//]]>3

புதன், 11 ஏப்ரல், 2012

கபடிப் விளையாடிய அஞ்சலி




ஈரோட்டில் நடந்த மாநில அளவிளான பெண்கள் கபடிப் போட்டியை நடிகை அஞ்சலி தொடங்கி வைத்து கபடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பெண்கள், கபடி அணியினர் அஞ்சலியை பார்த்ததும் மேலும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார்கள்.

.பைரவா கிரியேஷன்ஸ் மற்றும் ஜெயம் விஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கபடிப்போட்டி சுவையான ரியாலிடி ஷோவாக வாரம் இருமுறை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

போட்டியில் சிலர் அஞ்சலியின் கையை பிடித்து கபடி ஆட அழைத்ததும் சற்றே பயந்த படி களத்தில் இறங்கினார் அஞ்சலி. ஆனால் அவரை பிடிக்கவோ தொடவோ எந்த வீராங்கனையும் முன்வரவில்லை. அவர்களின் ஒரே சந்தோஷம் அவ்வளவு பெரிய நடிகை நம்முடன் விளையாட சம்மதித்து கிரவுண்டில் இறங்கினாரே என்பது மட்டும் தான்.

இங்கும் அங்கும் "கபடி கபடி" என்று பாடியபடியே நாலுமுறை நடப்பதற்குள் மூச்சு வாங்கிய அஞ்சலி, ஆளை விடுங்க பொண்ணுங்களா என்ற படி ஓடிப்போய் அமர்ந்து கொண்டார்.

ஆனால் விளையாட்டில் ரொம்பவே ஆர்வம் காட்டிய அஞ்சலி, ஒரு நாள் முழுக்க கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் அமர்ந்திருந்தது ஆச்சர்யம். ஒவ்வொரு கபடி வீராங்கனையையும் தனித்தனியாக அவர் உற்சாகப்படுத்தியதோடு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் கடுகடுன்னு இருந்தீங்க. ஆனால் நேரில் பார்க்கும்போது மலர்ச்சியா இருக்கீங்க. இனிமே அது மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்காதீங்க என்று ஒரு கபடி வீராங்கணை கூறினார்.

இன்னொரு பெண்ணோ எல்லா படத்திலேயும் பாவாடை தாவணி, சுடிதார்னு ஒரே மாதிரியான ஆடையில் வருகிறீர்கள்.

கொஞ்சம் கவர்ச்சியாகவும், புது மாதிரியாகவும் ஆடை அணியலாமே என்றார். இதற்கு பதிலளித்த அஞ்சலி, கதைப்படி எனக்கு என்ன கதாப்பாத்திரமோ, அது மாதிரி தான் என்னோட ஆடையும் இருக்கும். இதையெல்லாம் நான் முடிவு பண்ணுவதில்லை. என் இயக்குனர் தான் முடிவு பண்ணுவார் என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக