்து பிரதேச நுகர்வோரையும் இணைக்கக்கூடிய மத்திய பகுதியான சுன்னாகத்தில் இந்த தளபாட உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில,ஆண்கள் பெண்கள் என இருவரையும் இணைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு ,பயிற்சிக் காலங்களில் 5000ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்களின் வேலைகளுக்கு ஏற்றவாறு 10,000 தொடக்கம் 25 000ரூபா வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், ஓய்வுதியத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் எவரும் நிலைத்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, படித்தவர்கள் அனைவரும் அரசாங்க வேலையை விரும்புகின்றனரே தவிர இப்படியான வேலைகளைச் செய்ய முன்வருபவர்கள் குறைவாகவே உள்ளனர்..
ஆரம்பத்தில் இங்கு மரத்திலாலான மூலப் பொருட்களை மட்டுமே கொண்டு உற்பத்திசெய்யப்பட்ட தளபாடங்கள், தற்போது மலோசியாவிலிருந்து பல வகையான பிளாஸ்ரிக், இரும்பு, அலுமினியம், போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தளபாடங்களை உற்பத்தி செய்யப்படுவதாகவும், 15 வருடங்களை கடந்து 20ற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட நிரந்தர ஊழியர்களுடன் சிறப்பாக செயற்படும் இந்த Eut (ஐக்கிய நம்பிக்கை உபகரணம்) நிறுனத்தின் வளர்ச்சிக்கு தான் வடிவமைப்பு மீது கொண்ட ஆர்வமே காரணம் எனவும் நிறுவனத்தின் தொழிலதிபர் வே.ஸ்ரீஸ்கந்தராஜா குறிப்பிட்டார்.
இங்கு உற்பத்திசெய்யப்படும் தளபாடங்கள் தற்போது வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
Eut தளபாடங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுவதால் அவர்களின் தேவையை புர்த்தி செய்வதே எமது கடமையாக உள்ளபோதும், மூலதனப்பற்றாக்குறை, இடவசதியின்மை, ஊழியர் பற்றாக்குறை என்பன எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அத்துடன், வங்கியினால் வழங்கப்படும் கடன்கள் வியாபாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக் கு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளைக் கொடுப்பதற்குத் தயாராக உள்ளபோதும் எவரும் வேலைசெய்ய முன்வருகிறார்கள் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
1000 படகுகளில் இந்தியா செல்ல அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்
வடமராட்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கடற்பகுதிகளிலிருந்து 1,000 படகுகளில் 5,000 மீனவர்களுடன் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதும் அவர்கள் இங்கு உள்ள கடல்வளங்களை அழிப்பதாகவும் வடமாகாண மீனவர்கள் தனக்கு எப்பொழுதும் முறைப்பாடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய மீனவர்கள் பல தடவைகள் வடமாகாண கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் கடற்பரப்பில் மோதலில் ஈடுபட்டதாகவும் கைதுசெய்யப்பட் டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக முதலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு தந்தி அனுப்புவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் அதன்பின்னரே இராமேஸ்வரத்திற்கு படகுகளில் செல்லஉள்ளதாகவும் குறிப்பிட்டார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





















.jpg)


