//]]>3

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

6 வயதான சிறுவன் ஒருவனின் முதுகில் ஆமை ஓடு போல கட்டி



6 வயதான சிறுவன் ஒருவனின் முதுகில் ஆமை ஓடு போன்ற தோற்றத்தில் அசுர வளர்ச்சிடைந்திருந்த கட்டியை பிரிட்டனை சேர்ந்த வைத்தியர்கள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.
கொலம்பியாவைச் சேர்ந்த டைடியர் மொன்டால்வோ எனும் இச்சிறுவன் பிறந்தது முதல் இத்தகைய உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனை ஆமை சிறுவன் என பலர் வர்ணித்தனர்.
இச்சிறுவனுக்கு மேற்படி கட்டியானது தீவிரமான வளர்ச்சியை காட்டியாது. ஆனால் அதனை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றுவதற்கு அவனது தாயிடம் போதிய பணம் இருக்கவில்லை.

இந்த பாரிய கட்டியினால் சிறுவனின் கல்வி வாழ்க்கை பாதிக்கப்படுமென பெற்றோர்கள் அச்சம் கொண்டனர்.
ஆனால் பிளாஸ்திக் சத்திர சிகிச்சை நிபுணரான நெயல் பல்ஸ்ருரோட், குறித்த சிறுவனின் பிரச்சினையை அறிந்து, மேற்படி சிறுவனுக்கு இலவசமாக சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்வந்தார்.

டைடியர் மற்றைய சிறுவர்களைப் போல் தற்போது வளர்ந்து வருகின்றான்.
‘டைடியரின் நிலைமை  மிகவும் மோசமானதாக இருந்தது. இதைப்போன்ற ஓரு சந்தர்ப்பத்தை நான் எதிர்கொள்ளவில்லை. அவனது உடலில் முக்கால்வாசி பகுதி  இந்த  கட்டியினால்  பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர் பல்ஸ்டுரோட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக