//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

மட்டக்களப்பில் மக்கள் ஓட்டம்




சுனாமி எச்சரிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்துக்கும் உட்பட்ட பகுதி மக்கள் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படை மற்றும் பொலிஸார் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதில் ஈடுபட்டுவருகின்றனர். 

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். 

இதேபோன்று கடற்கரை அண்டிய பகுதிகளில் கடலினை பார்ப்பதற்காக செல்வோரை பொலிஸார் தடுத்துவருகின்றனர். கடந்த சுனாமி வேளையிலும் கடற்கரையை பார்வையிட சென்றோரே அதிகமாக உயிரிழந்ததையும் பொலிஸார் நினைவுபடுத்தி வருகின்றனர். 

அத்துடன் மட்டக்களப்பு கல்லடி,நாவலடி பிரதேசத்தில் உள்ள மக்களை ஆற்றின் ஊடாக இயந்திர படகுககள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக