//]]>3

புதன், 25 ஏப்ரல், 2012

இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி.



இலங்கையில் 3000 இற்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
நிர்ப்பீடன குறைப்பாட்டு அறிகுறிகளை கொண்டவர்களின் பட்டியலில் தினமும் ஒரு நோயாளி இணைவதாக மருத்துவ தரப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எயிட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மாநாடு அண்மையில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய எயிட்ஸ் தடுப்பு பிரிவுத் தலைவர் நிமல் எதிரிசிங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கையில் 150 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தனர். அதுதவிர, 50 குழந்தைகள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுடன் பிறந்துள்ளனர்.
இனங்காணப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளில் 61 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தவறான உடலுறவு மற்றும் தவறான குருதிப்பரிமாற்றம் ஆகியன காரணமாக பரவியதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடத்தில் ராகம மருத்துவமனையில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் முதல் இரு மாதங்களுக்குள் 5 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக