//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

Lumia 900 கைப்பேசிகள்


நொக்கியா கோப்பரேசனின் புதிய அறிமுகமாக Nokia Lumia 900 கைப்பேசிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஸ்மார்ட் கைப்பேசிகளின் வடிவமைப்பை ஒத்ததாக உருவாக்கப்பட்டுள்ளன.


4.3 அங்குல தொடுதிரையையும், 8 மெகாபிக்சல் கமெராவையும் கொண்டுள்ளன. மேலும் இந்த காமெரா மூலம் 720பிக்சல் முதல் 1080பிக்சல் வரையான மாறுபட்ட பிரிதிறன் கொண்ட வீடியோப்பதிவை மேற்கொள்ள முடியும்.
எனினும் இந்த போன்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அழைப்புக்கள் ஏனைவற்றுடன் ஒப்பிடும்போது சற்று தரம் குறைந்ததாக காணப்படுகின்றதுடன், அதன் அமைப்பு இலகுவான பாவனைக்கு உகந்ததாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போனின் பெறுமதி 100 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

நகரில் இரவு புலி

ஜேர்மனி நாட்டில் உள்ள பார்யுன்சிவிக் நகரில் இரவு நேரத்தில் சாலை வழியாக ஒரு இளம்பெண் நடந்து சென்றார். தற்செயலாக அவர் திரும்பி பார்த்த போது நடைபாதையில் புலி ஒன்று நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


உடனே அவசர பொலிசிற்கு தொடர்பு கொண்டு, வீதியில் புலி ஒன்று சுற்றித்திரிகிறது என்று கூறினார். இதனையடுத்து பொலிஸ் படை துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வனவிலங்கு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

விமானத்தை தரையிறக்கிய மனைவி


அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின் நகருக்கு அருகில் மனைவியுடன் சிறு விமானத்தில் சென்ற பைலட் கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார்.


அதுவரை விமானத்தை ஓட்டியே பழக்கம் இல்லாத மனைவி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்து அவர்களுடைய உதவியுடன் விமானத்தைப் பத்திரமாக தரை இறக்கினார். ஆனால் அதற்குள் கணவர் இறந்துவிட்டார்.
கணவருக்கு வயது 81, மனைவிக்கு வயது 80. இருவருடைய பெயர்களையும் இதர விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
செஸ்னா ரக விமானத்தைக் கணவன் ஓட்டினார். திடீர் மாரடைப்பால் அவர் அப்படியே இருக்கையில் மயங்கிச் சாய்ந்தார்.
மனைவி உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்தார். அவர்கள் பயிற்சி பெற்ற விமானி ஒருவரை விமானத்தில் அனுப்பினர். அவர் இந்த விமானத்துடன் பறந்து வெளியில் இருந்தபடியே விமானத்தை இயக்க அவருக்குக் கற்றுத்தந்தார்.
விமானத்தின் வலதுபுற இன்ஜினில் எரிபொருள் தீர்ந்துவிட்டது. விமான நிலையத்தை 10 முறை வட்டமடித்த பிறகு தரை இறக்கினார் அந்தப் பெண்.
2 அல்லது 3 முறை குலுங்கிய விமானம் மூக்கு மண்ணில் புதைய நின்றது. ஆனால் அதற்குள் அவருடைய கணவர் இறந்து விட்டார். அந்தப் பெண்ணின் உறுதியையும் பொறுமையையும் அனைவரும் பாராட்டினர்.

சச்சின் டெண்டுல்கரின் பெயர் விருதுக்கு பரிந்துரை


இந்தியாவின் மிக உயரிய கெளரவமாக கருதப்படும் பாரத ரத்னா விருதுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் சட்டப்பேரவையில் இதை அறிவித்தார்.




உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பின்பு, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை கெளரவித்தோம். அப்போதே மண்ணின் மைந்தனான சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது என சவாண் தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் யஷ்வந்தராவுக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு பரிந்துரை செய்துள்ளது.

பாம்பால் தரையிறங்கிய விமானம்

அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பாம்பு நுழைந்ததால் பயந்த விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.பிராடன் பீலீனர்ஹாசத் என்ற விமானி விமானத்தை இயக்கி உள்ளார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால் பயந்த விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.

நானும் ஒரு பெண் தான்


நானும் ஒரு பெண் தான், எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கூறியுள்ளார்.
அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார்.
ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க முடியாது என்று போட்டியை நடத்தும் டொனால்ட் டிரம்ப் அமைப்பு கூறி விட்டது.
அவர் ஆணாக இருந்து அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவர். இயற்கையான பெண் இல்லை, எனவே அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் கூறி விட்டது.
இதனால் கோபமடைந்த ஜென்னா இதுகுறித்து கூறுகையில், எனது  கடவுச்சீட்டைப் பாருங்கள். என்ன போட்டுள்ளது, பெண் என்றுதானே போட்டிருக்கிறார்கள். பிறகு எப்படி நான் ஆணாக முடியும்.
என்னை தொடர்ந்து போட்டியில் அனுமதிக்க முடியுமா, முடியாதா என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும். இதில் நான் வெற்றி பெற்றால் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும் என்றார்.
வான்கூவரைச் சேர்ந்த 23 வயதான ஜென்னா, 19 வயதாக இருக்கும்போது பாலின அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் ஆவார். ஆனால் தான் ஒரு பெண்ணாக பல பிரச்சினைகளை இந்த சமுதாயத்தில் அனுபவித்து விட்டதாக வேதனையுடன் கூறினார்.
ஜென்னாவின் வ்ககீல் குளோரியா அல்லர்ட் கூறுகையில், ஜென்னா ஒரு அற்புதமான, அழகான பெண். அவரை போட்டியில் தொடர்ந்து பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
அவரது பாலினம் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி இருக்கையில் எப்படி டிரம்ப் இப்படி நடந்து கொள்ளலாம்?
ஜென்னாவை போட்டியில் பங்கேற்க அனுமதிப்பதோடு, இயற்கையாகவே பெண்ணாக பிறந்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையையும் கூட டிரம்ப் நீக்க வேண்டும் என்றார்.

24 மணிநேரமும் இணையத்தள கண்காணிப்பு


துபாய் நாட்டில் 24 மணிநேரமும் இளைய சமுதாயம் பயன்படுத்தும் பேஸ்புக், டுவிட்டர் இணையத்தளங்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.



உலகம் முழுவதும் பல நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துகளை லட்சக்கணக்கான மக்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையத்தளங்கள் வழியாக பரிமாறிக் கொள்கின்றனர்.

இதனால் எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் புரட்சி வெடித்தது. சீனாவிலும் இதுபோன்ற விமர்சனங்கள் இணையத்தளங்கில் பரவலாக வெளியானதால், பல இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தளங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் துபாய் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துபாய் சைபர் கிரைம் துணை இயக்குனர் சலீம் ஒபய்த் சல்மீன் கூறுகையில், சமூக இணையத்தளங்களில் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கவர்ச்சி காட்ட துவங்கியுள்ள ஸ்ரேயா!


புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் பழைய நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது. 

இதனால் புதுமுக நடிகைகளுக்கு இணையாக ஈடுகொடுக்க கடுமையாக போராடி வருகிறார்கள். 

சிலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். 

இந்நிலையில் பீல்டு அவுட்டான நடிகைகளின் பட்டியலில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் விலைமாது கேரக்டர். விலைமாதுவாக நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயாக கூறியுள்ளதாவது, படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார். 

6000 பேர் மீள்குடியேற்றம் முல்லைத்தீவில்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்படாதிருந்த 6000 பேர் எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்..எஸ்.சால்ஸ் தெரிவித்துள்ளார். 


கண்ணிவெடி அகற்றும் பணியில் ஏற்பட்ட தாமதமே மீள்குடியேற்றம் செய்யப்படாமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 



சர்வதே கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். 



வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 12 குழுக்கள் இடம்பெற்று வருவதாகவும் கண்ணிவெடியில் அகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டே அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இலங்கை அகதிக்கு மில்லியன் டொலர் நஷ்டஈடு!


பாலியல் குற்றவாளியாக காணப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய அரசு மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கவுள்ளது. 

சட்டத்துக்கு புறம்பான வகையில் குடிவரவு தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார் என்பதற்காகவே இவருக்கு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. 

இவரின் பெயர் பெர்னாண்டோ. வயது 50. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வந்தவர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய 1203 நாட்கள் குடிவரவு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். 

இவரின் தரப்பு நியாயத்தை நீதிமன்றம் செவிமடுக்க தவறி இருந்தது. 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாட்களில் இச்சிறை வைப்பு இடம்பெற்று இருந்தது. 

வெளியில் வந்த இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் சிறை வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இவர் சட்டத்துக்கு புறம்பாகவும், தவறாகவும் தடுத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒரு நாள் சிறை வாழ்க்கைக்கு 3000 டொலர் என்கிற கணக்குப்படி இவருக்கு அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

இந்து-சிங்களம், இந்து-இஸ்லாம் காதல் ஜோடிகளுக்கு மெகசின் சிறையில் இன்று திருமணம்! (படங்கள்)


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒருவர் உள்ளிட்ட இருவர் இன்று (05) திருணம பந்தத்தில் இணைந்து கொண்டனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 35 வருடகால சிறை தண்டனை பெற்றுள்ள வவுனியா பாவற்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் இளங்கேஸ்வரன் (34 வயது), வவுனியா நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேன சுதர்ஷினி (32 வயது) என்ற பெண்ணை இன்று திருமணம் செய்து கொண்டார். 

இளங்கேஸ்வரனுக்கும் சுதர்ஷினி என்ற சிங்கள பெண்ணுக்கும் இடையில் 15 வருட கால காதல் தொடர்பு இருந்து வந்த நிலையில் இன்று இவர்கள் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுடை திருமணத்தை அடுத்து இளங்கேஸ்வரனுக்கு தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை கிடைக்கும் என உறவினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை, போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டு கைதாகி சிறை வைக்கப்பட்டுள்ள கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் புஸ்பராஜா (34 வயது) இன்று தனது காதலியான மொஹமட் ராசிக் பாதிமாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். 

இந்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவ்விருவருக்கும் இடையில் 10 வருட காதல் தொடர்பு இருந்து வந்துள்ள நிலையில் இன்று திருமணம் செய்து காண்டுள்ளனர். 

இந்த திருமண வைபவமும் வெலிக்கடை புதிய மெகசின் சிறையில் இடம்பெற்றது. 

இன்றைய இரு திருமண நிகழ்வுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். 
(http://adaderana.lk)

பந்துல வெளியிட்ட கருத்திற்கு பதில்லடி


எமது சகோதர தொலைக்காட்சியான ரீவி தெரணவில் கடந்த செவ்வாய் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிய வாத பிட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்ட கருத்துக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பதில் அளித்துள்ளனர். 


பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் குறைந்த அளவில் உணவுப் பொதிகள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். 



2500 ரூபாவை கொண்டு தனி மனிதன் மாதமொன்றிற்கு உணவு உண்டு நீர் அருந்தி வாழ முடியும் என தான் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு கூறியிருந்தார். 



இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் சில வளங்கள் இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 



மின்சாரம், நீர், கேஸ் என்பவை பல்கலைக்கழகத்தில் இருந்து இலவசமாகக் கிடைப்பதால் உணவுப் பொதியை 25-30 ரூபா வரை குறைத்து விற்பனை செய்ய முடிவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 



எனினும் மின்சாரத்திற்கு சிறிய கட்டணம் செலுத்தப்படுவதாகவும் நீர், கேஸிற்கு பல்கலைக்கழகத்தால் கட்டணம் செலுத்தப்படுவதில்லை எனவும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் க்சனிகா கிரும்புரேகம தெரிவித்துள்ளார். 



இந்த நிலையில் அமைச்சர் சொல்லும் விலைக்கு ஏற்கத்தக்க தரமான உணவை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் அசேல சம்பம் குறிப்பிட்டுள்ளார். 

யாழ் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு


யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதுடன், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளையும் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில், கடந்த சில நாட்களாக, இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதனால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடம் முறையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அவ்வாறு அத்துமீறலில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்கள், தடைசெய்யப்பட்ட டைனமற் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரவு வேளைகளில் இழுவைப்படகில் வரும் அவர்கள், படகில் விளக்குகளை அணைத்துவிட்டு வெளிச்சம் இல்லாமல் பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 



இதனால் அவர்கள் வந்து செல்வது தெரியாதிருப்பதாகவும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் சிறு படகுகள், இந்திய இழுவைப் படகுகளில் மோதுவதாகவும் கூறப்படுகிறது. 

இங்கிலாந்து அணி 460 ஓட்டங்கள்


தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பாக பீட்டசன் 151 ஓட்டங்களை பெற்றார். 


பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை சிறப்பம்சமாகும். ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடினர். 



ஸ்ரோர்ஸ் 61 ஓட்டங்களையும், அலெஸ்டயர் குக் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 



இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன 105 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

மொபைலில் தமிழ் பேஸ்புக்

மொபைல் போனில் தமிழில் பேஸ்புக் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்செய்யப்பட உள்ளதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளது. இந்தியாவில்பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்தமிழ், மலையாளம் உள்ளிட்ட 8இந்திய மொழிகளில் பேஸ்புக் அறிமுகம்செய்யப்பட உள்ளது. இந்தியாவில் நான்கரை கோடி பேர்பேஸ்புக் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாண நிலப்பரப்பில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்







யாழ்ப்பாண நிலப்பரப்பில் கடல்நீர் கலப்பதால் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க "உலகத்தை அணிதிரட்டுவோம்" என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04.04.2012) புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே இவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அழகான கடற்கரைகள் இருக்கின்றன என்றும், இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் கூறிய அவர், யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்றார்.

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது.  இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும் எனவும் அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்தார்.

சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் இயற்கையால் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படவாய்பு இல்லை எனக் குறிப்பிட்டதுடன், தற்போது கடல் நீர் ஒவ்வொரு வருடமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் தரையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் இதனால் வயல் நிலங்களில் உவர்நீர் கலக்கின்றமையால் நெற்பயிர்ச்செய்கை பாதிப்படையும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு தேரோட்டம் ஒரே நாளில்



நாயன்மார்க்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயத்திலும், நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திலும் இன்று(04.04.2012) புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாணம் நல்லூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சிங்கையாரியச் சக்கரவர்த்தியால் தனது அரண்மனைக்கு கிழக்கே தான் தரிசித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஆலயமே இந்த வெயிலுகந்த விநாயகர் ஆலயம்.
இங்கு ஆதியிலிருந்தே சைவக்குருக்களினால் பரிபாலிக்கப்பட்டு, நித்திய, நைமித்திய வழிபாடுகள் ஆற்றப்பட்டு வருகின்றது.
இந்த ஆலயத்தின் 2012ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவம் மார்ச் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய, இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது. காலை 9.00 மணியளிவில் வசந்தமண்ட சையினைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்குத் தேர் வீதியுலா வந்தது.
இந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், காவடி, பாற்செம்;பு, அங்கப் பிரதட்சணம் என தமது நேர்த்திக் கடன்களை நிறுவேற்றினர். நாளை வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதேவேளை, சட்டநாதர் சிவன் (நல்லைநாயகி சமேத நல்லைநாத சுவாமி) ஆலயத்திலும் இன்று இன்று (04.04.2012) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆலயபிரதம குரு சபரிமலை குருசுவாமி சபரீ கான விநோதன் பிரம்மஸ்ரீ தானு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் ரதோற்சவம் நடைபெற்றது.
கணபதி, முருகன், வீரலட்சுமி அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய சுவாமிகள் கட்டுத்தேரிலும், சட்டநாததர் சுவாமி இரதத்திலுமாக 5 இரதங்களில் பவணிவந்து அடியார்களுக்கு அருள்பாலித்தனர்.

2012 ஆம் ஆண்டின் வடமாகாண நாயகன், நாயகியாக யாழ்ப்பாணத்தவர்கள் _



 “ஸ்ரூடியோ 9” நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட வடமாகாண நாயகன், நாயகியாக தேர்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா ராஜேந்திரா மற்றும் ஆனன் பேர்னாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ உல்லாச விடுதியில் (31.03.2012) வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இலங்கை அழகிகள் சங்கத்தலைவி சுபாசினி அபயவர்த்தன தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்விலேயே இவர்கள் வடமாகாண நாயகன், நாயகியாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் சூட்டிக்கொண்டனர்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநெச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வொருவரினதும் தனித்திறமைகள் , முகபாவம், நடை, உடை, பரந்து பட்ட அறிவு, ஆளுமைத் திறன்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியிலேயே இவர்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்பேட்டியில் முதல் சுற்றில் போட்டியாளர்களின் அறிமுகமும், இரணடாவது சுற்றில் குலுக்கல் முறையில் ஏற்பாட்டுக் குழுவினரின் கேள்வித் தொகுப்பில் இருந்து ஒரு கேள்விக்கான பதிலும் மூன்றாவது சுற்றில் போட்டியாளரினால் தெரிவு செய்யப்பட்ட நடுவர் கேட்ட கேள்விகள் பதில் அளித்தலுமான போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியாக போட்டியாளர்களுடைய தனித் திறமையினை வெளிக்காட்டிய காணொளி காண்பிக்கப்பட்டது.

யாழ் ரில்கோ உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர்அதிகாரி கேணல் ஜயசிங்க ஆகியோர் பிரதமவிருந்தினராகவும் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 
___

பரவைக்குளம் சிவன் கோயிலிற்கு மகா கும்பாபிஷேகம்


திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண  சுவாமி கோயில் என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் கோயிலில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (05.04.2012) வியாழக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
எண்ணெய்க்காப்பினைத் தொடர்ந்து நாளை(06.04.2012) வெள்ளிக்கிழமை காலை 8.27 மணி தொடக்கம் 10.27 வரை ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து ஆலயத்தின் மண்டலாபிஷேகம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

IMG_3405IMG_3431IMG_3448