//]]>3

ஞாயிறு, 3 ஜூன், 2012

ம.அரசின் விலை குறைப்பு தொடர்பில் ‘ஜெ’ சீற்றம்!


கதையை விடுங்கோ

கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கடந்த வாரம் லிட்டருக்கு 7ரூபாய் 50 பைசா அளவிற்கு உயர்த்தின.
இந்தியா முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கடந்த 30ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தின.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவ் விலை குறைப்பு மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு “யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.
உயர்த்தப்பட்ட 7 ரூபாய் 50 பைசாவில் 2 ரூபாய் குறைப்பு என்பது ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதத்திலும் பயன்தராது. இந்த சிறிய அளவிலான விலை குறைப்பு மக்களின் கோபத்தை எந்தவிதத்திலும் தணித்துவிடாது.
எனவே ஏற்றப்பட்ட பெட்ரோல் விலையை முழுவதும் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக