//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

கிராம மக்களிடம் அடிவாங்கிய நடிகை


ஆந்திராவில் நெல்லூர் எம்.பி. தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.நெல்லூர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டி. சுப்புராமரெட்டி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நடிகை வாணிஸ்ரீ பிரசாரம் செய்தார்.
ரெட்டி பாளையம் என்ற இடத்தில் பிரச்சார வேனில் நின்றபடி பேசியபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியை கடுமையாக தாக்கினார்.
அவர் பேசும்போது, இந்த இடைத்தேர்தலில் சுப்புராம ரெட்டிக்கு ஓட்டு போடுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால் தொகுதி முன்னேற்றத்துக்கு பாடுபடுவார். தொகுதிக்கு பல நன்மைகளை செய்வார். ராஜசேகரரெட்டி இருந்தபோது இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்றார்.
அப்போது, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ராஜசேகர ரெட்டி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் இருக்கும் போதுதான் எங்களுக்கு பல நன்மைகள் கிடைத்தது. இப்போதுதான் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
உடனே வாணிஸ்ரீ நீங்கள் வாயை மூடிக்கொண்டு என் பேச்சை கேளுங்கள், வில்லிபோல் பேசாதீர்கள் என்றார். இதைக்கேட்டதும் பெண்கள் ஆவேசம் கொண்டனர்.
எங்கள் ஊருக்கு வந்து விட்டு எங்கள் வாயை மூடச் செல்கிறாயா? என்று கூச்சலிட்டப்படி அவர் மீது செருப்புகளை வீசினர். காங்கிரஸ் நிர்வாகிகளும் போலீசாரும் அரண்போல் நின்று வாணிஸ்ரீயை பிரசார வேனில் இருந்து இறக்கி வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் பெண்கள் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்ட நடிகை வாணிஸ்ரீ பின்னர் ராமச்சந்திராபுரத்தில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து பேசிய கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியை பற்றி எதுவும் குறிப்பிடாமல் பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக