//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

யாழ்ப்பாணத்திலும் சுனாமி எச்சரிக்கை



இந்தோனேஷியாவில் ஏற்பட்ட புவி அதிர்வு அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களை தெளிவுபடுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர்.டி சில்வா தெரிவிக்கிறார்.

சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது குறி்த்து உத்தியோகப்பூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இது தவிர ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ஒத்திகைகளின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

புவி அதிர்வினால் கட்டடங்கள் சில அதிர்வுக்குள்ளானதுடன் அதிர்வு ஏற்பட்டு அன்னளவாக இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடல் சீற்றம் ஏற்படாத பட்சத்தில் திருகோணமலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் சுனாமி எச்சிரி்க்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  நயினாதீவு உள்ளிட்ட தீவுகளை அண்மித்த கடல் மார்க்க பயணங்களை தவிர்க்குமாறு யாழ். மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.

நாட்டின் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை வேளையில் மின்சாரத்தை துண்டிப்பதற்கான. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக