//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

யாழ் மின்சார சபையின் நவீன கட்டுப்பாடு அறை: பணிகள் முடுக்கம்!



யாழ்.மின்சார சபைக்கு புதிய கட்டுப்பாட்டு அலகு ஒன்றை அமைக்கும் வேலைத் திட்டம் கொழும்பு மின்சார சபையின் விசேட தொழிற்பாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வேலைத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் 50 வீதம் பூர்த்தியடைந்துவிடும் என்று மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாட்டு அலகு வடமாகாணத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள மின்சார விநியோகம் அனைத்தையும் இந்தக் கட்டுப்பாட்டு அலகு மூலம் சீர்செய்ய முடியும்.
சுன்னாகம் மின் நிலையத்தின் ஒரு பகுதியில் இது இயங்கி வருகிறது. வடமாகாணத்தில் லக்ஷபானா மின்சாரம் விநியோகிக்கப்படும் இடங்கள் தவிர ஏனைய பகுதிகளில் மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின் விநியோகம் இடம்பெறுகின்றது.
இந்தக் கட்டுப்பாட்டு அலகை அமைப்பதன் மூலம் குறித்த பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தனித்தனியே ஆளிகள் அமைத்து மின் துண்டிப்பை மேற்கொள்ள முடியும்.
இதனால் முழு இடங்களுக்குமான மின் துண்டிப்பு தவிர்க்கப்படும்.

அனைத்துப் பகுதிகளுக்கும் 30 வரையான ஆளிகள் இந்தக் கட்டுப்பாட்டு அலகு மூலம் பொருத்தப்படும். இவ்வாறு கட்டுப்பாட்டு அலகின் மூலம் ஆளிகளைப் பொருத்தி இயக்குவதால் தேவையற்ற விபத்துக்களையும் கட்டுப்படுத்த முடியும்.
இந்த வேலைத் திட்டத்துக்கான இயந்திரங்கள், ஆளணி வளம் என்பன கொழும்பில் இருந்து வந்த விசேட குழுவால் எடுத்துவரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சார சபையின் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக