சிலருக்கு கைதொலைபேசி இருந்தும் அழைப்பு வருவதை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.அதன் பொருட்டு அவர்களுக்காக புதிய தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடைவீதிகள், பேருந்து, ரயில் பயணங்களில் நமக்கு அழைப்பு வந்தாலும் தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் டாட்ரூ ஒன்றை உடலில் ஒட்டிக்கொள்ளலாம் அதன் மூலம் கைத்தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளை அறிந்து கொள்ள இந்தத் தொழில்நுட்பம் உதவுகின்றது.
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
தமிழச்சிறுமியின் உணர்ச்சி நாடகம்
கண்ணில் அகிப்பிழம்போடு அநீதி இழைத்த அரசுக்கெதிராய் வீரத்தமிழச்சி தன் தலைமையில் நீதிப் போர்தொடுத்து அந்த தேசத் தலைநகரைச் சாம்பலாக்கினாலோ! அவள் சினத்தின் உணர்ச்சிப்பிழம்பாய் கண்கள் அகி போல ஆனதால், கண்ணகி என பெயர் கொண்டாலோ! எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
இந்தத் தமிழச்சிறுமியின் உணர்ச்சி பாவத்திலும் வலிமைத் தமிழின் உரத்தகுரளிலும் அகியாக கண்ணகியாக! செம்மொழி தொன்மை இலக்கியங்கள் நம் வேர்களின் காப்புகள். அது காக்கும் தமிழ்க் கலைச் செல்வி திவ்யா அவர்களுக்கும், பங்கேற்ற கலைச்செல்வங்களுக்கும்http://artskarua.blogspot.com/ செய்தித்தளத்தின் வணக்கங்கள் வாழ்த்துக்கள் .
6 வயதான சிறுவன் ஒருவனின் முதுகில் ஆமை ஓடு போல கட்டி
6 வயதான சிறுவன் ஒருவனின் முதுகில் ஆமை ஓடு போன்ற தோற்றத்தில் அசுர வளர்ச்சிடைந்திருந்த கட்டியை பிரிட்டனை சேர்ந்த வைத்தியர்கள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த டைடியர் மொன்டால்வோ எனும் இச்சிறுவன் பிறந்தது முதல் இத்தகைய உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனை ஆமை சிறுவன் என பலர் வர்ணித்தனர்.
இச்சிறுவனுக்கு மேற்படி கட்டியானது தீவிரமான வளர்ச்சியை காட்டியாது. ஆனால் அதனை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றுவதற்கு அவனது தாயிடம் போதிய பணம் இருக்கவில்லை.
இந்த பாரிய கட்டியினால் சிறுவனின் கல்வி வாழ்க்கை பாதிக்கப்படுமென பெற்றோர்கள் அச்சம் கொண்டனர்.
ஆனால் பிளாஸ்திக் சத்திர சிகிச்சை நிபுணரான நெயல் பல்ஸ்ருரோட், குறித்த சிறுவனின் பிரச்சினையை அறிந்து, மேற்படி சிறுவனுக்கு இலவசமாக சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்வந்தார்.
டைடியர் மற்றைய சிறுவர்களைப் போல் தற்போது வளர்ந்து வருகின்றான்.
‘டைடியரின் நிலைமை மிகவும் மோசமானதாக இருந்தது. இதைப்போன்ற ஓரு சந்தர்ப்பத்தை நான் எதிர்கொள்ளவில்லை. அவனது உடலில் முக்கால்வாசி பகுதி இந்த கட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர் பல்ஸ்டுரோட் தெரிவித்துள்ளார்.
இனப்பெருக்கத்தின் சூப்பர்ஸ்டார் யார் தெரியுமா…?
இந்த பூமியில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளினதும் ஜீன்களில் அடிப்படையில் கடமையாக பதிக்கப்பட்டிருப்பது இனப்பெருக்கமே. ஓர் இனம் அழியாது பூமியில் நிலைத்து வாழ இனப்பெருக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒவ்வொரு ஜீவராசியும் தமக்கென சிறப்புத்தேர்ச்சி வாய்ந்த இனப்பெருக்க முறையை பயன்படுத்துகின்றன. அவ் வகையில் உலகிலேயே இனப்பெருக்கத்தின் சூப்பர் ஸ்டார் என பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய உயிரினம் எது தெரியுமா?
கரப்பான் பூச்சி!
நம்ப முடிகிறதா? மனிதனுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பூமியில் அழிவில்லாது வாழ்ந்து வருகிறது இந்த கரப்பான் பூச்சி இனம். இது ஏன் இனப்பெருக்கத்தின் சூப்பர்ஸ்டார் என்று சொல்லப்படுகிறது தெரியுமா?
ஒரு முறை உடலுறவு கொண்ட பெண் கரப்பான் பூச்சியால் 1000 இற்கு மேற்பட்ட குஞ்சுகளை பொரிக்க முடியும். காரணம், உடலுறவின் போது பெறப்படும் ஆணின் விந்தணுக்களை தனது உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண் கர்ப்பான் பூச்சிக்கு உண்டு. தேவைப்படும் போது சேமிப்பில் இருந்து விந்தணுவை எடுத்து தனது கருமுட்டையோடு இணைத்து குஞ்சை உருவாக்கமுடியும்.
இனப்பெருக்கத்தின்போது ஆண் கரப்பான் பூச்சியில் இருந்து சுரக்கும் ஒருவித இரசாயன திராவகம் பெண் கரப்பான் பூச்சியின் உடலுக்கு நல்லதில்லை என்பதால் தான் இந்த விந்தணு சேமிப்பு அமைப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட பெண் கரப்பான், தனித்து ஓர் இடத்தில் விடப்பட்டால் அதனால் அங்கு தன் இனத்தை சிறு காலத்தில் இலட்சம் அளவுக்கு பெருக்கமுடியும்.
இதனாலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்தின் சூப்பர்ஸ்டார்கள் என சிறப்பிக்கப்படுகின்றன.
நீரில் மிதக்கும் யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தில் மாதாந்தம் சுமார் 6 லட்சத்து 91 ஆயிரம் லீற்றர் மதுபானம் விற்பனையாவதாகவும் இதில் யாழ்.மதுவரிப்பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே அதிகமான மதுபானம் விற்பனை செய்வதாகவும் மதுவரித் திணைக்கள யாழ்.அலுவலக அதிகாரி எஸ்.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
மாதாந்தம் சராசரியா 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகின்றது. 4 லட்சத்து 9 ஆயிரம் விஸ்கி பியர் பிரான்டி ஜின் ரம் என ஏனைய வகை மதுவிற்பனையாகின்றது.
யாழ்.மதுவரி நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜனவரியில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும் பெப்பிரவரியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபானமும் விற்பனையாகியுள்ளது.
சுற்றுலப்பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு அதிகமாக வரும் காலத்திலேயே அதிகமாக சாராயம் விற்பனையாகியுள்ளது. சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இத்தகைய காலத்தில் அதிகமாக விற்னையாகியுள்ளது என்றார்
குறிப்பாக வயது வந்தவர்களுக்கு இணையாக 21 வயதிற்குட்பட்டவர்களும் மதுபானம் அருந்துவதாக மேலும் ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு மாதங்களில் வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி…?
வேலை வாய்ப்பற்று இருக்கும் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தொலைத் தொடர்புகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் வேலைத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 23698 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
6 மாத கால பயிற்சிக்கென அவர்கள் பிரதேச செயலகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பயிற்சிக்கு உட்படுத்தப்படாத பட்டதாரிகள் இன்னும் 6000 பேர் நாடு முழுவதும் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரச நியமனம் வழங்கப்படும் எனவும் இது குறித்து நிதி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து பணியாளர்கள்
இலங்கைப் பணியாளர்களை கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளிற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொறியியளாலர், ஹோட்டல் வேலை மற்றும் விமான நிலைய வேலைகளில் அதிக வெற்றிடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு காரணமாகும் பெற்றோர்!
யாழில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமைக்கு பெற்றோரின் கவமின்மையே முக்கிய காரணமாக இருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டார்.
யாழில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றது என்பது கூட அவர்களுக்கு தொரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது.
பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலி கால்நடைகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமை அவர்களின் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டார்.
யாழில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றது என்பது கூட அவர்களுக்கு தொரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது.
பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலி கால்நடைகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமை அவர்களின் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி, பருத்தித்துறையில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!
வடமராட்சி பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு, சின்னத் தோட்டம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை மூன்றாம் குறுக்குத்தெரு கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பதுமைமலர் (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இதேவேளை இவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, சம்பவத்தினை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரும் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வெனிற்றா ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தினை மருத்துவப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பத்தில் அழுத்தும் சாதனம்
ஓர் குடும்பத்தினர் சாதாரணமாக வருடம் ஒன்றுக்கு சுமார் 160 மணித்தியாலங்களை ஆடைகளை அழுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந் நேர விரயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உருவாகியிருக்கிறது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அழுத்தும் கருவி.
இக் கருவி மூலம் வெறும் ஒன்பது நிமிடத்தில் 35 ஆடைகளை அழுத்திவிடலாம்.
SteamRail என பெயரிடப்பட்டுள்ள இக் கருவியை பிருத்தானிய கம்பனி ஒன்று தயாரித்துள்ளது.
மடித்து வைக்கக்கூடிய கட்டமைப்பை கொண்ட இக் கருவி, நீரை ஆவியாக தெளிக்கும் இயந்திரம் ஒன்றையும், நீர் பாதுகாப்பு உடைய துணியால் ஆன அறையையும் கொண்டது.
குறித்த துணி அறையில் அழுத்த வேண்டிய ஆடைகளை மாட்டி இயந்திரத்தை இயங்கவைத்தால் போதும். இயந்திரத்தில் இருந்து வெளிவரும் சூடான நீராவி மூலன் ஒன்பதே நிமிடங்களில் ஆடைகள் அணிவதற்கு தயாராகிவிடும்.
சலவை இயந்திரத்தில் இருந்து எடுத்த ஆடைகளை நேரடியாக இதில் போட்டால் கூட, தானாகவே காயவைத்து அழுத்திவிடுகிறது இந்த இயந்திரம்.
இதன் விலை 280 பிருத்தானிய பவுன்ஸ்கள்.
தனது மாக்கற் சரிந்ததற்து ஸ்ரேயாவின் காரணங்கள்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னனியில் இருந்து வந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் தற்பொழுது சரிந்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரேயா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்…
வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல சம்பவம் நடந்து வருகிறது.
மேலும் இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் என்ன பலனை கொடுக்கும் என்று யோசிக்கிற திறமை எனக்கு இல்லை.
நான் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டபோது அது ஜெயிக்குமோ தோற்குமா என்று மதிப்பீடு செய்ய முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக நிறைய தோல்விகளை பார்த்தேன்.
மேலும் கவர்ச்சியாக நடித்து, ஆபாசமாக தெரியாமல் அழகைக் காட்டவேண்டும். நினைத்ததையெல்லாம் செய்யக் கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளின் மத்தியில் நான் நடித்த படங்களில் நான் முழு திறமையை காட்டி உள்ளேன்.
சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் வெற்றியானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.
அந்த படத்துக்காகத்தான் ஒவ்வொரு நடிகர், நடிகையும் காத்திக்கிறார்கள். எனக்கு அது மாதிரி படங்கள் நிறைய வந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
தென் கொரிய மக்களள் மத்தியில் ஜனாதிபதி மகிந்தரின் உரை
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அங்குள்ள வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பூசான் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வை பூசான் வர்த்க மற்றும் கைத்தொழில் சபை ஏற்பாடு செய்திருந்தது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கை தற்போது சகலதுறைகளிலும் துரிதமாக முன்னேறிவருவதாகவும் இலங்கையில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உருவாகியிருப்தாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கை தற்போது சகலதுறைகளிலும் துரிதமாக முன்னேறிவருவதாகவும் இலங்கையில் முதலீடு செய்ய நல்ல வாய்ப்புகள் உருவாகியிருப்தாகவும் தெரிவித்தார்.
யாழினிதா இந்த மழலை மொழி இனிதா? (வீடியோ இணைப்பு)
யாழினிது குழலினிது என்பதை உண்மையாக்குகிறார்கள் இந்த அழகான மழழைகள்…!
புதன், 25 ஏப்ரல், 2012
நடிகைகள் இலியானா,பிரியங்கா நேரடி மோதல். பாலிவுட்டில் பரபரப்பு
தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இருவருக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இருவரும் தனக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறுத்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒருவரையொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவினர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது. இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு நடிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர்பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
சினிமாவில் யார் தயவும் இன்றி தனி ஆளாக நின்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். கடவுள் தயவால்தான் இதை சாதிக்க முடிந்தது. சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது முதல் தெலுங்கு படம் ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு தைரியம் வந்து விட்டது. இவ்வாறு இலியானா கூறினார்.
வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன் -விஞ்ஞான விளக்கம்
வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது.
அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது.
அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது.
ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.
கரண்டே வேண்டாம்! குளு குளு தண்ணீர் குடிக்க நீங்க ரெடியா? புதிய வழி
கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரம், மனசு கூலா குடிப்பதற்கு ஏங்கும்…… அப்போது கைகள் அணைத்து கொள்வது குளிர்சாதன பெட்டியில் உள்ள குளிர் தண்ணீரை தான்… காரணம், வெளியில் அலுமினிய, பிளாஸ்ரிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சூழல் வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள தண்ணீர் உடல் நலத்துக்கு நல்லதல்ல, அது சமிபாடு செயற்திறனை குறைப்பதோடு, வயிறு பருமன் ஆவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
அதிலும் உணர்ச்சி மிக்க பற்களை கொண்டவர்களால் குளிராக குடிக்கவே முடியாது…
இதற்கு எல்லாம் தீர்வு என்ன…? கோடை காலங்கலில் எம்மால் கூலாக இருக்க என்ன வழி?
அதை நமது தமிழ் முன்னோர்களே சொல்லி தந்து இருக்கிறார்கள்.
அது தான் மண்பாணை குடிநீர்…!
என்ன சிரிப்பாக இருக்கிறதா…! இது முற்றிலும் உண்மை.
மண் பானையில் உள்ள குடிநீர் குளிர்ச்சியாக இருப்பதற்கான விஞ்னான விளக்கத்தை பார்ப்போம்…
மண் பானைகளில் பார்வைக்கு புலப்படாத மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இத் துளைகள் மூலம் நீர் வெளியே சிந்தாது, காரணம், அந்த அளவுக்கு அவை நுண்ணிதாய் இருக்கும்.
மண் பானையில் தண்ணீரை ஊற்றி வைத்ததும், அதில் உள்ள நுண் துளைகள் மூலம் தண்ணீர் கசிந்து பானையின் வெளி மேற்பரப்பில் படலம் போல் படர்ந்து காணப்படும்.
சுழலின் வெப்பம் அவ் வெளி மேற்பரப்பில் உள்ள தண்ணீர் படலத்தை ஆவியாக்குவதிலேயே இழக்கப்பட்டுவிடுவதால், பானையின் உள்ளே வெப்பம் செல்லாது தண்ணீர் குளு குளு என இருக்கும். அத்துடன் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீரின் வெப்ப நிலையும் மேற்படி நீர்படலத்தை ஆவியாக்குவதற்கு செலவாவதால் அத் தண்ணீர் வெளி வெப்ப நிலையை வெட மிகவும் குறைவான வெப்பநிலையில் இருக்கும்.
அத் தண்ணீரின் குளுமை, பற்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்தாது, உடலுக்கு தீங்களிக்காது அற்புதமான குளிர்மையை உங்களுக்கு தரும்.
அத்துடன் குளிர்சாதனப் பெட்டி வெளியேற்றும் வெப்பம் காரணமாக சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் கதாநாயகர்களாகவும் நீங்கள் விளங்கலாம்.
அமெரிக்காவை அடிபணிய வைக்க எமது ஆயுதங்கள் போதுமானவை: வடகொரியா
எங்களது நாட்டில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன என்று வட கொரியாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஹவுஸ் ஆஃப் கல்ச்சர் என்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பங்குபெற்ற துணை மார்ஷல் ரி யோங் ஹோ கூறுகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடமிருந்து வட கொரியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
மேலும் ஒரே அடியில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு எங்களிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என்று அவர் இராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதே போன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலை மூன்றே நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என வட கொரியா எச்சரித்திருந்ததும் குறிப்பிட.த்தக்கது
இனிப்பு குளிர் பானங்களால் குடிப்பதால் மாரடைப்பு அபாயம்!
இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
அதேசமயம் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இல்லை. தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் நிலை வருகிறது.
குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











.jpg)




.jpg)






.jpg)


.jpg)



