//]]>3

வியாழன், 5 ஏப்ரல், 2012

2012 ஆம் ஆண்டின் வடமாகாண நாயகன், நாயகியாக யாழ்ப்பாணத்தவர்கள் _



 “ஸ்ரூடியோ 9” நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட வடமாகாண நாயகன், நாயகியாக தேர்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா ராஜேந்திரா மற்றும் ஆனன் பேர்னாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ உல்லாச விடுதியில் (31.03.2012) வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இலங்கை அழகிகள் சங்கத்தலைவி சுபாசினி அபயவர்த்தன தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்விலேயே இவர்கள் வடமாகாண நாயகன், நாயகியாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் சூட்டிக்கொண்டனர்.
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநெச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வொருவரினதும் தனித்திறமைகள் , முகபாவம், நடை, உடை, பரந்து பட்ட அறிவு, ஆளுமைத் திறன்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியிலேயே இவர்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்பேட்டியில் முதல் சுற்றில் போட்டியாளர்களின் அறிமுகமும், இரணடாவது சுற்றில் குலுக்கல் முறையில் ஏற்பாட்டுக் குழுவினரின் கேள்வித் தொகுப்பில் இருந்து ஒரு கேள்விக்கான பதிலும் மூன்றாவது சுற்றில் போட்டியாளரினால் தெரிவு செய்யப்பட்ட நடுவர் கேட்ட கேள்விகள் பதில் அளித்தலுமான போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியாக போட்டியாளர்களுடைய தனித் திறமையினை வெளிக்காட்டிய காணொளி காண்பிக்கப்பட்டது.

யாழ் ரில்கோ உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர்அதிகாரி கேணல் ஜயசிங்க ஆகியோர் பிரதமவிருந்தினராகவும் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். 
___

பரவைக்குளம் சிவன் கோயிலிற்கு மகா கும்பாபிஷேகம்


திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண  சுவாமி கோயில் என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் கோயிலில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (05.04.2012) வியாழக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது.
எண்ணெய்க்காப்பினைத் தொடர்ந்து நாளை(06.04.2012) வெள்ளிக்கிழமை காலை 8.27 மணி தொடக்கம் 10.27 வரை ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து ஆலயத்தின் மண்டலாபிஷேகம் 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

IMG_3405IMG_3431IMG_3448

புதன், 4 ஏப்ரல், 2012

4 காக பறந்த வாகனம்







வவுனியா, பறநாட்டினகல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ - 9 வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் வவுனியா பகுதியில் இருந்து சென்ற டிப்பர் ரக வாகனமும் வான் ஒன்றுமாக மூன்று வாகனங்களே விபத்தில் சிக்கின.

இதனால் வானின் சாரதியும் மற்றுமொருவரும் பலத்த காயத்திற்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



(நன்றி தமிழ் மிரர்)

யாழில் தடைப்படும் மின்சாரம்



வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டமைப்பு வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் செய்யவேண்டியிருப்பதாலும் பின்வரும் பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என யாழ். பிராந்திய மின்சாரசபை அறிவித்துள்ளது

நேரடியாக அருள் கொடுதடத ஸ்ரீ செல்வவிநாயகர்



கண்டி - கட்டுக்கலை அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலின் பங்குனி உத்தர பஞ்சரத பவனியை முன்னிட்டு இன்று (04) காலை பாற்குட பவனி வீதி உலா பெரும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஐந்தாவது ஐ.பி.எல் கோலாகல ஆரம்பம்





ஐந்தாவது ஐ.பி.எல் போட்டியின் தொடக்கவிழா சென்னையில் இரவு மிகவும் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொலிவூட், பொலிவூட் பிரபல நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிரபுதேவா நடனம், பிரியங்கா சொப்ரா நடனம், சல்மான்கான் நடனம், சாருக்கான் நடனம், அமிதாப் பச்சான் கவிதை, ஹரிஹரன் பாடல், பிராவோ நடனம் என ஐபில் தொடக்க விழா பிரமாண்டமாக இருந்தது. 

வெள்ளை வானில் குடும்பத்தர் கடத்தல்



தமிழ்நாடு என பலராலும் அறியப்பட்ட கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிலுள்ள நவ களனிபுர பகுதியில் இன்று காலை 8 மணியளவில் குடும்பத்தர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். 

பாலகிருஷ்ணன் ஆனந்தன் எனப்படும் 45 வயதுடைய குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் ஆனந்தனை இடைமறித்த நான்கு பேர் அடங்கிய வெள்ளை வான் குழுவினர் அவரை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர். 

இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிவில் கண்காணிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுவாமி விவேகானந்தர் மீண்டும் எழுச்சியுடன்



மட்டக்களப்பின் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைப் பகுதியின் பிரதான வீதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இனந்தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்ட சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை மீண்டும் இன்று புதன்கிழமை காலை அதே இடத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 

ஆரையம்பதி பிரதேச சபையின் தலைவர் திருமதி கிறிஸ்டினா சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், பிரதீப் மாஸ்ட்டர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர், உட்பட பலர் கலந்துகொண்டனர். 

ஆரையம்பதி சிவன் ஆலயத்திலிருந்து சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை ஊர்வலமாக பேண்ட் வாத்தியத்துடன் கொண்டுவரப்பட்டு சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டது. 

இந்த உருவச்சிலை வைக்கப்பட்டதையடுத்து அரசியல், சமய சமூக பிரமுகர்கள் சுவாமியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர். 

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஐனவரி மாதம் ஆரையம்பதி பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டது. 

இது தொடர்பில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமனயில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி





தமன - குடிச்சில் 7 பாடசாலைக்கு அருகில் வெலி தொட்டுபல வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் 70 வயதுடைய இஸ்மாயின் சாவுல் ஹமீட் என்ற நபரே உயிரிழந்துள்ளார். 

18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றது



அக்குரஸ்ஸ பகுதியில் நில்வலா கங்கையில் முகம் கழுவச் சென்ற 18 வயது யுவதியை முதலை கௌவிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்றுள்ளது. 


அக்குரஸ்ஸ பிரதேச சபை படகு மூலம் யுவதியை தேடும் பணிகள் இடம்பெற்ற, காலை 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்



குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை இன்று யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகவும் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதேடுதலின் போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார், யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அணி அதிரடி





இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இலங்கை அணி அதிரடி விளையாடி வருகிறது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லகிரு திரிமன்னே 8 ஓட்டங்களும், திலகரத்ன டில்சன் 14 ஓட்டங்களும் எடுத்து ஏமாற்றமளித்தனர். அடுத்து களமிறங்கிய சங்கக்கராவும் முதல் பந்திலியே ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
ஆனால் பின்பு களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன சதத்தை கடந்து 11 பவுண்டரியும், 1 சிக்சரும் அடித்து 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய திலன் சமரவீரா அரைசதம் கடந்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பறக்கும் காரின் சோதனை ஓட்டம் வெற்றி (வீடியோ இணைப்பு)


அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது.
ரேஸ் கார்கள், சிறிய ரக விமானங்கள், விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. தரையில் மட்டுமின்றி வானத்திலும் செல்லக்கூடிய காரை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் 2006ம் ஆண்டு ஈடுபட்டது.
கடந்த 2009ம் ஆண்டில் தயாரிப்பு பணிகள் முடிந்த பின், பல கட்டமாக இதன் சோதனை நடந்து வந்தது. டிரான்சிஷன் என்று இந்த காருக்கு பெயரிடப்பட்டது.
இதை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய அமெரிக்க தேசிய ஹைவே பாதுகாப்பு அமைப்பு கடந்த ஜூலையில் அனுமதி அளித்தது. இதையடுத்த சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் கடந்த 23ம் திகதி நடத்தப்பட்டது.
டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை சோதனை பைலட் பில் மிட்டீர் ஓட்டிச் சென்றார். முதலில் தரையில் வழக்கமான கார் போல ஓடிச் சென்றது.
சிறிது நேரத்தில் கார் கதவுகள் போல இருந்த இறக்கைகள் இரு பக்கமும் விரிந்தன. மெல்ல உயரே எழும்பிய கார் 8 நிமிடத்துக்கு 1400 அடி உயரம் வரை பறந்து பத்திரமாக தரையிறங்கியது.
சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக டெரபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அன்னா டிட்ரிச் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, தேவைப்படும் மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஆண்டுக்குள் சந்தைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
கார் விலை ரூ.1.42 கோடி. ஆர்டர் கொடுக்க விரும்புபவர்கள் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 சீட்கள் உள்ளன. ஓட, பறக்க அன்லெடட் பெட்ரோல் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


.

ஓவியர் கிருசானந்தின் ஓவியங்கள் சில