//]]>3

புதன், 30 மே, 2012

யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழ ராணுவத்தினர்



யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது:
“பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துமாறு நாம் கோரவில்லை” எனத் தெரிவித்தனர்.
இதேவேளை மாணவர்கள் மீதான தாக்குதலை படைத்தரப்பே மேற்கொண்டிருந்ததாக மாணவர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த காலங்களிலும் இத்தகைய ராணுவப்பிரசன்னம் பல்கலைக்கழக சூழலில் நிலவியோது மாணவர்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டனர். மாணவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதுடன் அவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்திருந்தன.
தற்போது மீண்டும் ராணுவப் பிரசன்னம் யாழ். பல்கலைக்கழக சூழலில் ஏற்படுமானால் மீண்டும் மாணவர்கள் தற்போது உள்ளதைவிட அதிக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இரா.சம்பந்தன் தான் தனி ஈழம் கோரவில்லை


தனி ஈழம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து வானொலியொன்று கருத்து கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

படையினரின் அத்துமீறல்களால் கிளி மக்கள் அவதி.


கிளிநொச்சி கிருஷ்ணபுர மக்கள் சிறஙீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரின் தொடரும் கெடுபிடிகள் கரணமாக அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி  கிருஷ்ணபுர மக்கள் தெரிவிக்கின்றார்.
கிருஷ்ணபுரம் கிராம அலுவலர் அலுவலகத்துக்கு அண்மையாக உள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றினுள் நிலைகொண்டுள்ள படையினரே தொடர்ந்து கிருஷ்ணபுரம் மற்றும் அதை அடுத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மாற்று வலுவுள்ள (அங்கவீனர்கள்) போராளிகளின் புனர்வாழ்வு நிலையமாக இருந்த நவம் அறிவுகூடம் காணப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள படையினரே இவ்வாறு இடையூறை ஏற்படுத்துவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இரவு நேரங்களின் வீடுகளுக்குள் அத்துமீறி பிரவேசிப்பதாகவும், காணிகளுக்குள் வந்து மறைந்திருப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள், இது சம்பந்தமாக கேள்வி எழுப்பியபோது அது தமது பயிற்சியின் ஒரு பகுதி என படையினர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் கூறினர்.
படையினர் தமது வீடுகள் மற்றும் காணிகளுக்குள் தங்கியிருப்பதால், தாம் அச்சத்துடன் இரவைக் கழிக்க வேண்டியுள்ளதாக, அந்தப் பிரதேச மக்கள்   செய்தியாளரிடம் மேலும் கூறினர்.
இது மட்டுமன்றி ஆயுதம் தரித்த படையினர் இவ்வாறு இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பிரவேசிப்பதால், குழந்தைகள் பெண்கள் அச்சத்துடன் இரவைக் கழிக்கதாக தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத கிராம அமைப்பொன்று, இதற்கு முன்னரும் கிறிஸ் பூதம் என்னும் பீதியை மக்கள் மத்தியில் படையினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர் எனச் சுட்டிக்காட்டினர்.
ஆனைத்துலக ரீதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் படைப் பயிற்சி முகாம்களை நடாத்திக் கொண்டிருக்கும் ஒரேயொரு படையினர், சிறீலங்கா படையினராகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், கிளிநொச்சியில் மட்டுமன்றி தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் தமது ஆக்கிரமிப்பை பலப்படுத்த படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சிக்கு எளிய பரிகாரம் இதோ!


பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பின்வரும் பரிகாரங்களை செய்வதால் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம்.
ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம்.
எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும்.
ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.
நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

ஐபோனிற்க்கு போட்டியாக LG இன் HD LCD!



ஸ்மார்ட் போன் களில் அப்பிளின் ஐ போனுக்கு தனிச்சிறப்புக்கள் உண்டு. அதிலும் அதன் அதி துல்லியமான ரெட்டீனா திரைக்கு தனி ரசிகர்களே உண்டு.
அத்தகைய அப்பிள் ரெட்டீனா திரைக்கு சவால்விடும் வகையில் அதி துல்லிய எச்.டி எல்.சி.டி திரையை தனது ஸ்மார்ட் போன்களுக்காக தென்கொரியாவின் எல்.ஜி (LG) நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த எல்சிடி பேனல் மூலம் 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தில் காட்சிகளை துல்லியமாக பார்க்க முடியும்.
இத் திரை இவ் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைக்கு வெளிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

facebook இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் 3 லட்சம் பேர்ள்


எதிர்வரும் ஜூலை மாதம் உலக அளவில் குறைந்தது 3 லட்சம் பேர் இணைய இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை dcwg.org என்ற முகவரியில் ஓர் இணையத்தளத்தினை அமைத்துள்ளது.
இத்தளத்திற்கு சென்று உங்களது கணணி மால்வேர் வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம். டி.என்.எஸ் சேஞ்சர் (DNS Changer) மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டொலர் பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர்.
இந்த வைரஸ் பாதித்த கணணி மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ் நாம் காண விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச் செல்லும். அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள் தரப்பட்டு மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து மாற்றிக் கொள்பவர்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் திருடப்பட்டு, அதன் மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் டொலர் என எப்.பி.ஐ மதிப்பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன் சேவையை எப்.பி.ஐ இதற்கென அமைத்த இணையத்தளம் தருகிறது. அப்படியும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால், பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். ஜூலை மாதம் இவர்களால் தாங்கள் விரும்பும் இணையத்தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ செய்தியாளர் ஜென்னி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 29 மே, 2012

யாழில் விடுதி உரிமையாளருக்கு நீதிமன்றம் பிடியாணை!


யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது.

யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.பி.எல்.வெற்றி…பிறந்த மேனியை காட்டிய பிரபல நடிகை



ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதால், நடிகை பூனம் பாண்டே இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
21 வயது பூனம் பாண்டே
21 வயதான நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
மீண்டும் அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி வெற்றி பெற்றால் `நிர்வாண போஸ்’ கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை தோற்கடித்த `கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது.
நிர்வாண போஸ்
அதைத்தொடர்ந்து, இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் 

பாலியல் சேட்டை 61 வயதுப்பிக்கு கைது


10 வயது சிறுமியை சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய காவி போர்த்திய பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மஹியங்கனை, 51ஆம் கட்டை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சிறுமியை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய 61 வயதான காவி போர்த்திய பிக்கு இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

TNA முன்நாள் MP யயிலில்


கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்றைய தினம்மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் பொலிஸார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சியெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர்.
பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு இப்பிரச்சினையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிஸாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பொது மக்கள் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் நீதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

4 பேர் கோப்பாயில் கைது


யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் எந்த ஆவணங்களையும்வைத்திருக்காமையினாலும் இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பேர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் யாழ். நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இவர்கள் யாழில் நடைபெறும் கொள்ளைச் சந்தேக நபர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கோப்பாய் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சந்தேகத்திற்கிடாக முறையில் நடமாடிய நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணையை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளே தமிழர்களின் பாதுகாவலர் ஏற்றுக் கொள்ளும் புத்த பிக்கு



தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
போரின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது.
மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல், தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம்பெற்றன.
இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன.
முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டன. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது.
உள்நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைவு காண்பிக்கப்படவில்லை.

திங்கள், 28 மே, 2012

மாணவி துஸ்பிரயோகம் ஆசிரியர் கைது


மாணவ, மாணவியர் 16 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மாவனெல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவரை அடுத்த 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியரின் நடத்தை குறித்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதிகார சபையின் பொலிஸார் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அவுஸ்ரேலியாவிறக செல்ல முற்பட்ட 113 கைது


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட 113 இலங்கையர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை அவுஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சித்த ஆறு முகவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
நீர்கொழும்பு மற்றும் காலி முகத்திடல் ஆகிய பகுதிகயில் வைத்து இன்று (28) அதிகாலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கடல் பகுதிக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் டொல்பின் வர்க்க வான்கள் ஏழு என்பன குற்ற விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா செல்லவென ஒரு நபரிடம் தலா இரண்டு லட்சம் ரூபா பணம் முகவர்களால் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடம் பிரதான முகவர் 316 லட்சம் ரூபா பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கண் திருஷ்டிக்கு உன்ன வழி



கண் திருஷ்டி என்பது மனதில் பொறாமை கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவு ஆகும். இதனால் காரிய தடை, சிக்கல்கள், துன்பங்கள் ஏற்படுமென நம்பப்படுகிறது.
கண் திருஷ்டிக்கு என்ன செய்யலாம்?
எதிர்மறையான பார்வைகளின் கவனத்தை கலைத்து அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் கண்திருஷ்டி பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

வரப்போகிறது பேஸ் புக் ஸ்மார்ட் போன்



முன்னனி சமூக வலையமைப்பான பேஸ்புக்தனது வளர்ச்சியை இணையத்துடன் மாத்திரம் நிறுத்திவிடாது இலத்திரனியல் உற்பத்தியிலும் தடம்பதிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களை வளைத்துப் போட்டுள்ளது ஃபேஸ்புக்.
இதுவரை ஏனைய ஸ்மார்ட் போன்களில் வெறும் அப்ஸ் ஆக மாத்திரம் வலம் வந்த ஃபேஸ்புக், தற்போது ஸ்மார்ட் போனாக வடிவெடுக்கவுள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஏனைய சமூகதளங்களுக்கு பேஸ்புக் பாரிய தலையிடியாக உள்ள இந் நிலையில், இதன் ஸ்மார்ட் போன்கள் அப்பிள், சம்சுங் நிறுவனன்களுக்கு சவாலை ஏற்படுத்துமென எதிர்பர்க்கப்படுகிறது.

பெண்கள் கணவரிடம் மறைக்கவேண்டியது



காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் பெண்கள் தங்கள் கணவரிடம் சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.
அதில் முக்கியமாக பெண்கள் தமது பெண் தோழிகளின் மொபைல் இலக்கங்களை கணவரிடமோ, அல்லது கணவரின் மொபைல் இலக்கத்தை நண்பிகளிடமோ பகிர்ந்து கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக உங்கள் நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ஆபத்தில் முடிந்துவிடும். ஏனென்றால் அவர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். தவறான உறவுக்கும் வழிவகுத்துவிடும். நாம் எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதில் ரொம்பவே கவனமா இருக்கணும்.
என்று கூறுகிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
எச்சரிக்கையா இருங்க தோழிகளே!

மரணச் சனி நடக்கும் போது மடடாயம் மரணம்



ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது நான்கு முறை ஏழரைச் சனி வரும்.
முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள், இரண்டாவது முறையாக வருவதை பொங்கு சனி என்று சொல்வார்கள். அதற்கடுத்து 3வது முறையாக வருவதை மரணச் சனி என்று சொல்வார்கள்.
மரணச் சனி நடைபெறும் போது மரணம் ஏற்படுமென பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அது அப்படி கிடையாது. பிறக்கும் போது சனி பகவான் யோகாதிபதியாக இருந்தார் என்றால், 4வது சனியையும் கடந்தும் உயிர் வாழலாம்.
அதனால், 3வது சனியை மரணச் சனி என்று சொல்ல முடியாது. 3வது சனி சில இடையூறுகளைக் கொடுக்கும். சின்னச் சின்ன பொருள் இழப்புகள், சிறிய அளவில் மரண பயம் போன்றெல்லாம் இந்த போக்கு சனி கொடுக்கும்.
ஆணவத்தில் பறந்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தட்டு தட்டி அவர்களின் ஈகோவை குறைப்பதுதான் சனீஸ்வர பாகவானின் வேலை. இதுபோல சனி பகவான் மாறி மாறி தனது வேலையைச் செய்து கொண்டிருப்பார்.

8 வயது கல்லூரி மாணவி கற்பளிப்பு



தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி போட்டுடைத்தாள். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கண்ணைக்கட்டி மாணவி கற்பழிப்பு



மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறைப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த இப்பாடசாலை மாணவியை அதேபகுதியினை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கண்களையும் கைகளையும் கட்டி மறைவான இடத்திற்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிலாவத்துறை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த நிலையில் சிறுமி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை மாலைகொண்டுசெல்லப்பட்டுள்ளார்
இதேவேளை இந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிலாவத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காவல்துறயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் ஏ. யூட்சன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 மே, 2012

றிசாட்டுக்கு எதிராக மன்னாரில்ஆர்ப்பாட்டம்



மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது இடம்பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடாளமன்ற உறுப்பினர்கள் மக்கள்உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்துகொண்டு தங்கள்உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் றிசாட்டின் கருத்திற்கு எதிரான பதாதைகளையும் கோசங்களையும் தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டுள்ளார்கள்,
சர்வமத ஒற்றுமையினை சாகடிக்கநினைக்காதே,றிசாட்டே பேசகற்றுக்கொள், றிசாட்டே உனது அரசியல்அராயகம் ஒழிக்க எம்நிலங்களை அபகரிக்காதே,போன்ற பதாதைகள தாங்கியவாறு மக்கள் றிசாட்பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் அருண்பாண்டியன்


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,
தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.
ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.
யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.
இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

திருநங்கை மிஸ் கனடா ஆகும் வாய்ப்பை இழந்தார்



மிஸ் கனடா அழகிப் போட்டியில் திருநாங்கையான Jenna Talackova பங்கேற்று சர்ச்சைக்கு உள்ளானார்.
திரு நங்கை என்ற காரணத்தால் குறித்த அழகிப்போட்டியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட Jenna Talackova , பின்னர் மீண்டும் போட்டிக்குள் உள்வாங்கப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், Jenna Talackova ஆல் பிரகாசிக்க முடியாமல் போன நிலையில், மிஸ் கனடா அழகி விருதை 26 வயதாகும் Biniaz தட்டி சென்றார்.
Biniaz, தனது வாழ்த்து செய்தியில், Jenna Talackova க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.

வெள்ளைக்காரனை அசர வைத்த இந்திய நாற்று



விஞ்ஞானி ஐசக் நியூட்டனால் போடப்பட்டு கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு வெள்ளைக்காரர்களை வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய நாற்று.
கடந்த 350 ஆண்டுகளாக டைனமிக்ஸ் தியரியில் உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.
ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இது குறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினார்கள்.
ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.
இது இந்தியர்களை தலை நிமிர்த்தும் செய்தியாகும்

சிங்கம் 2 இல் கலக்க வருகிறார் ஆச்சி மனோரமா



இயக்குனர் ஹரி இயக்கும் ”சிங்கம் 2” இல் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆச்சி மனோரமா.
கோயில் வழிபாட்டுக்கு சென்ற இடத்தில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதால் இதுவரை அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் ஆச்சி.
தற்போது காயம் குணமடைந்து வழமைக்கு திரும்பியுள்ளார் மனோரமா. அவரை அணுகி ஹரி படத்தில் நடிப்பதற்கு சம்மதம் கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டாராம் மனோரமா.
மனோரமா இது வரை 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ்ஸில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னி பூக்களுடன்



யாழ் இந்துக்கல்லூரி மாணவன் உமாகரனின் கண்ணீர்ப்பூக்கள், கன்னி எனும் இரண்டு கவிதை நூல் வெளியீட்டு விழா இந்துக்கல்லூரி குமாரசாமி மண்ணடபததில் (23.05.2012) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற்றது

மங்கள விழக்கேற்றலை தொடர்ந்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தனது தலைமையுரையில் 3ன்று வயதில் திருஞான சம்மந்தர் தேவாரம் பாடினார் உமாகரன் தமிழ்த்தினப் போட்டியில் 1லாம் இடத்தினை பெற்ரதுடன் 15 தங்கப்பதக்கம்களும் 3முறை முறை தேசிய ரீதியில் 1லாம் இடம் பெற்றதுடன் மொத்தமாக 25 ந்து 1லாம் இடங்களையும் யாழ் இந்துக்கல்லூரி விவாத தேசியமட்த்தில் 1லாம் இடத்தில் தற்போது காணப்படுவதற்கு உமாகரனின் அயராத உளைப்பும் விவாத திறமையுமே காரணம் என தெரிவித்தார்

சோமாலியர்களின் வாழ்க்கையை சித்தரிக்கின்ற கண்ணீர்ப்பூக்கள், தனது எண்ணங்களை பிரதி பலிக்கின்ற கன்னி ஆகிய இரண்டு கவிதை நூல்களையும் AAA மூவிஸ் மற்றும் ur friend foundation தலைவரும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் செவ்வேள் வெளியிட்டு வைக்க உமாகரனின் பெற்றோர் பெற்றுக் பொற்றுக் கொண்டனர்

இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக உதவிவிரிவுரையாழர் செல்வ மனேகரன் ஸகந்தவராய கல்லூரி ஆசிரியர் மகாலிங்கம் இராமகாதன் கல்லூரியின் ஒய்வு பெற்ற ஆசிரியர் கலாபூசனம் திருமதி .வை.கணேசப்பிள்ளை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முகாமைத்துவ பேராசிரியர் தேவராஜா இந்துக்கல்லூரி ஆசிரியர்ள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

வெற்றிவிழாவில் மக்களை கொண்றவர்களுக்கு உயர் விருதுகள்



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலிமுகத்திடலில் கடந்த 19ஆம் திகதி மாபெரும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 15 படையினருக்கு இலங்கையில் படையினருக்கு வழங்கப்படும் அதி உயர் விருதான “பரம வீர விபூஷண“ என்ற விருது வழங்கப்பட்டது.
போர்க்களத்தில் தமது உயிரை மதிக்காமல் தீரத்துடன் செயற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற 15 பேரில் ஒருவர் கூட உயிருடன் இல்லை.
1981ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எட்டே எட்டுப் படையினருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் சுமார் 24 ஆயிரம் படையினரை இழந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவர்களில் 8 பேருக்கு மட்டும் தான் இந்த விருது கடந்த 19ஆம் திகதிக்கு முன்னர் வரை கிடைத்திருந்தது.
கடந்த 19ஆம் திகதி விருது பெற்றவர்களில் இருவர் இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியில் இடம்பெற்று மரணத்தைத் தழுவியவர்களாவர்.
ஏனைய பெரும்பாலானோர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பணிக்காக இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருது வழங்கலின் போது, அரசாங்கம் ஆழ ஊடுருவும் அணி குறித்து வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினால் உருவாக்கப்பட்ட ஆழ ஊடுருவும் அணிகள் மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலும், நான்காவது கட்ட ஈழப் போரை வெற்றி கொள்வதிலும் முக்கியமான பங்கு வகித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2002ல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னதாக, 2001 செப்டம்பர் 26ம் திகதி புதுக்குடியிருப்புக்கு அருகே ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளின் கடல், வான், தரைப் படைப்பிரிவுகளின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இவர் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இவர் மீதான கிளைமோர் தாக்குதல் ஒட்டுசுட்டானில் இடம்பெற்றதாகவே புலிகளால் தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மையில் அந்த தாக்குதல் நடந்த இடம் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில், புதுக்குடியிருப்பு நகருக்கு மிகவும் அருகில் தான்.
அப்போது விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கியது புதுக்குடியிருப்பு.
அதற்கருகே வரை ஆழ ஊடுருவும் அணிகள் நுழைந்தன என்றால், அது புலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தி விடும் என்பதால் தான் ஒட்டுசுட்டான் என்று அவர்கள் அறிவித்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னரே புதுக்குடியிருப்பை உயர்பாதுகாப்பு வலயமாகப் புலிகள் உருவாக்கினர்.
அதைவிட, மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நெடுங்கேணியிலும், இன்னொரு மூத்த தளபதி கேணல் ஜெயம் மன்னாரிலும் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர்.
மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதியில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிய ஆழ ஊடுருவும் அணி, நான்காவது கட்ட ஈழப்போரின் அச்சாணியாகவே மாறியது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் அகன்ற போர் அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தரப்பை ஊடறுக்க விடாமல் புலிகள் முன்னரங்கை அமைத்துச் சண்டையிட்டனர்.
அப்போது புலிகளின் பின்கள விநியோகத்தையும், முக்கிய தளபதிகளையும் இலக்கு வைத்து ஆழ ஊடுருவும் அணிகள் கிளைமோர் தாக்குதல்களை நடத்தியதுடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக பெரும் நெருக்கடி கொடுத்தது.
இத்தகைய தாக்குதல்கள் நடந்த பின்னர், அந்த இடத்தைச் சுற்றிலும் காடுகளில் தேடுவதற்கும் புலிகள் தமது ஆளணி வளத்தைச் செலவிட வேண்டியிருந்தது.
இது முன்னரங்கில் இருந்த புலிகளின் கவனத்தை, அவ்வப்போது பின்களப் பகுதி நோக்கித் திரும்ப வைத்தது.
முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வரும் வரையில், இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் செயற்பட்டன.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்த அணியினர் மக்களோடு மக்களாக கலந்து விட்டிருந்ததாகவும் கூடத் தகவல்கள் வெளியாகின.
புலிகளால் எதுவும் செய்ய முடியாத கட்டம் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்ற கருத்து வலுவாக உள்ளது.
புலிகளின் மரபுவழிப் போர்ப் பலத்தை ஒன்று குவிய விடாமல் திசை திருப்பி, காடுகளில் அவர்களை அலைய விட்டு, போராற்றலை பலவீனப்படுத்த ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் இராணுவத்துக்குக் கைகொடுத்தன.
புலிகளின் பல தளபதிகள் இந்த அணியினரின் கிளைமோர் தாக்குதல்களுக்கு இலக்காகி மரணமாகினர்.
வடபோர்முனைத் தளபதிகளில் ஒருவராக இருந்த லெப்.கேணல் மகேந்தி, இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் போன்றவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள்.
ஆழ ஊடுருவும் அணிகளின் தாக்குதல்கள் ஒரு கட்டத்தில் புலிகளின் தளபதிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தி முடக்கி வைக்கின்ற அளவுக்கு நெருக்கடியினைக் கொடுத்தது.
போர்நிறுத்த காலத்திலும் கூட இந்த அணியின் செயற்பாடுகள் வன்னிப் பகுதிக்குள் குறையவில்லை.
அப்போதும் சரி, போர் நடந்து கொண்டிருந்த போதும் சரி, இத்தகையதொரு அணி தம்மிடம் இல்லை என்றும் புலிகளின் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் படைத்தரப்பு கூறிவந்தது.
போர் வெற்றி விழாவில் அதிஉயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களில் மேஜர் லலித் ஜெயசிங்கவும் ஒருவர்.
2008ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று அப்போது புலிகள் வசம் இருந்த ஒட்டுசுட்டான் பகுதியில் நடந்த மோதலில், 3வது சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த இவர் கொல்லப்பட்டார்.
ஆழ ஊடுருவும் அணிகளுக்குப் பொறுப்பாக இருந்த இவர், மாவீரர் நாளன்று புலிகளின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தாக்குவதற்காக ஒரு வாரம் முன்னதாகவே வன்னிக்குள் ஊடுருவியவர்.
முன்னரங்கில் இருந்து 40 கி.மீ உள்ளே ஊடுருவிய இவரது அணி, தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோது, ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் தேடுதல் நடத்திய புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்கியது.
இந்த மோதலின் போது லெப்.கேணல் லலித் ஜெயசிங்க மரணமானார்.
இவர் மரணமானபோது அவர் பற்றிய விரிவான தகவல்களை இராணுவத் தலைமையகம், இணையத்தளத்தில் வெளியிட்ட மறுநாளே அதை நீக்கியது.
ஆழ ஊடுருவும் அணியின் செயற்பாடுகளை மறைப்பதற்கே அந்த விபரங்கள் நீக்கப்பட்டன.
விருதுபெற்ற இன்னொருவர் 3வது சிறப்புப் படைப்பிரிவின் லான்ஸ் கோப்ரல் சந்தன.
இவர் மாங்குளம் கிளிநொச்சி வீதியில் கிளைமோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் செல்லும் போது, மாங்குளம் துணுக்காய் வீதியைக் கடக்க முயன்றபோது புலிகளிடம் மாட்டிக் கொண்டவர். அந்த மோதலில் அவர் மரணமானார்.
நான்காவது கட்ட ஈழப்போர் காலத்திலும், போர் நிறுத்த காலத்திலும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்கள் தனியே விடுதலைப் புலிகளுக்கு மட்டும் இழப்புகளை ஏற்படுத்தவில்லை.
மாங்குளம் அருகே நடந்த ஒரு கிளைமோர் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்லப்பட்டார்.
இன்னொரு தாக்குதலில் கிளி பாதர் என்று அழைக்கப்படும், வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் இல்லத்தின் பணிப்பாளரான கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டிருந்தார்.
அதேபோல பொதுமக்கள் பயணம் செய்த வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின.
இதற்கு இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகளே பொறுப்பு என்று விடுதலைப் புலிகள் கூறினர். அரசாங்கமோ அதை மறுத்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னரணில் இருந்து 30, 40 கி.மீ தொலைவுக்குப் படையினர் எவ்வாறு செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.
விடுதலைப் புலிகளுக்குள் நிலவும் உள்முரண்பாடுகள்தான் அங்கு நடக்கும் கிளைமோர் தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் படைத்தரப்பு கூறியது.
இதனால் தான் மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்ட போது அவர் பற்றிய தகவல் குறிப்புகள் இராணுவ இணையத்தளத்தில் இருந்து அவசரமாக நீக்கப்பட்டன.
இப்போது போர் முடிந்து விட்டது. ஆழ ஊடுருவும் அணிகள் மறைந்து ஒளிந்து ஊடுருவ வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களின் முகத்தை மறைக்க வேண்டிய தேவையும் இல்லை.
அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் புலிகள் அல்லாதவர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவ்வாறான சம்பவங்களுக்கு ஆழ ஊடுருவும் அணி பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
இப்போதைய சூழலில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட விவகாரம் போர்க்குற்றமாகவே பார்க்கப்பட்டு விடும்.
ஆனாலும் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச அளவில் பேசப்படும் நிலையில், ஆழ ஊடுருவும் அணியை அரசாங்கம் பகிரங்கப்படுத்தியது துணிச்சலான விடயம்தான்.

தமிழரசுக்கட்சி வருங்காலத்தில் மாகாத்மா காந்தியாம்


இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை மறுதலிக்குமாக இருந்தால், இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் ஆரம்பித்து, அவற்றை அடையும் வரை போராடுவோம் என தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம்:
1. அர்த்தமுள்ள அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஊடாக வடகிழக்கு பிராந்தியத்தில் எமது மக்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சியதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இப்படியானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டும் கூட அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமையினால் இலங்கையின் தேசியப் இனப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
மேலும் காலத்தை வீணடிக்காமல் இந்த அடிப்படையிலும் முஸ்லிம் மக்களது அபிலாஷைகளை அங்கீகரிக்கும் வகையிலும் அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் இணங்க வேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு:
2. வடகிழக்கு பிராந்தியத்தில் போர்ச்சு10ழலினால் இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வீட்டு வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
போரினால் நிர்க்கதியாக்கப்பட்ட வாழ்விழந்த பெண்கள் (தலைமை தாங்கும் பெண்கள்), பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளர்கள் ஆகியோருக்கு புனர்வாழ்வும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.
இந்தக் கடமைகளின் மேற்கொள்வதற்கு மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இனமத அரசியல் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல்:
3. வடகிழக்குப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் நில உரிமைஇ வாழ்வாதார உரிமை என்பன சுதந்திரமாக செயற்படுத்தும் நிலமை உருவாக வேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக நிற்கும் இராணுவத் தலையீடு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். இதே போன்று குடியியல் நிர்வாகத்தில் உள்ள இராணுவத் தலையீடு முற்றாக அகற்றப்பட வேண்டும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் தலைவிரித்தாடும் மக்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கில் தமிழ் மொழி தெரியாத சிங்கள இராணுவ ஆளுனர்கள், தமிழ் மொழி தெரியாத சிங்கள அரச அதிபர்கள், சிங்கள அதிகாரிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.
காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு:
4. காணாமல் போயுள்ளவர்கள், சரணடைந்த பின் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக விசாரணைகள் நடாத்தப்பட்டு இவற்றுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரண சான்றிதல் மற்றும் பொருத்தமான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்பு வாழ்வை ஏற்படுத்துதல்.
5. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் முழு நாடும் அல்லல்படும் சூழ்நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருமானம் வாழ்வாதாரங்களை இழந்த வடகிழக்கு பிராந்திய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வேலையற்றவர்களுக்கும், விசேஷமாக வடகிழக்கு பிராந்தியத்தில் வாழும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
பொதுச் சேவையில் 5 வீதத்திற்க்கு குறைந்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். அதனால் பொதுச் சேவையில் அவர்களுடைய விகிதாசாரம் தேசிய விகிதாசார அடிப்படையில் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும்.
புலம் பெயர்ந்த உறவுகளுக்கு:
6. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை உணர்ந்து தமிழ் மக்களுடைய நம்பிக்கையுள்ள பிரதிநிதிகள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு அவற்றை அடைவதற்கு ஆதரவாக செயற்படுமாறு புலம் பெயர்ந்த உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்தோடு மீள்குடியேற்ற விடயங்களில் எமது மக்களுக்கு வேண்டிய பொருள் உதவி, நிபுணத்துவ உதவி போன்றவற்றை ஒரு குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழங்க முன்வர வேண்டுமென்றும் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சர்வதேச சமூகத்திற்கு:
7. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை, கௌரவம், சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
தாயக மக்களுக்கு:
8. எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறோம். 
சர்வதேச விசாரணை

9. இலங்கையில் 2009 மேயில் முடிவடைந்த போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்வின் சிபாரிசுகளின் படி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, சர்தேவ விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் செய்யப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாடு தவிர்ந்த ஏனைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு மார்ச் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாட்டில் விசுவாசம், புரிந்துணர்வு ஏற்பட்டு கௌரவமான சமாதானம் ஏற்படும்.
சாத்வீகப் போராட்டத்துக்கு அறிவித்தல்:
இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு உறுதியுடன் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

8 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு


சாவகச்சேரி - நாவற்குழி வடக்கு பகுதியில் நேற்றிரவு 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

ராசதுறை சாந்தன் என்ற 19 வயது இளைஞன் குறித்த தம்பிராசா சபித்தா என்ற சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 

சந்தேகநபர் நாவட்குழி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பாடசாலை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. 

யாழில் சினீமாப்பாணியில் இளம்பெண் கடத்தல்



யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பால்ப்பண்ணை வீதியில் பிளசர் ரக மோட்டார் சைக்கிளொன்றில் தந்தையுடன் பயணித்த யுவதி ஒருவர், ஹயஸ் வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா அர்ச்சனா அம்பிகா என்ற 23 வயதான குடும்ப பெண் ஒருவரே மேற்படி சம்பவத்தில் இன்று காலை கடத்தப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…
இன்று காலை குறித்த யுவதியும், தந்தையும் பால்ப்பண்ணை வீதியால் பயணித்துக் கொண்டு இருக்கையில், ஆலடி சுடலை பகுதியில், மறைவில் இருந்து புறப்பட்ட ஹயஸ் வான் மோட்டார் வண்டியின் குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்து குதித்தவர்கள், தந்தையை தள்ளி தெருவோரத்தில் விழுத்திவிட்டு குறித்த யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
கடத்திய வானின் வாகன இலக்கம் யுவதியின் தந்தையால் கோப்பாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.