//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

சங்ககாராவினால் முனாஃப் படேலுக்கு அபராதம்



நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை வீரர் முனாஃப் படேலுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
டெக்கான் சார்ஜர்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முனாஃப் படேலின் ஓவரில் டெக்கான் அணித்தலைவர் சங்ககாரா போல்டானார். ஸ்டெம்பை லேசாக உரசிச் சென்ற பந்து விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் பேடில் பட்டு மீண்டும் ஸ்டெம்பை தகர்த்தது.
அதை சரியாகக் கவனிக்காத நடுவர்கள், பேடில் பட்டு தான் பந்து ஸ்டெம்பை தகர்த்தது என்று கூறி அவுட் கொடுக்க மறுத்தனர். இதனால் ஹர்பஜனும், முனாஃபும் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் மூன்றாவது நடுவரிடம் முறையிடவே தீர்ப்பு மும்பைக்கு சாதகமானது. இருப்பினும் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக முனாஃபுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அணித்தலைவர் ஹர்பஜன் சிங் எச்சரிக்கப்பட்டார்
அதே போன்று இந்த ஆட்டத்தின்போது மும்பை வீரர் சுமன் ஆட்டமிழந்த போது, டெக்கான் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், மும்பை வீரர்களின் ஓய்வறையை நோக்கி சைகை காண்பித்து கிண்டல் செய்தார். இதையடுத்து அவரும் எச்சரிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக