வேலை வாய்ப்பற்று இருக்கும் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தொலைத் தொடர்புகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் வேலைத் திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 23698 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
6 மாத கால பயிற்சிக்கென அவர்கள் பிரதேச செயலகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பயிற்சிக்கு உட்படுத்தப்படாத பட்டதாரிகள் இன்னும் 6000 பேர் நாடு முழுவதும் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரச நியமனம் வழங்கப்படும் எனவும் இது குறித்து நிதி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக