//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடிப்பு



லிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஸ்டெம்செல்கள் எனப்படும் குருத்து உயிரணுக்களை மாற்றியமைத்து, அவற்றை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் செலுத்தி, அதன்மூலம் எயிட்ஸ் நோயை குணப்படுத்த வாய்ப்பிருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
பரிசோதனைக் கூடத்தில் எலிகள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த முயற்சி நம்பிக்கையளிக்கக்கூடிய பலன்களைத் தந்திருப்பதாகவும், எயிட்ஸ் நோய்க்கு எதிரான மருத்துவ உலகின் போராட்டத்தில் இது முக்கிய முன்னேற்றம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களை தாக்கும் எச் ஐ வி கிருமியானது, மனித உடலில் புகுந்ததும் குறிப்பிட்ட திசுக்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பின்பு அங்கிருந்தபடி பல்கிப்பெருகி ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்செல்களை தாக்கி அழிப்பதன் மூலம் எயிட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இதை குணப்படுத்தாவிட்டால் மரணத்தில் முடியும்.
இந்த எச் ஐ வி கிருமியின் உயிர்ச்சுழலில், அவை தங்கியிருக்கும் திசுக்களை குறிவைத்துச் செல்லக்கூடிய வகையில் குருத்து உயிரணுக்களை ஆய்வாளர்கள் முதலில் மாற்றியமைத்தனர்.
இப்படி மாற்றியமைக்கப்பட்ட குருத்து உயிரணுக்களை எயிட்ஸ் தாக்கிய எலிகளின் உடலில் செலுத்திய சில நாட்களில் அந்த எலிகளின் ரத்தத்தில் இருந்த எச் ஐ வி தொற்றின் அளவு குறைந்திருப்பதையும், நோய் எதிர்ப்புச்செல்கள் அதிகரித்திருப்பதையும் இவர்கள் கண்டுபிடித்தனர்.
இதன்மூலம் குருத்து உயிரணுக்களை பயன்படுத்தி எயிட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக