யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் இன்று (11) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். இணுவிலில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி பேத்தியாருடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் அவரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமாக இந்த மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக கனிஸ்ட மாணவனை பகிடிவதைக்கு உள்ளாக்கிய சிரேஸ்ட மாணவர்கள் மூவருக்கு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது.
இதனை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இன்று (11) புதன்கிழமை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 28 ஆம் திகதி யாழ்ப்ப்பாண பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பீட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது 22), சிரேஸ்ட மாணவர்களினால் பகிடிவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை வகுப்புத்தடை விதித்து இடைநிறுத்தியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பெரு நாட்டில் உள்ள கெப்சா நெக்ரா என்ற இடத்தில் கடந்த சில திகதிகளுக்கு முன்பு, செம்பு சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து சுரங்கத்தற்கு செல்லும் பாதை முழுவதும் மண்களால் மூடப்பட்டதால் ஊழியர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
சுரங்கத்தில் சிக்கிய 9 பேரும் 7 திகதிகளாக இன்று வரை சுரங்கத்திற்குள்ளேயே இருக்கிறார்கள்.
அவர்களை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இருப்பினும் குழாய் மூலம் ஓக்சிஜன் வாயு செலுத்தப்படுகிறது. மேலும் உணவு, தண்ணீர் போன்றவையும் குழாய் மூலம் செலுத்தி வருகிறார்கள்.
தகவல் தொடர்பு சாதனம் செயற்படுகின்றன. அதன் மூலம் 9 பேரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களை மீட்பது குறித்த தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி பெரு நாட்டு மந்திரி பெட்ரா, 9 பேரையும் நாங்கள் எப்படியாவது மீட்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு பெரு நாட்டில் இதே போன்ற ஒரு சுரங்கத்தில் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் 69 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.
உலக அழகி ஐஸ்வர்யா ராய், தன் திருமணத்திற்கு பின்பு எந்திரன் படத்தில் நடித்தார்
பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்ததால், திரைக்கு வருவது தாமதமாகி வந்தது.
தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் தென்னிந்தியப் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளார்.இந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானால் படம் வெளிவருவதற்கு இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால் தென்னிந்திய படங்களில் நடித்தால் உடனே படப்பிடிப்பு தொடங்கி, வேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளார்.கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருக்கிறார்.
தென்னந்திய படங்களில் நல்ல கதையாக இருந்தால், அது ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று எண்ணி, தென்னிந்திய இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இணையத்தள தேடலில் 3ல் ஒன்று ஆபாச இணையத்தள தேடல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ்ட்ரீம்டெக் என்ற இணையத்தளம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இணையத்தள பயன்பாட்டில் சுமார் 30 சதவீத தேடல்கள், ஆபாச இணையத்தளங்களை கொண்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய ஆபாச இணையத்தளத்தின் 400 கோடி பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு 35 கோடி புதிய பார்வையாளர்கள் அதை காண்கின்றனர்.
ஆபாச இணையத்தளங்களில் அதிக பார்வையாளர்கள், பக்கங்கள் கொண்டவை அடிப்படையில் முதலிடம் பெறும், இணையத்தளத்தை ஒவ்வொருவரும் பார்க்க சராசரியாக 15 நிமிடம் செலவிட்டுள்ளனர்.
ஆபாச இணையத்தளத்தின் எவ்வளவு தகவல்கள் இடம் மாறின என்பது குறித்து அதன் சர்வரில் இருந்து பெறப்பட்ட தகவல்படி, விநாடிக்கு 50 ஜிகாபைட் அல்லது மாதத்துக்கு 29 பீட்டாபைட் அளவு ஆபாச படங்கள், தகவல்கள் இடம்மாற்றப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.
உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான்.
இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.
அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் இன்ரநெற் கபேக்களுமே அதிகளவில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு வழி வகுப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையங்கள். மாலையில் 6 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.தனியார் வகுப்பு நிலையங்களில் மலசல கூடம், குடிநீர் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும்.
விடுமுறைக் காலங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதும் மாணவர்களுக்கு உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன.குறிப்பாக பாடசாலைக் கல்வி முடிந்ததும் மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். இவர்களை கல்வி திணைக்களம் வழிப்படுத்த வேண்டும்
யாழ்ப்பாணத்தில் 21 வயதிற்கும் குறைந்தவர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனர்.பொது இடங்களில் மதுபானங்களை குடிகாரர்கள் அருந்துகின்றனர். இவற்றை பொலிஸார் தடுக்க வேண்டும்.யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சில இன்ரநெற் கபேக்களில் பாடசாலை நேரத்தில் பாடசாலைச் சீருடையில் சென்று மாணவர்கள் இணையப்பாவனையில் ஈடுபடுகின்றனர்.
இவைதவிர மூடிய பகுதியில் கணணி மொனிற்றரை நெற்கபேக்களில் பாவிப்பதை தடை செய்ய வேண்டும். இவைகளே அதிகளவான சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.இவ்வாறு கண்டறியப்பட்ட காரணங்களை இனங்கண்டு அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் துஸ்பிரயோகங்களை இல்லாதொழிக்கலாம் என்றார்.
ஊர்காவற்றுறை உதவி அரச அதிபர்
ஊர்காவற்றுறை பிரதேச செயலப்பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய உத்தியோகஸ்தர்கள் இல்லாமையே காரணமாகும் என ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் முன்பள்ள பருவ உத்தியோகஸ்தர் ஆகியோர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாறு ஆளணி வளம் இன்மையால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டப்படுத்த முடியாதுள்ளது. குறிப்பாக மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியாதுள்ளது.
எனவே மிக விரைவாக இவ்வெற்றிடங்களை நிரப்புவதன் மூலமே இவற்றை தடுக்க நடடிவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றார்.
இதேவேளை ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாலியல் துஸ்;பிரயோகங்களில் ஈடுபடும் அரச உயர் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்
உயர் பதவிகளிலுள்ள அரச உத்தியோகளின் பாலியல் துஸ்;பிரயோகங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இவ்வாறு நடந்து கொள்ளுகின்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் பாலியல் ரீதியான துஸ்;பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உயர்; அரச உத்தியோகத்தில் உள்ளவர்களும் கல்வியலாளர்களும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்;பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் தவறுகளைச் செய்கின்றபோதும் இவர்கள் தண்டிப்படாமல் உள்ளனர். இவர்ளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இவளுக்கு எதிரான குற்றங்களை மூடி மறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
யாழ்பாணம் சர்வதேச ரீதியாக பிரபல்ஜமடைந்த ஒரு இடம். இங்கு இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ஏனையவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்ப்படவேண்டும் என்றார்.
இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.9 ஆக பதிவானது.
இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது. இதனையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்ட நாடுகள்: இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலைதீவுகள், சிங்கப்பூர், மலேசியா, ஓமன், ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா என மொத்தம் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்: நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் கட்டிடங்கள் அனைத்தும் நடுக்கம் கண்டது. இதையடுத்து மக்கள் ஓட்டம் பிடித்து வீதியில் வந்து குவிந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம், பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர் முனாஃப் படேலுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெக்கான் சார்ஜர்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முனாஃப் படேலின் ஓவரில் டெக்கான் அணித்தலைவர் சங்ககாரா போல்டானார். ஸ்டெம்பை லேசாக உரசிச் சென்ற பந்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் பேடில் பட்டு மீண்டும் ஸ்டெம்பை தகர்த்தது.
அதை சரியாகக் கவனிக்காத நடுவர்கள், பேடில் பட்டு தான் பந்து ஸ்டெம்பை தகர்த்தது என்று கூறி அவுட் கொடுக்க மறுத்தனர். இதனால் ஹர்பஜனும், முனாஃபும் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் மூன்றாவது நடுவரிடம் முறையிடவே தீர்ப்பு மும்பைக்கு சாதகமானது. இருப்பினும் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக முனாஃபுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அணித்தலைவர் ஹர்பஜன் சிங் எச்சரிக்கப்பட்டார்
அதே போன்று இந்த ஆட்டத்தின்போது மும்பை வீரர் சுமன் ஆட்டமிழந்த போது, டெக்கான் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், மும்பை வீரர்களின் ஓய்வறையை நோக்கி சைகை காண்பித்து கிண்டல் செய்தார். இதையடுத்து அவரும் எச்சரிக்கப்பட்டார்.
இலங்கையின் கரையோரப்பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள அதேவேளை, கரையோரப்பகுதிகளுக்கான ரயில் சேவையும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கரையோர பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகளும் 3 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட புவி அதிர்வு அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களை தெளிவுபடுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டி சில்வா தெரிவிக்கிறார்.
சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது குறி்த்து உத்தியோகப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இது தவிர ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒத்திகைகளின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.
புவி அதிர்வினால் கட்டடங்கள் சில அதிர்வுக்குள்ளானதுடன் அதிர்வு ஏற்பட்டு அன்னளவாக இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடல் சீற்றம் ஏற்படாத பட்சத்தில் திருகோணமலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலும் சுனாமி எச்சிரி்க்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நயினாதீவு உள்ளிட்ட தீவுகளை அண்மித்த கடல் மார்க்க பயணங்களை தவிர்க்குமாறு யாழ். மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.
நாட்டின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை வேளையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கான. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.
பௌத்த பிக்கு ஒருவர் படையினரின் ஆதரவுடன் காணி உரிமையாளரை அச்சுறுத்தி வருவதோடு அப் பகுதியில் விகாரை கட்டுவதற்கும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் முல்லைத்தீவு கொக்கிளாயில் உள்ள தனியார் காணியே இவ் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து அந்த இடத்தில் தனக்கான இருப்பிடம் ஒன்றை அமைத்து விட்டார். இந் நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அங்குவந்த காணியின் உரிமையாளர் காணியை விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றார்.
இவ்வாறு மீள்குடியேறிவர் தனது காணியை விடுமாறு பிக்குவிடன் கேட்க, படையினரின் உதவியுடன் அக் காணி உரிமையாளரை அச்சுறுத்தியுள்ளார் பிக்கு.
இருந்தும் சிறிது காலம் சில காலம் வெளியூர் சென்றிருந்த பிக்கு மீண்டும் வந்திருக்கின்றார்.
தற்போதும் நிலத்தை வழங்க முடியாதென கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணியின் உரிமையாளருக்கு படையினரின் ஆதரவுடன் கடுமையான அச்சுறுத்தலை விடுத்திருக்கின்றார்.
மேலும் அந்தக் காணியில் விகாரையொன்றைக் கட்டப்போவதாகவும் பிக்
பொதுவாக உல்லாக பிரயாணிகளை மிகவும் கவரும் இடம் கடற்கரை என்றே சொல்லாம்.அந்தவகையில் கரீபியன் கடற்கரையோரத்தில் ஒன்று திரண்டிருந்தனர் ஒரு தொகுதி உல்லாச பயணிகள்.
வழமையாக இக்கடற்கரையில் நீராடும் பெண்கள் தமது தலைமுடியை உலர்ந்துவதற்காக அங்கு வீசும் காற்றினை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரீபியன் கடற்கரையோரத்தில் சர்வதேச விமான நலையம் ஒன்று அமைந்துள்ளது.
அங்கு ஒரு ஜெட் விமானம் புறப்படுவதற்கு தயாராகின்றது. இதனை வேடிக்கை பார்க்க பல உல்லாச பயணிகள் ஆர்வத்துடன் ஓட்டம் எடுக்கின்றனர். அதில் ஒரு பெண் தனது தலைமுடியை உலர வைக்கும் நோக்கில் ஜெட் விமானத்தில் இருந்து வரும் அதிவேக காற்றினை எதிர் கொள்கின்றாள்.
என்ன நடக்கிறது என்பதை காணொளியில் பாருங்கள்... இப்படியான ஆபத்தான ஆசைகள் தேவைதானா? கொஞ்சம் யோசித்து செயற்படுங்கள்....
ஜுனியர் என்.டி.ஆர், த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள தெலுங்கு திரைப்படம் 'தம்மு'. இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கள் தற்போது நிறைவடைந்துள்ளன.
தம்முவின் இறுதி நாள் படப்பிடிப்பை அடுத்து அத்திரைப்படத்தின் இயக்குனர் காலில் விழுந்து கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டாராம் நடிகை த்ரிஷா.
எதற்காக இவர் கண்ணீருடன் ஆசி பெற்றுக்கொண்டார் என்று பார்க்கிறீர்களா? 'இனி திரைப்படம் நடிக்கப்போவதில்லை.
இன்றுடன் விடைபெறுகிறேன்' என்று கூறிவிட்டு கண்ணீருடனேயே அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார் த்ரிஷா... என்று தெலுங்கு தேச ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக எங்கு பார்த்தாலும் த்ரிஷா அழுதார்... கண்ணீர் விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக்கொண்டுள்ளன.
த்ரிஷாவும் அவர் அம்மாவும் போடும் கல்யாண நாடகத்தினால் வந்த கண்ணீரோ என்று அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் த்ரிஷா ரசிகர்களை கதிகளங்க வைத்துள்ளது.
த்ரிஷா தற்போது தமிழில் 'சமரன்' திரைப்படத்தில் மட்டும்தான் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கில் தான் நடித்துக்கொண்டிருந்த தம்மு திரைப்படத்தை அடுத்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சமரனுக்கு பிறகும் இவ்வாறான அறிவிப்பு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
திங்கள், 9 ஏப்ரல், 2012
தெலுங்கு பட உலகில் நாயகி நயன்தாரா, சீதையாக நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.
வருகிற ஏப்ரல் 13ம் திகதியில், தமிழ் புத்தாண்டில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படம் திரைக்கு வரும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் பெப்சி தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இப்படத்தின் டப்பிங் வேலைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் தமிழ் புத்தாண்டு அன்று இப்படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழுவினர் மாற்றி அமைத்துள்ளார்கள்.
இதையடுத்து ஏப்ரல் 20ம் திகதியில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தை திரையிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான வேலைகளில் இப்படத்தின் தயாரிப்பாளர் கிரண் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தில் ராமராக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டுகளை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.
எனவே இளைஞர்கள் அவற்றை வாங்கி புகைப்பதால், புற்றுநோய், காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.
இதை தடுக்க கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ள போதிலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமானப் பயணங்கள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருந் தொகை பயணிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பிரபலமாக இருந்தன. ஜக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் அந்தக் காலத்தில் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் அதியுயர் மேம்பாடு அடைந்திருந்தன.
வைற் ஸ்ரார் லைன் (White Star Line) என்ற ஜக்கிய இராச்சியத்தின் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் கப்பல் நிறுவனம் டைட்டானிக் கப்பலுக்கு உரிமையாளராக இருந்தது. எதுவிதத்திலும் மூழ்காது என்ற உத்தரவாதத்துடன் இந்தக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குத் தொடங்கியது.
நான்கு புகை போக்கிகளைக் கொண்ட இந்தக் பிரமாண்டமான கப்பலில், கப்பல் விபத்திற்கு உட்பட்டால் “ உயிர்காக்கும் படகுகள்” (Lifeboats) மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொண்டு செல்லப்பட்டன.
இதற்கு மேற்கூறிய உத்தரவாதமும் அதிக எண்ணிக்கையில் இந்தப் படகுகளை ஏற்றிச் சென்றால் பயணிகளின் நம்பிக்கை கெட்டு விடும் அத்தோடு கப்பலின் அழகும் பாதிக்கப்பட்டு விடும் என்று காரணம் சொல்லப்படுகிறது.
கப்பல் நிறவனத்தின் உத்தரவாதத்தை மீறிய டைட்டானிக் (Titanic) என்ற பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தில் அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப் பாறையுடன் (Iceberg) மோதி 1912 ஏப்ரல் 14ம் நாள் இரு பாகங்களாக உடைந்து மூழ்கியது.
இந்த விபத்தில் 1,517 பேர் உயிரிழந்தனர். உயிர் காக்கும் படகுகள் கூடிய எண்ணிக்கையில் இருந்திருந்தால் இதில் 1,500 உயிர்களாவது காப்பாற்றப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தக் கப்பலில் அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் தொடக்கம் ஜரோப்பாவின் புதிய வாழ்க்கையைத் தேடும் கிராமப் புற மக்களும் பயணித்தனர்.
மேல் தட்டு முதலாம் வகுப்பில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டு வங்கிகளின் சொந்தக்காரர்கள், பரம்பரைச் செல்வந்தர்கள் உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்.
மலிவுப் பயணம் செய்தோர் வசதிகள் குறைந்த கப்பலின் அடிப்பாகத்தில் பயணித்தனர். ஜரோப்பிய மதக் கலவரங்கள், வேலை நிறுத்தம் செய்ததற்காகத் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள், நிலங்களை இழந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்குச் சென்றனர்.
லெபனோன், சீரியா (Lebanon, Syria) போன்ற மத்திய கிழக்கு நாட்டவர்களும் குடும்பங்களோடு இடம்பெயர்ந்து சென்றனர். பெல்ஜியம், பின்லாந்து, சுவீடன், டென்மார்க், குரோசியா, ஜேர்மனி போன்ற நாட்டவர்களும் புதிய வாழ்வைத் தேடிச் சென்றனர்.
பெருமளவு உயிரிழப்பிற்கு உயிர் காக்கும் படகுகளின் தட்டுபாடு மாத்திரமல்ல டைட்டானிக் கப்பலின் வானொலி இயங்காமல் இருந்ததும் காரணமாக இருக்கிறது. வானொலி நல்ல நிலையில் இருந்திருப்பின் பிற கப்பல்களை உதவிக்கு அழைத்திருக்க முடியும்.
அந்த இரவில் மிதக்கும் பனிப் பாறைகள் பற்றிய எச்சரிக்கையை அத்திலாந்திக் கடலில் சென்ற பிற கப்பல்கள் டைட்டானிக் கப்பல்களுக்கு அனுப்பின ஆனால் வானொலி முடங்கிக் கிடந்ததால் எச்சரிக்கைகள் வீணாகின.
பிரமாண்டமான டைட்டானிக் கப்பலில் இன்னொரு தொழில் நுட்பக் கோளாறு இருந்தது. கப்பலைத் திசை திருப்ப உதவும் சுக்கானுக்கும் (Rudder) சுக்கானைத் திருப்பும் பிடிக்கும் (Tiller) இடையிலான தொடர்பில் 37 நொடி (37 Seconds) நேர வித்தியாசம் இருந்தது.
இதனால் இறுதி நேரத்தில் பனிப் பாறையுடன் மோதுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. டைட்டானிக் விபத்திலிருந்து படிக்க வேண்டிய முக்கிய பாடங்கள் இருக்கின்றன நவீன தொழில் நுட்பத்தால் இயற்கையை மோதி வெல்ல முடியாது. எங்கோ ஒரு இடத்தில் மனிதத் தவறு வீழ்ச்சியை ஏற்படுத்தும்.
இரு துண்டுகளாக உடைந்த கப்பல் இரண்டு மணிக்கும் சற்றுக் கூடிய நேரத்தில் அத்திலாந்திக் கடலின் 12,600 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இன்றும் அது அங்கேயே கிடக்கிறது. இந்த விபத்து பற்றி ஆய்வு நூல்கள், மேடை நாடகங்கள், திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
கப்பல் மூழ்கிய 29 நாட்களில் ஒரு பத்து நிமிடப் படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் பிரதம பாகத்தில் நடித்தவர் 22 வயது நடிகை டொறித்தி கிப்சன் ( Dorothy Gibson) இவர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து காப்பாற்றப்பட்டவர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது “முதலாவதாகப் பெண்களும் சிறுவர்களும்” (Women and Children) என்ற விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் காக்கும் படகுகளில் இவர்கள் தான் முதலில் ஏற்றப்பட்டனர். ஆனால் மலிவுப் பயணம் செய்த பல பெண்களும் சிறுவர்களும் காப்பாற்றப் படவில்லை.
சில ஆண்கள் பெண்களையும் சிறுவர்களையும் முந்திக் கொண்டு படகுகளில் ஏறித் தப்பிச் சென்றனர். சில உயர் குடிப் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களைப் பிரிய மறுத்து அவர்களோடு கடலில் மூழ்கினர். பலவிதமான மனித இயல்புகள் அந்த நள்ளிரவில் வெளிப்பட்டன.
டைட்டானிக் மூழ்கிச் சரியாக ஒரு நூற்றாண்டாகிறது. அத்திலாந்திக் கடலில் மிதக்கும் பனிப்பாறை ஆபத்தைப் போக்கும் தொழில் நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அவை ஒரே இடத்தில் நிற்காமல் மிதக்கின்றன அவற்றின் பெரும் பகுதி நீர் மட்டத்திற்குக் கீழே இருக்கின்றன.
பனிப்பறைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு வர்ணம் பூசப்படுகின்றன. அவற்றின் மீது குண்டு வீசித் தகர்க்கப் பட்டுள்ளன. றாடர் திரை மூலமாகவும் செய்மதி மூலமாகவும் பனிப் பாறைகள் அவதானிக்கப் படுகின்றன.
ஆனால் வருடமொன்றுக்குச் சராசரி இரண்டு மோதல்கள் நடக்கின்றன. பெப்ரவரி – யூலை மாதங்களில் ஆபத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. ஜனவரி 1959ல் 95 பயணிகளோடு ஒரு கப்பல் மூழ்கியது. ஆனால் அந்தப் பக்கத்தில் சென்ற இன்னொரு கப்பல் அவர்களைக் காப்பாற்றியது.
மூழ்கடிக்க முடியாத கப்பல் இன்னும் கட்டப்படவில்லை. வீழ்ந்து நொருங்காத விமானம் இன்னும் உருவாக்கப் படவில்லை. வெடித்துச் சிதறாத அணு உலை இன்னும் நிறுவப்படவில்லை. பனிப் பாறை ஆபத்தும் இன்னும் நீங்கவில்லை
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் டொனால்டு டிரம்ப்ஸ் என்ற அமைப்பின் சார்பில் உலக அழகிப் போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு நாடுகளில் அழகிப்பட்டம் வென்றவர்கள், இந்த போட்டியில் பங்கேற்பார்கள். அதன்படி, கனடா நாட்டின் அழகி போட்டியில் ஜென்னா தலக்கோவா என்ற 23 வயது மாடல் அழகி பங்கேற்றார்.
இறுதி சுற்று வரை தகுதி பெற்ற அவருக்கு போட்டியில் தொடர்ந்து நீடிக்கத்தடை விதிக்கப்பட்டது. காரணம், ஜென்னா ஆணாக இருந்து பெண்ணாக மாறிவர் என்பதுதான்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒருவர் இயற்கையிலேயே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது ஜென்னா உண்மையிலேயே ஒரு பெண்தான் என்றாலும் விதியின்படி அவரை போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த முடிவை எதிர்த்து மாடல் அழகி ஜென்னா போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து கனடா அழகி போட்டியில் பங்கேற்க ஜென்னாவுக்கு போட்டியை நடத்தும் அமைப்பு அனுமதி வழங்கி இருக்கிறது.
ஜென்னாவுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டபோது பேட்டி அளித்த கனடா அழகி போட்டி அமைப்பாளரான டெனிஸ் தவிலா, ஜென்னா உண்மையான பெண்ணைப்போல் இருக்கிறார்.
அவர், உண்மையான பெண்தான். ஆனால், விதிகளின்படி (பிறக்கும்போதே பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும்) அவரை அனுமதிக்க முடியாது என்று கூறி இருந்தார்.
அதற்கு விளக்கம் அளித்த ஜென்னா, 4 வயது வரை பெண்ணாகவே இருந்ததாகவும், அதன் பின்பு ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக மாறி, பின்பு 19-வது வயதில் அறுவை சிகிச்சை மூலம் முழுமையான பெண்ணாக மாறிவிட்டதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புவியீர்ப்பு விசை காரணமாக எப்பொழுதும் பொருட்கள் கீழ்நோக்கியே விழும். அவ்வாறில்லாமல் அந்தரத்தில் இருக்கவேண்டுமாயின் புவியீர்ப்பு விசைக்கு சமானன விசை எதிர்த்திசையில் வழங்கப்படவேண்டும்.
இவை விஞ்ஞானத்தின் மூலம் சாத்தியப்படக்கூடியவையாகும். அதே போல இங்கும் போத்தலினுள் உள்ள நீரை கீழே சிந்தாதவாறு தமது விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி நிறுத்துகின்றார்கள். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துங்கள்.
ய உற்பத்தியில் புதிதாக தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் HTC கைப்பேசி உற்பத்தி நிறுவனமானது தனது புதிய கைப்பேசியான HTC குடும்பத்தைச் சேர்ந்த One Vஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த கைப்பேசிகள் 3.7 அங்குல அளவுடைய WVGA தொடுதிரை வசதிகொண்டவை. மேலும் இத்தொடுதிரையானது 480 x 800 pixels அளவில் உருவங்களை தெளிவாக காட்சிப்படுத்தக்கூடியன.
இதன் புரோசசர் ஆனது 1GHz வேகத்தைக் கொண்ட தனியான புரோசசர் ஆகும். தவிர 5 மெகா பிக்சல் கமெரா உடன் கூடியதும் 720 பிக்சல்கள் அளவில் வீடியோப்பதிவு செய்யக்கூடியதுமான வசதி காணப்படுகின்றன. இதன் நினைவகமானது 4GB ஆக காணப்படுகின்ற போதிலும் 32GB வரை அதிகரிக்க முடியும்
இன்றைய காலகட்டத்தில் உயிரணு தானம் மூலம் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர். கடந்த 1940ம் ஆண்டில் இருந்தே இந்த முறை வழக்கத்தில் இருந்துள்ளது.
இவ்வாறு குழந்தை பெறுபவர்கள் மற்றும் உயிரணு தானம் வழங்கியவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானி ஒருவருக்கு உயிரணு தானம் மூலம் 600 குழந்தைகள் பிறந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரது பெயர் பெர்டோல்டு வியஸ்னர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் லண்டனில் சொந்தமாக கருத்தரித்தல் மைய மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். இந்த மையத்தில் உயிரணு தானம் வழங்கியதன் மூலம் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றுள் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விஞ்ஞானி வியஸ்னர் உயிரணுவின் மூலம் பிறந்தவை என தெரியவந்துள்ளது.
இவர்களில் இரட்டையர்களும் அடங்குவர். கனடாவை சேர்ந்த டாக்குமெண்டரி சினிமா தயாரிப்பாளர் பார்ரி ஸ்டீவன், லண்டன் வக்கீல் டேவிட் கோலன்ஸ் இது குறித்து ஆய்வு நடத்தி இந்த ரகசியத்தை கண்டுபிடித்தனர்.
விஞ்ஞானி வியஸ்னர் ஆண்டுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார். கடந்த 1940ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு வரை அதாவது 20 ஆண்டுகள் தானம் செய்து இருக்கிறார். இவர் தற்போது உயிருடன் இல்லை, கடந்த 1972-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவரின் உயிரணு தானம் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன. அதுவே உலக அளவில் அதிக அளவாக கருதப்பட்டது. அந்த சாதனையை விஞ்ஞானி வியஸ்னர் முறியடித்துள்ளார்.
மேலும் இதே கருத்தரித்தல் மையத்தில் இவருக்கு அடுத்த படியாக மற்றொருவர் அதிகம் பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
அவுஸ்திரேலியாவில் வாழக்கூடியதான கங்காருக்கள் இனப்பெருக்கத்தில் ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபட்டது என்பது யாவரும் அறிந்ததே.
இவை பார்ப்பதற்கு வினோதமாக காணப்படுவதுடன் ஒரே பாய்ச்சலில் அதிகளவு தூரத்தை கடக்கவல்லன.
இவ்வாறு மனிதனும் கடந்தால் எப்படி இருக்கும்? அந்த கற்பனையை நனவாக்கும் முகமாக காலில் அணியக்கூடிய உபகரணம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 166 யூரோ கொடுத்து அந்த உபகரணத்தை வாங்கினால் நீங்களும் பாயலாம் காங்காருவைப்போல்.
மருதனார்மடத்தில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மானிப்பாய் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மாருதனாமடத்தில் இருந்து வாழைக்குலை கட்டிவந்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதனாலேயே இச் சம்பவம் நடைபெற்றது
கடத்திச் செல்லப்பட்டுள்ள முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் வேறு பெயரில் இலங்கைக்கு சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
நொவேல் முதலிகே என்ற பெயரில் செய்யப்பட்டிருந்த கடவூச்சீட்டில் அவர் இலங்கை சென்றிருந்ததாக அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் குணரட்னம் சம்பா சோமரத்ன என்ற தனது மனைவியை வேறு பெயரிலேயே மணமுடித்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.
யாழில் ஆசிரியை ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பாக அவதூறு பரப்பும் செயற்பாட்டை முன்னெடுத்த குற்றச்சாட்டில் யாழ். கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக மாணவர்கள் அதிபரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை தனது கற்றல் செயற்பாட்டைக் கடந்து மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணவர்களை இழிவுபடுத்துவதாகவும் அவரை உடனடியாக வெளியேற்றுமாறும் அதிபரிடம் மாணவர்கள் கோரியிருந்தனர்.
ஆனால் மாணவர்களின் கோரிக்கையை அதிபர் நிராகரித்துள்ளார். இதனிடையே, குறித்த ஆசிரியைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை அவரின் வீடு உட்பட ஏனைய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இருவரின் தூண்டுதலின் பேரில், குறிப்பிட்ட மாணவர்களே இந்தத் துண்டுப் பிரசுரங்களை ஒட்டியதாகக் கூறி கடிதம் தரும்படி கேட்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கையில் பலத்த காயத்திற்கு உள்ளான நிலையில் ஒரு மாணவன் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அதிபர் மற்றும் கல்லூரியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்கள் 14 பேரும் கையொப்பமிட்டு குறித்த ஏழு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலேசியா நோக்கிப் பயணித்த மிகின்லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தடையிறக்கப்பட்டடுள்ளது.
குறித்த விமானத்தின் பொருட்கள் எடுத்துச் செல்லும் பதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாகவே விமானம் தடையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்
ஆசிரியரின்
திறமை
ஞானவைரவர்
தேர்
Venaam Machan
சுங்காத்தா
Yarukkaga Ithu
Yarukkaga
T.2006
மறுநாள்
தேவதையே
தேவதையே
காரணம்
இடி விழுந்த
தேசத்தில்
கலாச்சாரம்
சுதந்திர தாகம்
காதல் புயலே
பள்ளிக் காலம்
புத்தரின்
பெயரால்
லவ் ஆன்த்தம்
ஆசுவாசம்
காதலின் வலி
காதல் கதை
பெண்ணே உன்
காதல் சொல்ல
தொடரும்
மயக்கம்
இடைவேளி
காதல் மொழி
சின்ன கண்ணன்
சிரிக்கின்றான்
அடி பெண்ணே
உனக்கு
என்னாச்சு
வயசே
மழை நேரம்
கொஞ்சம்
வெட்கம்
பொய்
சொல்லாதே
இரு விழி
பூபாலம்
வாழ்வில்
பாடும்
என்னசொல்ல
போற
நீயும் நானும்
நான்
சொன்னதும்
மழைவந்துச்சா
கண்ணீரில்
வாழும்
பெண்ணை
என்னை
திரும்பி பாரடி
எங்கையோ
என்னவோ
தொலைத்தேன்
அஸ்கு லக்கா
என்அம்மாஎன்
உலகம்நீயம்மா ...
பட்டாசு
மௌனமே
மௌனமே
போ நீ போ
மறுநாள்
சாரதி