//]]>3

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

நவீன தொழில்நுட்பத்தில் அழுத்தும் சாதனம்



ஓர் குடும்பத்தினர் சாதாரணமாக வருடம் ஒன்றுக்கு சுமார் 160 மணித்தியாலங்களை ஆடைகளை அழுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந் நேர விரயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உருவாகியிருக்கிறது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அழுத்தும் கருவி.
இக் கருவி மூலம் வெறும் ஒன்பது நிமிடத்தில் 35 ஆடைகளை அழுத்திவிடலாம்.
SteamRail என பெயரிடப்பட்டுள்ள இக் கருவியை பிருத்தானிய கம்பனி ஒன்று தயாரித்துள்ளது.
மடித்து வைக்கக்கூடிய கட்டமைப்பை கொண்ட இக் கருவி, நீரை ஆவியாக தெளிக்கும் இயந்திரம் ஒன்றையும், நீர் பாதுகாப்பு உடைய துணியால் ஆன அறையையும் கொண்டது.
குறித்த துணி அறையில் அழுத்த வேண்டிய ஆடைகளை மாட்டி இயந்திரத்தை இயங்கவைத்தால் போதும். இயந்திரத்தில் இருந்து வெளிவரும் சூடான நீராவி மூலன் ஒன்பதே நிமிடங்களில் ஆடைகள் அணிவதற்கு தயாராகிவிடும்.
சலவை இயந்திரத்தில் இருந்து எடுத்த ஆடைகளை நேரடியாக இதில் போட்டால் கூட, தானாகவே காயவைத்து அழுத்திவிடுகிறது இந்த இயந்திரம்.
இதன் விலை 280 பிருத்தானிய பவுன்ஸ்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக