//]]>3

வியாழன், 24 மே, 2012

யாழில் ஒட்டிய இரட்டைகள்



உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து போயின. அரிதான இந்த நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்த உடல் பெற்றோரின் சம்மதத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு இடம்பெறும் கண்காட்சியில் அந்த உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த மல்லாகத்தைச் சேர்ந்த சூரியகுமார் வசந்தாதேவி என்பவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் உடல் ஒட்டிய நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
போதனா வைத்தியசாலைக்கு பல்வேறு தேவைக்காகச் சென்றிருந்த பலர் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முண்டியடித்ததைக் காண முடிந்தது.
இரண்டு குழந்தைகளினதும் நெஞ்சு, வயிறு என்ப ஒட்டிய நிலையில் உள்ளன. இரண்டு தலை, நான்கு கைகள், நான்கு கால்கள் காணப்படும் இந்தக் குழந்தைகளின் உடலில் உரோமங்கள் செறிவாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்றுப் பெண் நோயியல் வைத்திய நிபுணர் குலசிங்கம் சுரேஸ்குமார் கருத்துக் கூறுகையில்,
இது வைத்தியசாலை வரலாற்றில் அரிதான ஒரு விடயம். குழந்தைகளின் உறுப்புக்கள் ஆரம்பத்திலேயே பிரியாது, தாமதமாகப் பிரிந்துள்ளன. இதனாலேயே ஏனைய உறுப்புக்கள் பிரிந்த போதும் நெஞ்சுப் பகுதியும் வயிற்றுப் பகுதியும் பிரியவில்லை.
குழந்தைகள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கதிர்வீச்சுப் பரிசோதனை மூலமாக இரட்டைக் குழந்தைகள் என்பது தெளிவாகியது.
ஆனால் அவை ஒட்டிய நிலையில் உள்ளதா? என்பதனைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கில்லை என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக