//]]>3

சனி, 2 ஜூன், 2012

பாலியல் குற்றத்திற்கு பௌத்ததுறவிக்கு 7 வருட சிறை



சிறீலங்காவின் சிங்கள பௌத்த துறவி ஒருவருக்கு பிரித்தானியாவில் 7 வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை நேற்று வெள்ளிக்கிழமை ஐஸ்வேத் க்ரௌவ்ன் நீதிமன்றம் வழங்கியது.
டல்வேட்டன் வீதியில் உள்ள குரொய்டொன் என்ற இடத்தில் வசித்து வந்த பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்க தேரரும்இ தேமஸ் பௌத்த விஹாரை சிறீலங்காவின் கம்பஹா பரிவேனாதிபதியுமான ஸ்ரீ கல்யாணி சமாகி தர்ம மஹா சங்கத்தின் தலைவருமான பஹலாகம சோமரத்ன தேரருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டது.
1985ஆம் ஆண்டு 16 வயதாக இருந்த சிறுமி ஒருவரை தகாத முறையில் தாக்கிய குற்றச்சாட்டுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவரை சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருந்து ஆயுட்காலத்துக்கு தடுத்துள்ள நீதிமன்றஇ ஆயுட்காலத்துக்கு பாலியல் குற்றசாட்டுக்குள்ளும் பதிவு செய்துள்ளது.
எனினும் 1977ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் தேரர் குற்றவாளியாக காணப்படவில்லை.
தேரர் மீது 2011ஆம் ஆண்டு செப்டம்பரிலும் நவம்பரிலும் குறித்த இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.
இந் நிலையில் நீதிமன்றத்தில் பிரசன்னமான அவரை முன்னதாக நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்தது
எனினும் நேற்று அவருக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக