//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

இனிப்பு குளிர் பானங்களால் குடிப்பதால் மாரடைப்பு அபாயம்!



இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்குலேஷன் என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.
அதேசமயம் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும் பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இல்லை. தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் நிலை வருகிறது.
குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »