//]]>3

வெள்ளி, 25 மே, 2012

ஐந்து ஆயர்களுக்கு நீதிமன்ற உத்தரவு


மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 27ம் திகதி மன்னாரில் மக்கள் ஒன்று கூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ள ஐந்து ஆயர்களுக்கு மன்னார் நீதிமன்றம் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது.
மன்னார் பொலிஸார் செய்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் தலைமன்னார், முருங்கன், வன்கலாய் மற்றும் மடு ஆகிய கிறிஸ்தவ ஆலய ஆயர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடலின்போது ஏற்படலாம் என கருதப்படும் போக்குவரத்து நெரிசல், அமைதிக்கு பங்கம், தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன முறுகல்,மற்றும் அமைச்சர் ஒருவரின் உருவ பொம்மை எரிப்பு போன்ற விடயங்களை முன்வைத்து பொலிஸார் இந்த முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆனால் தெய்வ பிரார்த்தனையின் நிமித்தம் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ சமுகம் தெரிவித்துள்ளது.இவர்கள் எந்தவொரு பேரணியையோ ஆர்பாட்டத்தையோ நடத்த ஏற்பாடு செய்யவில்லை.இந்த ஒன்று கூடலுக்கு அரச ஊடகத்தின் பரிவு உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைச் சிறுமிகள் சிங்கப்பூரில் விபசாரத்தில்....



சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சிங்கப்பூருக்கு இரு சிறுமிகளையும் அனுப்பி அவர்களை விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர் என இவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
களனியைச் சேர்ந்த சரத் எக்க நாயக்க மற்றும் சுகந்தி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.குறித்த சிறுமிகளுக்கு முதற் கொடுப்பனவாக தலா 25,000 ரூபாவை வழங்கியதுடன் நாளாந்தம் 5000 ரூபாவை வழங்குவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டே இவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறான விபசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோரின் பின்னணியில் ஆளுந்தரப்பு அரசியல் பலம் உள்ளதாகத் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கை பெண் ஒருவரை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்கு அனுப்புவதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது

தமிழரசு மாநாடு நடைபெறவிருந்த மண்டபம் எரிப்பு!



மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்டபத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்துவந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்ததாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் மண்டபத்தினக் திரைச்சீலை உட்பட பல பொருட்கள் தீயினால் எரிந்துள்ளன. சம்பவத்தையடுத்து மண்டபத்துக்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு இங்கு நடைபெறவிருப்பதை முன்னிட்டு தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு மண்டபத்தைக் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்சி மாநாட்டை குழப்பும் நோக்கத்துடனேயே விஷமிகள் சிலர் இந்த நாசகார வேலையைச் செய்திருக்கலாம் எனவும் தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வியாழன், 24 மே, 2012

$ 1.15 மில்லியனுக்கு ஏலம் போன ஒரு சதம்



அமெரிக்காவின் முதலாவது தயாரிப்பான நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு சத குற்றி நாணயம் சுமார் 1.15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நேற்று முன்தினம் (19) ஏலம் போயுள்ளது.
1792 ஆம் ஆன்டு காலப்பகுதியை சேர்ந்த இவ் நாணயம், கெவின் லிப்டன் என்ற நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந் நாணயத்தின் ஒருபுறம் லடி லிபெர்டி உருவமும், மறுபுறம் ரிப்பனால் இணைக்கப்பட்ட இலைத்தொகுதியும் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ் ஏலத்தில் மொத்தம் 22 பேர் பங்குபற்றியிருந்தனர்.

தனது மூளையை தானே திண்ற மனிதன்



தலைப்பைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறதா? பிருத்தானியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரே சுவாரஸ்யமான முறையில் தனது மூளையை திண்று காட்டி அசத்தியுள்ளார்.
3D பெய்ன்டிங் தொழில்நுட்பத்தில் கணினி, விசேட பிரிண்டர் உதவியுடன் MRI Scan மூலம் பெறப்பட்ட தனது மூளையின் முப்பரிமான வடிவத்தை சொக்கலெட் துகள்கள் மூலம் முப்படிமான வடிவமாக பிரிண்ட் செய்து அதனை சுவைத்துள்ளார்.
இம் மூளை மாதிரியை பிரிண்ட் செய்ய 3 மணிநேரங்கள் எடுத்தனவாம்.

யாழில் மாமியார் தொல்லையால் மருமகன் தீக்குளிப்பு


காலம் காலமாக மாமியார் கொடுமை என்பது பெண்களுக்கே இருந்து வந்துள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மாமியார் கொடுமை தாங்க முடியாது ஆண்மகன் ஒருவர் தனக்கு தீமூட்டிக்கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் யாழ். மல்லாகம் நீதிவான் நலன்புரி வீதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2012) நடைபெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (23) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இவர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் குடும்ப வறுமை காரணமாக தான் டோகா கட்டாருக்குச் சென்று யாழ்ப்பாணத்திற்கு மூன்று மாதங்கள் விடுமுறையில் வந்ததாகவும், மனைவி (29) தன்னை தனக்கு வேண்டாம் எனக் கூறி தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்ததாகவும் தான் அவளோடு வாழ வேண்டும் என அவளின் தாயாரிடம் பல முறை கேட்டும் தன்னை அவளோடு சேர்ந்து வாழ விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மாமியாரால் பலதடவை குறித்த நபர் வார்த்தை மூலம் அவமானப்படுத்தப்பட்டுளார் என்றும் தெரியவருகிறது.
இதனால் மனமுடைந்து மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் பொலிஸாருக்கு உயிருடன் இருக்கும் போது கொடுத்த வாக்குமூலத்தில் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

மேப்பநாய் திருடனைக்கண்டு பிடித்தது -யாழில்



யாழ். சங்கானை நிற்சாமம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (18.05.2012) ஒரே இரவில் இரண்டு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்த வரவழைக்கப்பட்ட விசேட மோப்ப நாய்களின் உதவியுடனேயே பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என முதல்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வடலியடைப்பைச் சேர்ந்த குறித்த நபரிடம் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைத் தேடி வருகின்றனர். அத்தோடு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரசவித்த குளந்தையை விற்கமுயன்றவர்கைது -யாழில்



பிரசவித்த தனது குழந்தையை விற்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் தாயொருவரும் இக்குழந்தையை வாங்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் பிறந்த இக்குழந்தையையே இத்தாய் விற்க முயன்றதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
விற்பதற்காக இன்னொரு பெண்ணிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு கடிதம் மூலம் தான் குழந்தையை விற்பனை செய்வதை இத் தாய் உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர்கள் இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது

எஸ்.பீ.திஸாநாயக்காசின் கோரிக்கை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு



கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட Z புள்ளி பிரச்சினை குறித்து கணிப்பிட குழுவொன்றை அமைக்க உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் சட்ட மா அதிபரின் ஊடக முன்வைத்த கோரக்கையை உயர் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன் குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே இருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சருக்கு அது குறித்து அதிகாரம் இல்லை எனவும் அதனால் அமைச்சரின் கோரிக்கை அடிப்படை அற்றது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் Z புள்ளி பிரச்சினை குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வெளியிடவுள்ளதாலும் உயர் கல்வி அமைச்சரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற உண்வு உண்ணா நாடகம்



தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.
 
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று  தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர். 
 
அரச அமைச்சரான நிமால் சிறீபால டி சில்வாவினது உறுதி மொழியை கருத்தில் கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரச உறுதிமொழி செயற்படுத்தப்படாவிடின் ஒரு மாதத்தின் பின் மீண்டும் போராட்டம் தொடரும் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே வவுனியாவில் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முடிவுறுத்தப்படும் போதே தமது உண்ணவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் தமிழ் அரசியல் கைதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.
 

யாழில் காதல் எனும் பெயரால் ஆண்களை ஏமாற்றும் பெண்கள்



கடந்த 2 நாட்களில் மட்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியில் நஞ்சருந்திய நிலையில் மூன்று இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நஞ்சருந்திய நிலையில் ஒரு இளைஞரும் காதலியால் ஏமாற்றப்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் நஞ்சருந்தியுள்ளனர்.
தனது உழைப்பை எல்லாம் செலவு செய்து காதலித்த பெண் தற்போது வெளிநாட்டு மாப்பிளையை கட்டுவதற்கு முன்வந்து தன்னைப் புறக்கணித்ததால் நஞ்சருந்தியதாக ஒரு இளைஞர் புலம்புகின்றார்.
இதே வேளை படிக்காது இருந்ததால் தயார் ஏசியதால் தற்கொலைக்கு முயற்சி கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி போன்றவற்றால் மேலும் சிலரும் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழில் ஒட்டிய இரட்டைகள்



உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து போயின. அரிதான இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த உடல் பெற்றோரின் சம்மதத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு இடம்பெறும் கண்காட்சியில் அந்த உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லாகத்தைச் சேர்ந்த சூரியகுமார் வசந்தாதேவி என்பவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் உடல் ஒட்டிய நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைக்காகச் சென்றிருந்த பலர் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முண்டியடித்ததைக் காண முடிந்தது.
இரண்டு குழந்தைகளினதும் நெஞ்சு, வயிறு என்ப ஒட்டிய நிலையில் உள்ளன. இரண்டு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் காணப்படும் இந்தக் குழந்தைகளின் உடலில் உரோமங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்றுப் பெண் நோயியல் வைத்திய நிபுணர் குலசிங்கம் சுரேஸ்குமார் கருத்துக் கூறுகையில்,
இது வைத்தியசாலை வரலாற்றில் அரிதான ஒரு விடயம். குழந்தைகளின் உறுப்புக்கள் ஆரம்பத்திலேயே பிரியாது, தாமதமாகப் பிரிந்துள்ளன. இதனாலேயே ஏனைய உறுப்புக்கள் பிரிந்த போதும் நெஞ்சுப் பகுதியும் வயிற்றுப் பகுதியும் பிரியவில்லை.
குழந்தைகள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கதிர்வீச்சுப் பரிசோதனை மூலமாக இரட்டைக் குழந்தைகள் என்பது தெளிவாகியது.
ஆனால் அவை ஒட்டிய நிலையில் உள்ளதா? என்பதனைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கில்லை என அவர் தெரிவித்தார்.

மனைவியின் நடத்தையால் கணவன் யாழில் உயிரிழப்பு



தனது மனைவி இன்னொரு நபருடன் இருந்தமையைக் கண்டு மனம் உடைந்த கணவன் நஞ்சு விதையை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) யாழ்.நவாலி வடக்கு பகுதியில் நடைபெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டை தீவை பிறப்பிடமாகப் கொண்ட, நவாலி வடக்கில் வசித்து வரும் ஞாகேஸ்வரன் பாலன் (வயது 34) என்பவரே நஞ்சு விதை உட் கொண்டு உயிரிழந்தவராவர்.
குறித்த நபர் கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளியாவர். இவர் தனது வேலையின் நிமித்தம் துரப் பிரதேசங்களுக்கு சென்று வருபவர்.
குறித்த ஒருநாள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது இவரது பிள்ளையொன்று வீட்டுக்கு வெளியில் விளையாடுவதைக் கண்டு அம்மா எங்கே என வினாவியபோது அம்மா மாமாவோட அறையில் இருக்கிறார் என 5 வயதுச் சிறுவன் கூறியுள்ளார்.
யார்? மாமா என கதவு இடைவெளியினால் பார்த்த போது தனது மனைவி வேறு ஒருவருடன் இருப்தாக் கண்டு ஆத்திரம் அடைந்து குறித்த நபரை விரட்டிச் செல்லும் போது அவர் ஒடித் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் வீட்டுக்கு அருகில் இருந்த அரலி விதையை உட்கொண்டு மரணித்துள்ளதாக, இறந்தவரின் தாயார் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியத்திற்கு இடம் இல்லாத யாழ் வைத்தியசாலை



யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் வீதிவிபத்துக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பரிவில் இடப் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) நிலத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தினமும் 12 முதல் 15 வரை வீதிவிபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதன்காரணமாக அதிகளவில் நோயாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் விபத்துக்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்துக்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் யாழ்.குடாநாட்டில் நடைபெறும் விபத்துக்களினால் இந்த வருடதத்தில் கால் ஆண்டில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள்!!



யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடிப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுவான ஜகாத் எனப்படும் ஆயுதக்குழு யாழில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.குடாநாட்டில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போகின்ற பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டிப் பகுதி தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று அவனுக்கு சுண்ணத்து பண்ணி முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்த வகையில் குறித்த நிறுவன் இன்று வியாழக்கிழமை(24.05.2012) தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சிறைக்காவலர்களினால் கொண்டு வரப்பட்டான்.
“ நான் அம்மாவோட இருக்கப் போகிறேன் அம்மா என்னை விட்டுவிட்டு எங்கையும் போகாத… என்னை விட்டுவிட்டு போகாத அம்மா” என வைத்தியசாலையில் அழுது புலம்பினாள்.
சிறுவனின் தாய் தனது மகனைக் கட்டியணைத்து உன்னைவிட்டு போகமாட்டேன் என்ர ராசா என தாயும் அழுதமை பார்த்தவர்கள் நெஞ்சங்களில் உணர்வுகள் ஒருநிமிடம் நிறுத்தப்பட்டு கண்களில் கண்ணீர் துளிகள் பனித்தது.
மானிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கதறியழுதான்.
யாழில் முஸ்லிம்களினால் சிறுவர்கள் கடத்தல்கள் மட்டுமல்ல சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமையும் நடைபெறுகின்றது.
யுத்ததிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்தேறு குடிகளாக வந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை வாழ்வியலைச் சிதைப்பதற்காக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
போதைப் பொருள் விற்பனை கிரோயின், கஞ்சா, பான்பறாக், பக்கிஸ்தானிய பீடிகள் என போதைப்பொருள்களைக் கடத்தி வந்து யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்து யாழ்.சமூகத்தை சீரழிக்க முஸ்லிம்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் முஸ்லிம்களின் இந்த சமூகவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு யாழ்.மக்கள் ஒன்றழனைந்து அவர்களை யாழ்.மாவட்டத்திலிருந்து துரத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 22 மே, 2012

12 ம் வகுப்புத்தேர்வில் பேரறிவாளன், முருகனுக்கு அதிக புள்ளிகள்


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் – பேரறிவாளன், முருகன் ஆகியோர் 12வது வகுப்புத் தேர்வில் அதிக புள்ளிகள் எடுத்துள்ளனர்.
பேரறிவாளன், முருகன் ஆகியோர் சிறையில் இருந்து படித்தே 12வகுப்புத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் பேரறிவாளன் 1200 இற்கு 1096 புள்ளிகள் பெற்றுள்ளார்.
12வகுப்புத் தேர்வு எழுதிய மற்றொருவரான முருகன் 983 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள இவர்கள் இருவரும், கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் அதிகபுள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவது குறிதது ஆலோசனை


கொழும்பு மகசீன் சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, அனுராதபுரம், களுத்துறை, வவுனியா, கண்டி உள்ளிட்ட நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 800க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 இவர்களில் பலநூறுபேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போயுமுள்ளர்.
 இது தொடர்பாக நாம் பல்வேறுமுறைகள் பாராளுமன்றத்தினூடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். அரசியல் கைதிகள் பலமுறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயத்தில் அரசு சார்பாக அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியும்கூட இதுவரை எதுவுமே நடக்கவில்லை.
 தமிழ் அரசியல் கைதிகள் பலர் அங்கவீனமுற்றவர்களாகவும், பலபெண்கள் திருமணம் முடித்து குழந்தை உள்ளவர்களாகவும் சிறைகளில் வாடுகின்றனர். பல இளைஞர்கள் குடும்பப்பொறுப்பைச் சுமப்பவர்களாக உள்ளனர்.
 இவர்களை எந்தவித விசாரணையும் இன்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பதனால் அவர்களது முழு வாழ்க்கையுமே அழிந்து சின்னாபின்னமாகியுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் கைதிகளின் விடுதலைபற்றி இலங்கை அரசு சிந்திக்காமல் இருப்பதானது வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதாகும்.
 தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்து நிற்கின்றது.
 அவர்களுக்கு எமது ஆதரவினைத் தெரிவிக்கும் பொருட்டும், அவர்களது கோரிக்கைகளுக்குச் சர்வதேச ஆதரவினைத் திரட்டும்பொருட்டும், இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உடனடித் தீர்வை எட்டும்பொருட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதியன்று காலை 7மணியளவில் வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்துகின்றது.
 இந்தப் போராட்டத்தில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அனைத்து உள்ளூராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்களையும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், காணாமல் போனவர்களின் பெற்றோர், அவர்களின் உறவினர்களையும், தடுப்பிலுள்ளவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சகல அரசியல் கட்சிகளையும், அனைத்துப் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்திக் கொடுக்கும்படி வேண்டுகின்றோம்.

தன் சாவை தானே பார்த்த சிங்கம்



காட்டு ராஜாவாக கம்பீரமாக கர்ஜிக்க வேண்டிய இவ் ஆண் சிங்கம், உண்ண முடியாது சாவை எதிர்நோக்கிக் கொண்டு உள்ளது.
ஆபிரிக்காவில் சிங்கத்துக்கு வைக்கப்பட்ட பொறியில் இதன் கழுத்து சிக்கிக்கொண்டது. சமூக ஆர்வலர்களால் இச் சிங்கம் காப்பாற்றப்பட்ட போதும், அதன் கழுத்து பகுதி சிதைவடைந்துள்ளதால், அதனால் உண்ண முடியவில்லை.
சீன மருத்துவத்தில் சிங்கத்தின் எலும்பு மதிப்பு பெறுவதால், ஆபிரிக்காவில் சிங்கங்கள் சட்டத்துக்கு விரோதமாக கொல்லப்படுகின்றன.
1 கிலோ கிராம் சிங்க எலும்பு 300 அமெரிக்க டாலர்களுக்கு விலைபோவதால் அப்பாவி சிங்கங்கள் அழிவை நோக்கி செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை போலவே ஏனைய ஜீவராசிகளுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு என்பதை மனித குலம் புரிந்துகொள்ள வேண்டும்…!

Facebook ஐ வெல்லுமா Microsoft?



Facebook, உலகின் முன்னனி சமூக வலையமைப்பு. இதை போன்ற சமூக வலையமைப்பை உலகின் முன்னனி கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்றோசொப்ட் உருவாக்கியுள்ளது.
கூகுல் + போன்று நேரடியாக ஃபேஸ்புக்குக்கு போட்டியாக குதிக்காது, பேஸ்புக் உறுப்பினர்களை பதிவின்றி உட்புகுத்தும் சாதூரியத்தை கைக்கொண்டிருக்கிறது மைரோசொப்ட்.
அதாவது மைக்றோசொப்ட் இன் SO.SL வலையமைப்பில், பேஸ்புக் பாவனையாளர்கள் நேரடியாக இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் ஃபேஸ்புக் பாவையாளர்களுக்கு தனது தளத்தை சுலபமாக அறிமுகப்படுத்த எத்தனித்து இருக்கிறது மைக்ரோசாப்ட்.
அத்துடன் விண்டோஸ் லைவ் ஐடி மூலமும் இத் தளத்துக்குள் நுளைந்து கொள்ளலாம். இச் சமூக தளம் மைக்ரோசொப்ட் இன் ஆராட்சி பிரிவால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலப்போக்கில் இச் சமூக தளம் ஃபேஸ்புக்கை வென்று சாதிக்குமா, இல்லை இல்லாமல் போகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வியயை தள்ளி விளுத்திய ஜீவா



அரசியல் பிரச்சினைகளால் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என இயக்குனர் சீமான் பிஸியாக இருந்ததால் ”பகலவன்” படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வந்தது.
விஜய் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் பகலவனில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ”பகலவனில்” நடிப்பதற்கு ஆர்யா, விஷால், ஜீவா ஆகியோர் சிந்திக்கப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீமான்…
மத்திய அரசிற்கு எதிராக பேசி நான் சிறைக்கு சென்று விட்டதால் என்னால் ”பகவலன்” படத்தினை குறித்த நேரத்தில் தொடங்க இயலாமல் போனது.
விஜய்யும் அடுத்த அடுத்த படங்களில் ஒப்பந்தமாகி விட்டார் என்று சீமான் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து நாயகன் வேடத்திற்கு ஆர்யா, விஷால் மற்றும் ஜீவா உள்ளிட்டவர்களில் ஒருவர் பொருத்தமாக இருப்பார்.
ஜீவா அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதிக்கு என்று எழுதப்பட்ட கதையில் ஜீவா பிரகாசிப்பாரா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்…!