//]]>3

வியாழன், 24 மே, 2012

எஸ்.பீ.திஸாநாயக்காசின் கோரிக்கை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு



கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட Z புள்ளி பிரச்சினை குறித்து கணிப்பிட குழுவொன்றை அமைக்க உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
உயர்கல்வி அமைச்சர் சட்ட மா அதிபரின் ஊடக முன்வைத்த கோரக்கையை உயர் நீதிமன்றம் இன்று (24) நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழு முன் குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே இருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சருக்கு அது குறித்து அதிகாரம் இல்லை எனவும் அதனால் அமைச்சரின் கோரிக்கை அடிப்படை அற்றது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் Z புள்ளி பிரச்சினை குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வெளியிடவுள்ளதாலும் உயர் கல்வி அமைச்சரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக