//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

குஷ்புவுக்கும் பச்சைகுத்தப்பட்டது


திரை நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் பச்சை குத்தி வருகிறார்கள்.
சினிமாவில் சான்ஸ் கிடைப்பதற்காக ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நமீதா தனது முதுகில் 27 நட்சத்திரங்களை பச்சைக்குத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து குஷ்புவும் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
தனது நாட்டுப்பற்றை காட்ட நம் தேசிய பறவையான மயிலை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளார். மேலும் அவர் தனது மணிக்கட்டில் தனது மகள்கள் அவந்திகா, அனந்திதா ஆகியோரின் பெயர்களை பச்சைக்குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அர்ஜூன் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தனது கையில் தேசியக் கொடியை பச்சைக் குத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்



யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் பிடிவிறாந்து பிடிக்கபட்ட 34 பேரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களை கடந்த வாரத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை உள்ளிட்ட பல்வேறுபட்ட 14 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக இன்று (04) யாழ். பொலிஸ் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.
நாவற்குழியில் அண்மையில் 8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வைத்திய அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
அச்சுவேலியில் அண்மையில் கொலை செய்யப்பட்ட 81 வயது மூதாட்டியின் வீட்டில் கொள்ளைகள் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்த யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாம்பு என்றால் யார் நடுங்குவது


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இங்கு இவ் இளைஞனின் துணிவை பாருங்கள்

ராணி எலிசபெத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் (video)

 
பிரிட்டிஷ் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் பொருட்டு வைர விழா கொண்டாட்டங்கள் பிரிட்டனில் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. பிரிட்டிஷ் மன்னரான ஆறாம் ஜார்ஜ்ஜுக்கும் அவர் துணைவியார் எலிசபெத்துக்கும் மூத்த பிள்ளையாக… 
1926ஆம் ஆண்டு பிறந்தவர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி. 1952ஆம் ஆண்டு தனது தந்தை காலமான நிலையில் 26 வயதிலேயே நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். பிரிட்டனில் பிரதமர் தான் அரசாங்கத்தின் தலைவர் என்றாலும் நாட்டின் தலைவராகவும் தேசத்தின் தலைவராகவும் விளங்க வேண்டிய கடமைகள் அரியணை ஏறுபவருக்கு உண்டு.
பிரிட்டனில் நூற்றாண்டுகள் காலம் பரிணாம வளர்ச்சிக் கண்டுள்ள அரசியல் சாசன கடமைகளையும் பிரதிநிதித்துவப் பொறுப்புகளையும் மகாராணி இரண்டாம் எலிசபெத் நிறைவேற்றிவருகிறார். வைர விழா கொண்டாட்டங்கள் ஜூன் 2ஆம் திகதி தொடங்கி 5ஆம் திகதி வரையில் பிரிட்டனில் பல இடங்களில் கொண்டாடப்படுகின்றன.
கொண்டாட்டங்களின் துவக்கத்தை அறிவிப்பதற்காக இன்று லண்டன் எடின்பரோ கார்டிஃப் பெல்ஃபாஸ்ட் ஆகிய ராஜ்ஜியத் தலைநகரங்களில் 41 தடவை பீரங்கி வேட்டு தீர்க்கும் இராணுவச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை லண்டன் அருகேயுள்ள டார்பியில் நடக்கும் குதிரைப் பந்தயத்தில் மகாராணி குடும்பத்தாரோடு கலந்துகொண்டுள்ளார்.
மகாராணி முன்னிலையில் பிரிட்டனின் முன்னணி ஓபரா இசைப் பாடகி கேதரின் ஜென்கின்ஸ் எ டே ஐவில் நெவர் ஃபர்கெட் என்ற பிரிட்டனின் தேசிய கீதத்தைப் பாடினார். ஞாயிறன்று லண்டனில் ஓடும் தேம்ஸ் நதியில் கடந்த முந்நூற்று ஐம்பது ஆண்டுகளில் இல்லாத ஒரு மாபெரும் படகு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் படகுகள் அணிவகுக்கவுள்ள இந்த ஊர்வலத்தில் மஹாராணியும் ஒரு படகில் பயணிக்கவுள்ளார்.
திங்களன்று முன்னணி இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கச்சேரி ஒன்று பங்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இராணுவ அணிவகுப்புடன்கூடிய ஊர்வலத்தில் ராணி பங்கேற்கிறார். வைர விழாக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஐக்கிய ராஜ்ஜியத்திலும் உலகின் வேறு பல இடங்களிலுமாக 4000 ஜோதிகள் ஏற்றப்படவிருக்கின்றன.
கொண்டாட்டங்களின் நிறைவாக பக்கிங்ஹாம் அரண்மனை அருகே வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது. இந்த கொண்டாட்ட காலம் முழுக்கவும் பிரிட்டனில் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஏராளமான வீதி விருந்துகளும் பொது நிகழ்ச்சிகளுமாக பிரிட்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. 


ஞாயிறு, 3 ஜூன், 2012

முருகன் ஆலயத்தினுள் இராணுவ உடையணிந்தோர் அட்டகாசம்


மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தை அண்டிய, முத்தையா சுவாமிகள் வசித்த கந்தவேள் எனும் முருகன் ஆலயத்தினுள் நேற்று முன்தினம் பிரவேசித்த இராணுவ உடையணிந்தோர் அங்கிருந்த கருங்கற்களினாலான தூண்கள், சிறிய கட்டடம் மற்றும் வழிபாட்டு பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
அங்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடுகையில்,
தாந்தாமலை முருகன் ஆலயமும் அதனை அண்டிய பிரதேசங்களும் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுக்குரிய புனித பிரதேசமாகும்.
இந்தப் பிரதேசங்களில் அண்மைக் காலமாக பெரும்பாண்மை இனத்தவர்களும் இராணுவத்தினரும் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை அழித்துவிட்டு, பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த பிக்குகள் இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவியுடன் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகன்றனர்.
இவற்றையும் நான் நேரில் சென்று பார்வையிட்டு விகாரை அமைப்பதை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டிருந்தேன்.
எனவே இந்துக்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்களை பூண்டோடு அழித்துவிட்டு அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கு இலங்கை அரசின் அணுசரணையுடன் பௌத்த பிக்குகள் செயற்படுகின்றனர்.
இதற்கு இராணுவத்தினரும் பொலிசாரும் பாதுகாப்பளிக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கொழும்பில் கொலை செய்யப்பட்டவர் லெப்.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலர் உதயகாந்தன்


கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க

நீதி கிடைக்காவிட்டால் போராடத்தயார் முல்லைத்தீவு மக்கள்


தமது அவலநிலை தொடருமேயானால் தாம் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதுடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபடப் போவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவுக் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழில் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் சி.அருள்ஜெனிஸ் பேட் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கீழ் 18 கடற்றொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இந்தச் சங்கங்களின் கீழ் சுமார் 4 ஆயிரத்து, 300இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடற்றொழிலை வாழ்வாதார தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் பேய்ப்பாறைப் பிட்டி வரையான 84 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட கடற்கரையோரப் பகுதிகள் இங்கு உள்ளன. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதைவிடச் சிறுகடல்பகுதிகளாகச் சாலைக்கடல், சுண்டிக்குளம்கடல், நந்திக்கடல், நாயாறு, குமுழமுனை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்றன காணப்படுகின்றன.
இந்த நிலையில் சிறுகடற்பகுதிகளில் சட்டவிரோத இயந்திரப்பாவனை, கூட்டுவலைப் பயன்பாடு வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகளும் ஆழ்கடலில் அத்துமீறிய மீன்பிடிகளும் வேறுஇடங்களைச் சேர்ந்த மீனவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இங்குள்ள தொழிலாளர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
இந்த நிலை தொடர்பாக மாவட்ட அரச அதிபர் கடற்றொழில் நீரிய திணைக்கள அதிகாரிகள், இராணுவ அதிகாரி, பொலிஸார் எனப் பலருக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த நிலை நீடிக்குமானால் அனைத்து மக்களும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய நிலையும் தவிர்க்க முடியாதென முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5 நிமிடத்தில் 100 முத்தம் வாங்கிச்சாதனை தமிழ்ப் படம்


ஐந்து நிமிடத்தில் நூறு முத்தங்கள் இடம்பெற்ற படம்நம்ம மாஸ் ஹீரோக்களை செம கடுப்பில் தள்ளிய கோலிவுட்டின் முதல் சினிமா ‘தமிழ்படம்’.இந்தப்படத்தின் கதாநாயகி திஷா பாண்டே அள்ளும் அழகுடன் அறிமுகமானதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் டெபாசிட் காலியாகமால் தப்பித்தார்.
ஆனால் பாவம் அந்த கிண்டல் படத்தில் நடித்த ஒரே குற்றத்துக்காகவே மாஸ் ஹீரோக்கள் யாரும் திஷா இருக்கும் திசை பக்கம் திரும்பவே இல்லை! இதனால் ‘தமிழ்ப்படம்’ ஹிட் ஆனாலும் திஷா பாண்டே திக்கு தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டதுபோல திக்கு முக்காடிப் போனார்.
இந்த நேரத்த்தில் அவருக்கு கைகொடுத்தார் ஒரு அறிமுக இயக்குனர்! அவர் ‘மயங்கினேன் தயங்கினேன்’படத்தை இயக்கியிருக்கும் வேந்தன்!
நிதின் சத்யாவுடன் திஷா ஜோடி சேர்ந்த இந்தப்படத்திற்கு இப்போது தமிழக சென்சாரின் தயவில் அதிரடி விளம்பரம் கிடைத்திருக்கிறது.
திஷாவும், நிதின் சத்யாவும் இந்தப்படத்துக்காக நூறு முத்தங்களை ஒருவருக்கொருவர் வழங்கிக்கொள்வதுபோல படத்தில் ஐந்து நிமிடம் இடம்பெற்றிருக்கிறது ஒரு காட்சி! இந்த கலர்ஃபுல் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கும் என்று இயக்குனர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, சென்சார் காட்சி திரையிட்டு முடிந்ததும் கத்தரிகள்தான் பறந்தது என்கின்றனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற மிக நீளமான முத்தக்காட்சி உட்பட நூறு வெட்டுக்களையும் பதினந்து சவுண்ட் மியூட்களையும் சென்சார் அதிகாரிகள் பரிந்துரை செய்திருகிறார்கள்!
இது சமீபத்தில் வேறு எந்தப்படமும் சந்திக்காத ரெகார்ட் பிரேக் கத்தரிப்பு என்பதால் திஷா பாண்டே தனக்கு மூன்றாவது வாய்ப்பு உறுதி என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம்!

கிராம மக்களிடம் அடிவாங்கிய நடிகை


ஆந்திராவில் நெல்லூர் எம்.பி. தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.நெல்லூர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி. சுப்புராமரெட்டி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை வாணிஸ்ரீ பிரசாரம் செய்தார்.
ரெட்டி பாளையம் என்ற இடத்தில் பிரச்சார வேனில் நின்றபடி பேசியபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியை கடுமையாக தாக்கினார்.
அவர் பேசும்போது, இந்த இடைத்தேர்தலில் சுப்புராம ரெட்டிக்கு ஓட்டு போடுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால் தொகுதி முன்னேற்றத்துக்கு பாடுபடுவார். தொகுதிக்கு பல நன்மைகளை செய்வார். ராஜசேகரரெட்டி இருந்தபோது இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்றார்.
அப்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ராஜசேகர ரெட்டி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் இருக்கும் போதுதான் எங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தது. இப்போதுதான் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
உடனே வாணிஸ்ரீ நீங்கள் வாயை மூடிக்கொண்டு என் பேச்சை கேளுங்கள், வில்லிபோல் பேசாதீர்கள் என்றார். இதைக்கேட்டதும் பெண்கள் ஆவேசம் கொண்டனர்.
எங்கள் ஊருக்கு வந்து விட்டு எங்கள் வாயை மூடச் செல்கிறாயா? என்று கூச்சலிட்டப்படி அவர் மீது செருப்புகளை வீசினர். காங்கிரஸ் நிர்வாகிகளும் போலீசாரும் அரண்போல் நின்று வாணிஸ்ரீயை பிரசார வேனில் இருந்து இறக்கி வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் பெண்கள் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்ட நடிகை வாணிஸ்ரீ பின்னர் ராமச்சந்திராபுரத்தில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து பேசிய கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியை பற்றி எதுவும் குறிப்பிடாமல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

டெங்கிலிருந்து தப்பிக்க 10 வழிகள்.


காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?”
”காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.”
”இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?”
”ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.”
”டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?”
”டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.”
”டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?”
”தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.”
”டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?”
”டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்… காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.”
”டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?”
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.”
”டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?”
”ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.”
”டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?”
”டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.
வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!”
டெங்கு காய்ச்சல் தடுக்க…
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.
கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.
காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது…
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப் பரவாது…
ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

நீரிழிவு நோய் இரத்த கோளாறுக்கு பாகற்காய்! மருத்துவம்


காய்கறி வகைகளில் பாகற்காய் மருத்துவத்தில் சிறந்து விளங்குகின்றது..
இரத்த கோளாறுகள்.
பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்ற வற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும். இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகள், போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
காலரா மற்றும் வாந்தி பேதி
ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்ச சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.
நீரிழிவு நோய்
பழத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது ஏனெனில் பாகற்காய் செடியில் இன்சுலின் கொண்டுள்ளது. குறிப்பிட்ட அளவு பாகற்காயை  ஜீஸ் செய்து சாப்பிட்டால் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்பு தன்மையை அதிகரிக்கிறது.
கண் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு
தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும். பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும்.பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.
கல்லீரல் பிரச்சினை
பாகற்காற் பழத்தின் சாறு மது போதை மற்றும் நச்சுத் தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும்.. இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மூல வியாதி:
ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் பாகற்காய் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் நோய் குணமாகும். மேலும் பாகற்காய் செடியின் வேர்களை பேஸ்ட் போல அரைத்து மூலம் ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர மூலநோய் குணமாகும்.
சொரியாஸிஸ்
கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிடவேண்டும்.
சுவாச கோளாறுகள்
பாகற்காய் நச்சுத் தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாச கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜீஸ் செய்தோ சாப்பிட சுவாச கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

ம.அரசின் விலை குறைப்பு தொடர்பில் ‘ஜெ’ சீற்றம்!


கதையை விடுங்கோ

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின.
இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தின.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ் விலை குறைப்பு மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது.
எனவே ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.என்று தெரிவித்தார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்:நடிகை சோனா


“நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும் லெஸ்பியனாக நடிக்க மாட்டேன்” என்கிறார் நடிகை சோனா.
நேற்று (01) தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சோனா, செய்தியாளர்களிடம் கூறுகையில், ” 86 கிலோ எடை இருந்த நான் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் 70 கிலோவாக குறைந்து இருக்கிறேன். இன்னும் உடல் எடையை குறைத்து, சினிமா உலகையே திரும்பி பார்க்க செய்ய வேண்டும். இதுதான் என் பிறந்த நாள் சபதம்.
இந்த பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து 3 வயது பெண் குழந்தையை தத்து எடுக்கப் போகிறேன்.
நிச்சயமாக என் சொந்த வாழ்க்கையை படமாக தயாரிப்பேன். அதன்மூலம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியுலகம் தெரிந்து கொள்ளச் செய்வேன்,” என்றார்.
நமீதா ஒரு படத்தில் லெஸ்பியனாக நடிக்க மறுத்து இருக்கிறார். அப்படி ஒரு வேடம் உங்களுக்கு வந்தால், நடிப்பீர்களா?, என்று கேட்டதற்கு, “நான் பொம்பளை சிங்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும், லெஸ்பியனாக நடிக்க மாட்டேன். அதேபோல் நிர்வாணமாகவும் நடிக்க மாட்டேன். பணம்தான் பெரிது என்று நினைத்திருந்தால், வருடத்துக்கு 50 படங்களில் நான் நடித்திருப்பேன்,” என்றார் அசராமல்.

த்ரிஷா – தெலுங்கு நடிகர் இடையில் கும்மியடித்த பிபாஷா பாசு?


த்ரிஷா மற்றும் தெலுங்கு நடிகர் ராணா நெருக்கமாக பழகிவந்த நிலையில், தற்போது இருவர் நெருக்கத்திலும் சரசரப்பு ஏற்பட்டுள்ளது. இதர்கு காரணம் ராணா – பிபாஷா இடையில் ஏற்பட்ட நெருக்கம் தானாம் என்று பேசப்படுகிறது.
இது தொடர்பில் ராணா தெரிவிக்கையில்…
நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார்.
மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான தரப்பினரால்…
பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. இதன் காரணமாகவே த்ரிஷா, ராணா இடையிலான நெருக்கம் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

யுவதி சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம்


யுவதி ஒருவர் சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று மினுவன்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
19 வயது யுவதி ஒருவர், 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த யுவதியை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் காதல் உறவு நீடித்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இதன்படி குறித்த சிறுவன் கடந்த 26ம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்று நேற்று முன்தினம் (31) வரை அங்கேயே தங்கியதாகவும் சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, யுவதி கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை


எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்தது தொடர்பான வழக்கில் எகிப்தில் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த ஆண்டு முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி நடைபெற்றது இக்கிளர்ச்சியின் போது எதிர்ப்பாளர்கள் 846 பேரை படுகொலை செய்ததாக முபாரக் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இதே வழக்கில் முபாரக் ஆட்சிக்காலத்து அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மகன் உட்பட 6 பாதுகாவலர்கள் மீதும்குற்றம்சாட்டப்பட்டுளது.
இந்த வ்ழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நேரலையாகவும் ஒளிபரப்பபடும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பு நேரத்தின் போது பெருமளவிலானோர் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். 846 பேரை படுகொலை செய்த வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால் முபாரக்கின் மகன் மற்றும் 6 பேரை குற்றவாளிகள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இதற்கு நீதிமன்றத்தில் கூடியிருந்தோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சனி, 2 ஜூன், 2012

வவுனியா, பூந்தோட்டத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் உடலமொன்று மீட்கப்பட்டது

வவுனியா, பெரியகுளம், பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து பொலிஸார் உடலமொன்றை மீட்டுள்ளனர்.இந்த உடலம் நேற்றிரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.வயல் வெளியருகே இருந்த மரமொன்றில் சுருக்கிட்டுத் தொங்கியிருந்த நிலையிலேயே பொலிஸார் உடலத்தை மீட்டுள்ளனர்.உடலம் மீட்டகப்பட்ட வேளையில் சட்டைப்பையில் இருந்து 39 வயது, சண்முகம் இராஜதுறை என்ற விபரங்களுடன்கூடிய தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிபாஷா பாசு மற்றும் சமீரா ரெட்டடி



இந்திய பொலிவூட் நட்சத்திரம் பிபாஷா பாசு மற்றும் கொலிவூட் நட்சத்திரம் சமீரா ரெட்டி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கார்ல்ரன் சுப்பர் 7 ரக்பி போட்டியில் கண்டுகளிப்பதற்காகவே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஏற்கவே இலங்கைக்கு சென்று வந்தவர்களை தம்பி சூரியவிர்க்கவும் விஜய்க்ககவும் மன்னிப்பு வழங்கப்பட்டது . அதேபோல் இம்முறையும் நடைபெறும்.

டுவிட்டர், பேஸ்புக் ஊடாக இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி



வெளிநாடுகளுக்கு தப்பியோடிய புலிகளாலும் மேற்குலக நாட்டவர்களினாலும் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவர்களின் நிழல்கள் தேசிய அரசியலுக்குள் ஊடுருவி பிரிவினைவாதத்திற்கு நாட்டை நகர்த்தி செல்கின்றனர் எனவும் அமைச்சர் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் மையப் பகுதியை நோக்கி பிரிவினைவாத சக்திகளால் பிரயோகிக்கப்படும் சவால்களை ௭திர்கொள்ள பொதுமக்களின் ஆதரவு அரசிற்கு அத்தியாவசியமானதாகும். எனவே பேதமின்றி அரசுக்கு ஆதரவு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட் மாதத்திற்குள் ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய சர்வதேச புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முகம் கொடுக்கும் வகையில் மத்திய வங்கி உசார் நிலையில் இருக்க வேண்டும். டுவிட்டர், பேஸ்புக் ஊடாகவும் நாட்டிற்கு ௭திரான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன ௭ன்றும் அமைச்சர் வீரவங்ச குறிப்பிட்டார்.
”வெனிசுலாவின் கிளர்ச்சியினை புரிந்து கொள்வோம்” என்ற நூல் இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (01) வெளியீடு கண்டது. இதில் விஷேட உரையாற்றியபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.
பூகோளவியல் ரீதியில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு தூரத்தில் காணப்பட்டாலும் அரசியல் ரீதியில் மிக நெருங்கிய நிலையிலேயே உள்ளது. ஆனால் அந்த நாடுகள் மேற்குலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கு ஒன்றிணைந்து போராடி வருகின்றன. குறிப்பாக வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
இதேநிலையே இன்று இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையை பல்வேறு நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கும் முன்னெடுப்புகளே இன்று காணப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் பல தரப்புக்களை ஒற்றர்களாகவும் பொருளாதார சதிகாரர்களாகவும் மேற்குலக சக்திகள் பயன்படுத்துகின்றன.
சிறையிலிருந்து விடுதலையான சரத் பொன்சேகா சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ௭ன்று கூறுகின்றார். இது யாருடைய தேவையாக இருக்க முடியும். சம்பந்தனுடன் கூட்டணியமைத்து கொண்டு இலங்கை தமிழனின் நாடு என்கிறார். இராணுவத்தில் இருந்தபோது இது சிங்கள வர்களின் நாடு என்கிறார். இவர்களைப் போன்றவர்களை மேற்குலக சக்திகள் நாட்டிற்கு ௭திராக பயன்படுத்துகின்றன.
ரூபாவின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர்க் காலத்தில் வீழ்ச்சியடையாத ரூபாவின் பெறுமதி தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது ௭ன்றால் இதன் பின்னணியில் நாட்டிற்கு ௭திராக சக்திகள் உள்ளமை வெளிப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் மிஹின் லங்கா, எயார் லங்கா போன்ற துறைகளை பாதுகாத்து பல கோடி ரூபா செலவிடும் அரசால் ரூபாவை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை ௭ன்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே நாட்டிற்குள் ஊடுருவியுள்ள அந்நிய சக்திகள் பல்வேறு துறைகளிலும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களே இன்று ௭திர்க்கட்சியைப் போன்று கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆகவே நாடு ௭திர்கொண்டுள்ள பல்துறைசார் சவால்களை தோல்வியடையச் செய்ய பொதுமக்கள் அரசுடன் ஒன்றிணைய வேண்டும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றத்திற்கு பௌத்ததுறவிக்கு 7 வருட சிறை



சிறீலங்காவின் சிங்கள பௌத்த துறவி ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை ஐஸ்வேத் க்ரௌவ்ன் நீதிமன்றம் வழங்கியது.
டல்வேட்டன் வீதியில் உள்ள குரொய்டொன் என்ற இடத்தில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க தேரரும்இ தேமஸ் பௌத்த விஹாரை சிறீலங்காவின் கம்பஹா பரிவேனாதிபதியுமான ஸ்ரீ கல்யாணி சமாகி தர்ம மஹா சங்கத்தின் தலைவருமான பஹலாகம சோமரத்ன தேரருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
1985ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரை தகாத முறையில் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவரை சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து ஆயுட்காலத்துக்கு தடுத்துள்ள நீதிமன்றஇ ஆயுட்காலத்துக்கு பாலியல் குற்றசாட்டுக்குள்ளும் பதிவு செய்துள்ளது.
எனினும் 1977ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளியாக காணப்படவில்லை.
தேரர் மீது 2011ஆம் ஆண்டு செப்டம்பரிலும் நவம்பரிலும் குறித்த இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
இந் நிலையில் நீதிமன்றத்தில் பிரசன்னமான அவரை முன்னதாக நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்தது
எனினும் நேற்று அவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்!


இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பூந்திக்கொட்டை
நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன.
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.
உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
கரிசலாங்கண்ணி
கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும். முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
வெந்தயம்
கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.
மருதாணி
கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாலை முக்கிய பங்காற்றுகிறது.
கடுக்காய், நெல்லிப் பொடி
முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.இதேபோல் ஜடமான்சி, குஷ்டா, கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, பிருங்கராஜ் கரிசிலாங்கண்ணி), நீர்பிரம்மி, அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.



விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீகள்!


விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.அதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.

Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.
Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.
Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.
Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட்டவுண் விண்டோ மூடப்படும்.
Alt + Spacebar: அப்போதைய விண்டோவிலிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.
Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.
Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற்கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சியின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்டரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்).
Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.
Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.
Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.
Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.
Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.
Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)
Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.
Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.
Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.

சிவக்கார்த்திகேயனின் மனம்கொத்திப் பறவை


சின்ன விஷயத்துக்கு கூட பத்து பேரை வெட்டி சாய்க்கிற அப்பா, சித்தப்பா, அண்ணன் களைக் கொண்ட வசதியான வீட்டுப் பொண்ணு ஆத்மியா. அவங்க வீட்டு நேர் எதிர் வீட்டு பையன் சிவகார்த்திகேயன்.
அவங்க அப்பா (இளவரசு) ஆத்மியாவின் அப்பா கட்டும் புதிய பள்ளிக்கூடத்தின் கட்டிட கான்ட்ராக்டை எடுத்து செய்து கொண்டிருக்கிறார். மகன் சிவாவோ படிச்சுட்டு சில நேரங்களில் அப்பாவுக்கு உதவியா பல நேரங்களில் நண்பர்களுடன் வெட்டியா ஊரை சுத்தி வருகிறான்.
ஆத்மியாவும் சிவகார்த்திகேயனும் அன்புடன் பழகுகிறார்கள். திடீரென ஒரு வீச்சரிவா மீசை மாப்பிள்ளை வருகிறார். அவருக்கு ஆத்மியாவை நிச்சயம் பண்ணுகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட சிவா துடிதுடித்துப் போகிறான். தன் மனதில் இருக்கும் காதலை அவளிடம் சொல்கிறான். தனக்கு நிச்சயம் ஆனதை காரணம் காட்டி விலகிப் போகிறாள் அவள்.
அவளையே நினைத்து குடி மயக்கத்தில் புலம்பும் சிவாவை ஆத்மியாவுடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் நண்பர்கள் ஆத்மியாவை மயக்கமடையச் செய்து இருவரையும் கடத்திக் கொண்டு போகிறார்கள். கண்விழித்த ஆத்மியாவோ தனக்கு சிவா மீது காதல் இல்லை என்கிறாள்.
அவனோ அவள் தனக்கு வேண்டாம்� என்கிறான். இந்நிலையில் ஆத்மியா வீட்டில் அவர்களை வலைவீசி தேடுகிறார்கள். தொடர்ந்து வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் முடிவு என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.
மெரினா படத்திற்கு பிறகு முழு நீள கதாநாயகனாக வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் இவரை கலங்க விட்டிருக்கிறார்கள். அடுத்த பாதியில் இவர் களைகட்ட வைக்கிறார்.
இவருக்கு ஜோடியாக ஆத்மியா. பெரும்பாலும் சேலைகளிலேயே வருவதால் அம்மனாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் கேர் பண்ணாத இவருடைய நடிப்பு அடுத்த பாதியில் ரொம்பவே ஸ்கோர் பண்ணுகிறார் ஆத்மியா.
சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாக வருகிறார்கள் சூரி, சிங்கம்புலி வகையறா. சூரியும் சிங்கம் புலியும் கம்பெனி போட்டு அடிக்கிற லூட்டியில் தியேட்டர் அதிர்கிறது. இடைவேளையில் என்ட்ரி கொடுக்கும் சாம்சும் அவர் நண்பரும் வந்த பிறகு படம் விறுவிறுப்பாகவும் செம காமடியாகவும் நகர்கிறது.
ஆத்மியாவையும் சிவகார்த்திகேயனையும் ஆத்மியாவின் அண்ணன் டீம் தேடும் போது சிங்கம் புலியையும் சூரியையும் அழைத்துக் கொண்டே போகும் இடமெல்லாம் செல்கிறார்கள்.
அவர்களிடம் வம்படியாக மாட்டிக் கொள்ளும் சாம்ஸ்� இந்த காட்சிகள் அரை நிமிடங்களுக்கு தொடர்ந்து வரும் காமெடியாக இருக்கிறது. டிங் டிங்� குத்துப்பாட்டு ஆட்டம் போட வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கிறார் எழில். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில் இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார்.
காதல், காமெடி, கலாட்டா என வழக்கமான ஸ்டைல் கதை என்றாலும் இடைவேளை ட்விஸ்ட், மாறுபட்ட திரைக்கதை யுக்தியில் படத்தை வேறு பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார் எழில்.

வெள்ளி, 1 ஜூன், 2012

யாழ் நகர எல்லைக்குள் இருக்கும் விடுதிகளுக்குள் மூடு விளா



யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட உரிமம் பெறாத சகல விடுதிகளும் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இயங்கி வரும் அனைத்து விடுதிகளையும் பதிவு செய்யுமாறு மாநகர சபையினால் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த அறிவித்தலின் பின்னர் இன்னமும் பதிவு செய்யப்படாத அல்லது பதிவினை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்காத சகல விடுதிகளும் மூடப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து உள்ளுராட்சி சட்டத்திற்கமைவாக உரிமம் பெறாத அனைத்து விடுதிகளும் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓர் பெண்ணிடம் எப்படி ஆண் ஏமாந்து போகிறான்

பல ஆண்கள் ஒரே நேரத்தில் ஓர் பெண்ணிடம் ஏமாந்து போகிறார்கள். அதுவும் இலத்திரனியலால். எப்படி?

சம்சுங் நிறுவனம் கை அசைவுகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிமோட் மூலம் செய்யும் வேலைகளை, வித விதமான கை அசைவுகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
அத் தொலைக்காட்சிக்கு எடுக்கப்பட்ட வர்த்தக விளம்பரப்படம் தான் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
Motion Control தொழில்நுட்பம் பயன்பட்டுள்ள இவ் ஸ்மார்ட் தொலைக்காட்சியில் இணைய இணைப்பை பயன்படுத்தி யூடியூப் முதல் ஸ்கைப் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.




திருமணத்திற்கு தடையான யாதகம்



பொதுவாக திருமணத்திற்கு குருப் பலன் இருந்தால் நல்லது என்று சொல்கிறோம். ஏனென்றால் குருவருள் திருவருள் என்று சொல்லப்படுகிறது. நல்ல தசா புத்தி இருந்தாலும் திருமணம் முடிக்கலாம். அதில் பிரச்சனை இல்லை. 
சாதாரணமாக சனி திசை, ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல, ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம். 
இதெல்லாம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம். ஆனாலும், இதனையும் முறியடிக்கும் விதமான பெண்ணினுடைய ஜாதகமோ அல்லது துணையினுடைய ஜாதகமோ நல்ல திசையுடன் யோக திசையுடன் இருந்தால் அதனைக் கூட சேர்த்து வைப்போம். 
வரன் பார்க்கிற ஒரு பையனுக்கு இராகு திசையும், ஏழரைச் சனியும் ஒன்றாக நடக்கிறது என்று வேண்டாம் என்று சொல்வோம். அதுவே, பெண்ணிற்கு சுக்ர திசை, குரு திசை இருந்தால் அது சமன் செய்யப்படும். அதுபோல ஜாதகம் வரும் வரை காத்திருந்து பொருத்தம் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொல்கிறோம்.

பேஸ் புக்கால் அம்மாவாகும் 15 சிறுமி



பேஸ் புக் இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவரைக் கர்ப்பமடையச் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க அட்லாண்டாவைச் சேர்ந்த 41 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தோனி அந்தோனியோ நோர்மன் என்ற மேற்படி நபர், தன்னை 25 வயது இளைஞர் எனக் குறிப்பிட்டு குறிப்பிட்ட சிறுமியுடன் பேஸ்புக் இணையத் தளத்தின் அரட்டைப் பகுதியினூடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பின் சிறுமியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்த நோர்மன் அவரது வீட்டு விலாசத்தைப் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மபிள்டன் நகரிலுள்ள சிறுமியின் வீட்டிற்கு சிறுமி தனித்திருந்த போது வந்த நோர்மன், சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் பொலிசாரிடம் சிறுமியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிசார் நோர்மனைக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுமி ஒருவரிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்டமை உள்ளடங்கலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. __

விபச்சார விடுதியில்6 பெண்க கைது


கல்கிஸ்சை கரையோரப் பிரதேசத்தில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பிரபல பாடசாலை ஒன்று அருகில் இயங்கி வந்த இந்த மையத்தில் இருந்து 6 பெண்களையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
25 முதல் 35 வரையிலான 35 வயதெல்லையில் இருந்தத வத்தளை, மொரட்டுவ, இம்புல்கொட, களனி, பியகம பிரதேசங்களை சேர்ந்த பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பெண்கள் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுவதாகவும், இந்த விடுதியை நிர்வகித்துவந்த கட்டடதிற்கு நாளொன்றுக்கான வாடகை 8 ஆயிரம் ரூபா எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விடுதியை நிர்வகித்து வந்தவர்கள் குறித்தும், அவர்களுக்கு திரைமறைவிலுள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நொக்கியாவினை கையடக்கத்தொலைபேசியை பேஸ்புக்வாங்குகிறது



பேஸ்புக் பெயரிலான கையடக்கத்தொலைபேசி தொடர்பான செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது.
இது தொடர்பாக சில வருடங்களுக்கு முன்னரே செய்திகள் அடிபட்ட போதிலும் அவை நிஜமாகவில்லை.
இந்நிலையில் தற்போதும் பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தொடர்பாக பலராலும் பேசப்பட்டுவருகின்றது.
சிறப்பான மொபைல் பேஸ்புக் அனுபவத்தினைத் தரும் வகையில் தனது பெயரிலேயே கையடக்கத்தொலைபேசி தயாரிக்கும் நோக்குடன் அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலரைப் பணிக்கமர்த்தியுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேபோல தற்போதும் சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
சந்தையில் தனது இடத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் நொக்கியாவினை பேஸ்புக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதனுடன் இணைந்து பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தயாரிக்கவுள்ளதாகவுமே செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நொக்கியாவைப் பேஸ்புக் விலைபேசியுள்ளதாகவும், நொக்கியாவின் அனுபவம் மற்றும் சிறப்புத்தேர்ச்சியை பேஸ்புக் உபயோகிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நொக்கியா மைக்ரோசொப்ட்டுடன் சிறந்த உறவினைப் பேணிவருவதனால் பேஸ்புக் பேரிலே விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி ஒன்றினைப் பேஸ்புக் தயாரிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவுள்ளன.
கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பேஸ்புக் பாவனை அதிகரித்து வருகின்றமையால் அவற்றில் காட்சிப்படுத்தும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகும். இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசம் சறுக்கியது நாம் அறிந்த விடயமே.
இவற்றிலிருந்து மீளவும் வருவாய் தரக்கூடிய மார்க்கங்களை அதிகரிப்பதுவும் தற்போது பேஸ்புக்கின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளதுடன் அதற்கான மாற்று வியூகங்களை வகுப்பதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இத்தகைய காரணிகளைக் கருத்தில்கொள்ளும் போது பேஸ்புக் தனது பெயரிலான கையடக்கத்தொலைபேசியைத் தயாரிப்பதும், அதற்கென உறுதியான பங்காளரொருவருடன் கைகோர்ப்பதும் சாத்தியப்படக்கூடிய விடயங்களாகவே தெரிகின்றன.
பேஸ்புக்கிற்கு என்றுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அதன் கையடக்கத்தொலைபேசிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் நொக்கியா போன்றதொரு நிறுவனத்தினை அவ்வளவு இலகுவாகக் கொள்வனவு செய்ய முடியுமா என்பது சற்று சந்தேகத்துக்குரிய விடயமே!

இலங்கைத்தீவு தமிழர் தேசம் சிங்களவர் தான் வந்தேறு குடிகள்



இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.
சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு: எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார். இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும்.
விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.
அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார். பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது.
எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.
இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.