//]]>3

சனி, 19 மே, 2012

ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் நடந்தது என்ன


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு-
 கேள்வி – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா?
நுலன்ட் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.
தனியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மை, திறந்த, பொதுவான செயற்பாடு அவசியம் என்று இராஜாங்கச்செயலர் ஊக்கப்படுத்தினார்.
பொறுப்புக்கூறலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நல்லிணக்கத்தை பலப்படுத்த சிறிலங்காவுக்குள்ளேயும் வெளியேயும் பொது நம்பிக்கையை ஏற்படுத்தும் நகர்வுகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இதனை நீங்கள் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கு, உலகிற்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
வடக்கில் படைக்குறைப்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், மனிதஉரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எப்போதும் போலவே வலியுறுத்தினார்.
ஈரானின் மசகு எண்ணெயில் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகள் குறித்தும், அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர்.
இந்த விடயத்தில் சிறிலங்கா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஊக்குவித்தோம்.
கேள்வி – பொறுப்புக்கூறுதல் பற்றிக் குறிப்பிட்டபோது, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட – போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் குறித்து அவர் பேசினாரா?
நுலன்ட்- நாம் பொறுப்புக்கூறல் என்று பேசும்போது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அர்த்தம்.
கேள்வி – எனக்குத் தெரியும், ஆனால் அவர் (ஹிலாரி) எப்படி அதுபற்றிக் கேட்டார்?
நுலன்ட் – அவர் பொதுவான சொற்களிலேயே பேசினார். பொப் பிளேக், மைக் போஸ்னர் ஆகியோருடன் அவர்கள் விரிவாகப் பேசுவதற்கு தனியான சந்திப்புகள் இருந்தன.
கேள்வி – பொதுச்சந்திப்பிலும், தனிப்பட்ட சந்திப்பிலும், அவர்கள் பேசுவதற்கு செலவிட்ட நேரம் அதிகமா?
நுலன்ட்- இல்லை.
கேள்வி – எனவே, அது ஏறத்தாழ சமம் என்கிறீர்களா?
நுலன்ட் – அவர்கள் பொதுவாக 10 நிமிடங்கள் பகிரங்கமாகவும், தனியாக 35 நிமிடங்கள் தனியாகவும் பேசினார்கள்.
கேள்வி – 10 நிமிடங்கள் நடந்த பகிரங்க சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தான் பேசுவதற்கு எட்டரை நிமிடங்களை எடுத்துக் கொண்டாரே. அவர் தனிப்பட்ட அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதுகிறீர்களா?
நுலன்ட் – இல்லையில்லை…. அது ஒரு சமமான கலந்துரையாடல்

வெள்ளி, 18 மே, 2012

அச்சுறுத்தல் இருக்கும் வரை இராணுவமுகாம்கள் அகற்றப்படாது


"20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

யுத்த வெற்றி விளாவில் 15 உயர் விருதுகள்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது. 

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் காலி முகத்திடலில்


யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமாகியது.  

இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  

இந்த அணிவகுப்பில் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 854 அதிகாரிகள் உட்பட 12 ஆயிரத்து 828பேர் பங்குபற்றினர்.இவர்கள், கிழக்கு, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என மூன்று முன்னணிகளாக அணிவகுப்பில் ஈடுபட்டனர். 

8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் !



8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளங்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியச் சிறுவர்கள் அடிமையாகிறார்களாம் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது, பிரித்தானிய முன்னணி நாளேடு ஒன்று. தமது பெற்றோரால் தமக்கு வாங்கித் தரப்பட்டுள்ள ஸ்மாட் போபைல் போனில் இருந்தே, மிக இலகுவாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்ல முடிவதாக பல சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இரகசிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திய பிரித்தானிய டெய்லி மெயில் பத்திரிகையே இத் தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக 8 வயதுச் சிறுவர்கள் முதல் 17 வயது இளைஞர்கள் வரை மோபைல் போனைப் பாவித்தே கூடுதலாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்வதாக அக் கருத்துக்கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இளைய தலைமுறையினரை எடுத்துகொண்டால் ஒவ்வொரு 10 பேரில் சுமார் 7 பேர் இவ்வாறான செக்ஸ் இணையங்களைப் பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். பிரின்னா செல்வடோர் என்னும் 13 வயதுச் சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது இச் சிறுமி செக்ஸ் இணையத்தளங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகிவிட்டாராம். ஒரு நாள் கூட அதனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 17 வயதேஆனா நேத்தன் ஹாக் என்னும் இளைஞன் தெரிவிக்கும்போது, தான் நிதமும் விரும்பிப் பார்க்கும் இணையம் அதுதான் என்று கூறியுள்ளார். அதாவது தன்னால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது எனவும், தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு மத்தியில், மதுபானவகைகள் மற்றும் சிகரெட் பாவனை என்பன பரவிவருவதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இப் பழக்கங்களுக்கு எல்லாம் அடிமையாகாத பலர் செக்ஸ் இணையத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என, தற்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளமையானது, பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு செய்தியாக உள்ளது. பொதுவாக வீட்டில் உள்ள கணணி என்றால் அதில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோருக்குத் தெரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மோபைல் போன்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. தேவையே இல்லாமல் எதை எதையோ கண்டு பிடிக்கும் நொக்கியா, சாம் சுங், அப்பிள் போன்ற மோபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு பிள்ளைகள் பாவனைக்கு என்று ஒரு லாக் சிஸ்டத்தை போனில் இன்னும் ஏன் அறிமுகப்படுத்தவில்லை ?

பெண்களுக்கும் மாரடைப்பாம் கவனம்


பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன?
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள்
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள்
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள்
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

பரந்தன் முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் வெடிவிபத்து தொடர்ந்து துப்பாக்கிச்சத்தம்


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் (video)

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.


நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

கூகுல் angry birds அசதல் பூங்கா!



கூகுலால் அறிமுகப்படுத்தப்பட்ட angry birds இணைய விளையாட்டு, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவர் மத்தியிலும் சக்கைபோடு போடுகிறது.
இவ் angry birds ஐ மையமாக வைத்து சிறுவர் பூங்கா ஒன்று பின்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 இல் இப் பூங்கா திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடையை கிழித்து உடுத்து வரும் ஹெலிவூட் நட்சத்திரங்கள்


நாகரீகம் என்ற பெயரில் நல்ல ஆடைகளை கிழித்துப்போடும் பழக்கம் மாலைத்தேய கவர்ச்சி மாடல்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அண்மையில், பிரபல கவர்ச்சி மாடல் ஆன கிம் கடார்சியனின் தங்கை கிழிந்த ஆடையுடன் வலம்வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக…

பாம்பை மனிதன் கடித்ததால் பாம்புக்கு என்னவாயிற்று -இந்தியா


குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பாகரன் பணியை முடித்து விட்டு வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் கிடந்த ஒரு நல்ல பாம்பை பார்க்காமல் அதை மிதித்துவிட்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை கடித்தது. வலியால் துடித்த புஷ்பாகரன் அந்த பாம்பை பழி வாங்க தீர்மானித்தார். பாம்பை விரட்டிச் சென்று பிடித்து அதை கடித்து குதறினார்.
இதில் அந்த பாம்பு இறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் உடலில் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் புஷ்பாகரனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

குருபெயர்ச்சி: வியாழ வழிபாடு செய்வது எப்படி: விரிவான பரிகாரங்கள்!


ஒரு ஜாதகம் மேன்மையடைய அவரது ஜாகத்தில் குருபகவான் சிறப்பாக இருக்க வேண்டும்.
அவரின் அருட்பார்வை பெற்றால் தான் கிரக தோஷங்கள் அகலும். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருடமாகிறது. அதுவே குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட குரு இன்று (17ம் தேதி) மாலை 5.18 மணிக்கு மேஷ ராசியில் இருந்து கார்த்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
குரு பெயர்ச்சியாகும் காலத்தில் இம்முறை சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். குருவும், சுக்ரனும் முரண்பட்ட கிரகங்களாக கருதப்படுபவை என்பதால் சிலருக்கு தீவிர திருப்பங்கள் வெற்றிகள் வந்து சேரும்.
குரு பார்வைப்படப் போகும் கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், தொழில் வளம் சிறக்கும்.
மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையில்லாததால் குரு பெயர்ச்சியன்று சிவாலயங்களுக்கு சென்று குருவை வழிபடலாம். குருவை வணங்கும் போது குருவின் பார்வை நம்மீது நேரடியாக பட்டால் குருபார்க்க கோடி நன்மை விளையும் என்பதால் குருவுக்கு நேராக நின்று வணங்க வேண்டும்.
குரு பகவானுக்கு உகந்த நாளாம் வியாழன்று விரதம் இருந்தால் எல்லா நலன்களும் கிட்டும். இதனைக் குரு வாரம் என்று கூறுவர்.
ஜாதகத்தில் குரு நீசமடைந்தவர்கள் இவ்விரதம் இருக்க வேண்டும். ஏழ்மையில் இருப்பவர்களும் திருமணமாகாதவர்களும், குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் இவ்விரதம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் அவர்களின் குறைகள் நீங்கும். வியாழக்கிழமை ஸ்ரீராகவேந்திரர் குருவாயூரப்பன், குருபகவான் போன்ற கடவுளை எண்ணி பூஜை செய்யலாம். அந்நாளில் புதனுக்குரிய பொன்னிற ஆடை அணிய வேண்டும். நவக்கிரகத்தை சுற்றி வந்து வியாழ பகவான் முன்னின்று,
மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்காசான் மந்திரி
நறை செரி கற்பகம் பொன்
நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதானம் சிவகை மண்ணின் வீடு
போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாயன்.
இருமலர்ப்பாதம் போற்றி

என்னும் தோத்திரம் கூறி வணங்க வேண்டும்.
புஷ்பராகக்கல்லை மோதிரமாக அணிவது நலம். குருவை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குதூகலம் அதிகரிக்கும், செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும், திருமணம் கைகூடும், புத்திரபேறு வாய்க்கும், பூமியோகம் கிடைக்கும், வெற்றிப்படிக்கட்டுகளின் விளிம்பில் ஏறலாம்.
குறிப்பாக இதுவரை கசந்த காலங்கள் இனி வசந்தகாலங்களாக மாற்றும் ஆற்றல் குருவின் பார்வைக்கு மட்டுமே உண்டு. கஜகேசரி யோகம், குருசந்திர யோகம், குருமங்கல யோகம், ஹம்ச யோகம், சகட யோகம் என 5 விதமான யோகங்களை குரு அருட் பாலிப்பதால் குருவை வழிபடுங்கள். கோடி நன்மைகள் பெறுங்கள்.

மே 18 கிழிநெச்சியில் எப்டி


வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்களை விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இன்று முற்பகல் கிளிநொச்சியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. அவற்றின் புகைப்படப் பதிவுகள்.

பொன்சேகாவிற்கு விடுதலையாம்


முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.


2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.



இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அத்துடன், பொன்சேகாவின் கடவுச்சீட்டினைப் பறிமுதல் செய்யவும் தேவைப்படுமிடத்து அதனை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பல்கலை மாணவன் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டம்



யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலளார் இனந்தெரியாத நபர்களினால் இன்று வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டமையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தினால் பல்கலைக்கழக உப வேந்தரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டதுடன் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.


மாவை அழுத கண்ணீர்


எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உஇராயாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். 

25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் இராணுவம் ஒப்படைப்பு



யாழ், அரியாலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு 512ஆவது படைப்பிரிவின் தளபதி விக்கிரமரட்ண தலைமையில் அரியாலையில் நடைபெற்றது. 

அரியாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக திகழ்ந்த மேற்படி வீடுகள். கடந்த 17 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையிலேயே இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

வியாழன், 17 மே, 2012

ஜஸ்வர்யாவின் இன்றைய நிலை



1994 இல் உலக அரங்கில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை சுவீகரித்து கொண்ட இந்திய அழகியின் அழகு, ஒரு குழந்தை பெற்றதும் எங்கு ஓடிப்போனதோ தெரியவில்லை…!
2011 பெப்பிரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், அப்போது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். அப்போது கூட அவரின் அழகில் இழப்பு ஏதும் தோன்றவில்லை.
பின்னர் மூன்று மாதங்கள் கழித்து 2011 மே மாதம் நடைபெற்ற கன்னிஸ் விருது வழங்கும் விழாவில் அவரது முகத்தில் முதுமை இழை ஓடத் தொடங்கியிருந்தது.
தற்போது குழந்தை பிரசவித்து மதங்கள் பல கடந்துவிட்ட நிலையில், தற்போது ஆளே தெரியாத அளவுக்கு முழுமையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யாராய்…
இதை பார்த்து நம் நடிகைகள் எத்தனை பேர் குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்களோ தெரியவில்லை!

அதிர வைக்கும் வீதி சமிஞைகள்



ஓட்டுனர்களை திக்குமுக்காட வைக்கும் தெரு சமிக்கை விளக்கு சீனாவில் நிறுவப்பட்டுள்ளது.
சீனாவின் Chongqing நகரில் உள்ள பல தெருக்கள் சந்திக்கும் சந்தி ஒன்றிலேயே இத் தெருசமிக்கை விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

தங்கள் முடியை தாங்களே வெட்டும் பெண்கள்



ஆண்களின் சிகை அலங்கரிப்புக்கு செலவாகும் பணத்தை விட, பெண்களுக்கான அழகு நிலையங்களில் அதிகளவிலான பணம் சிகை அலங்கரிப்புக்கு கறக்கப்படுகிறது.
பால் விலை உயர்வு… மின் கட்டண உயர்வு….. என கையில் காசு மிஞ்சாத இந் நிலையில் தலைமுடிக்கும் செலவழித்தால் கட்டுப்படி ஆகுமா…?
அதுக்காக அலங்கோலமாக திரிய முடியுமா…?
வீட்டிலேயே அழகாக தலைமுடி வெட்ட அற்புத வழி இதோ…!

விலை உயர்ந்த கார் நொடியில் சிதைப்பு (video)


லாம்போர்கினி, உலகின் விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்று. அத்தகைய கார் ஒன்று எப்படி முட்டாள் தனத்தால் சிதைந்து போகிறது பாருங்கள்…!

ஆதாள பாதாளத்தில் கண்கட்டி குதிக்கின்றனர் (video)


அதள பாதளத்தில் கண் கட்டி பாதுகாப்பு கவசங்களுடன் தில்லாக குதிக்கையில் ஷாக் ஆகிறார் இளைஞன்! ஏன்?
பேச்சுலர் பார்ட்டி ஒன்றில் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஓர் இளைஞரை கண்ணை கட்டி கூட்டி வந்து, மாலை உச்சியில் இருந்து பாதாளத்தில் குதிக்க வைக்க போவதாக கயிறு எல்லாம் காட்டி தண்ணிக்குள் குதிக்க விட்டு விடுகிறார்கள்…!
அப்புறாம் என்ன… ஒரே காமெடி தான். நீங்க்ளும் பருங்களேன்…!


இனி விமானத்தில் பறந்தபடி செல்போன் பேநலாம்



விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், “உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்” என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது.
நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் காரணம், செல்போன் சிக்னல்கள், விமான காக்பிட்டின் தொடர்பு அலைகளை வெட்டும் என்பதால்தான். விமானம் பறக்கும்போது பயணிகள் செல்போன் உபயோகித்தால், விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்துடன் வைத்துள்ள கம்யூனிகேஷன் தொடர்புகள் பஃப் பண்ணும் என்பதால், செல்போன்களுக்கு தடை உள்ளது.
அதனால், விமானத்துக்குள் அவர்களால் பொருத்தப்பட்ட போன்கள் மூலம் பேச அனுமதி வழங்கியுள்ளன விமான நிறுவனங்கள். ஏர்லைன் போனில் கையை வைத்தால், உங்கள் கிரெடிட் கார்ட்டும் ஜெட் வேகத்தில் ஓடத் துவங்கும்!
வர்ஜின் அட்லான்டிக் தமது புதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்த போது, அதன் கம்யூனிகேஷன் சிஸ்டம் செல்போன் சிக்னல்களால் பாதிக்கப்படாத வகையில் அப்கிரேட் செய்திருந்தது. அந்த விமானங்களில் தற்போது பலவித டெஸ்ட்டுகள் செய்யப்பட்டபின், செல்போன் உபயோகிக்கலாம் என சிவில் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று முதல் வர்ஜின் அட்லான்டிக்கின் பதிய ஏர்பஸ் ஏ-330 விமானங்களில் 35,000 அடி உயரம்வரை செல்போன்கள் பயன்படுத்தப்படலாம், டெக்ஸ் மெசேஸ் அனுப்பலாம், வெப் அக்சஸ் மூலம் இ-மெயில்களை அனுப்பலாம், ரிசீவ் பண்ணலாம். GPRS முலம் இவை சாத்தியமாகின்றன.
அட்லான்டிக் கடலைக் கடக்கும் விமானங்கள் அதிகபட்சம் 35,000 அடிகள் உயரம் வரையே பறப்பது வழக்கம். (பசிபிக் கடலைக் கடக்கையில் மட்டும் சில விமானங்கள், 38,000 அடி உயரம்வரை சிறிது நேரத்துக்கு பறக்க வேண்டியிருக்கும்) லண்டன் – நியூயார்க் ரூட், அல்லான்டிக் கடலின் மேல் பறக்கும் ரூட் என்பதால், வர்ஜினின் விமானத்தின் முழு நேரமும் செல்போன்கள் இயக்கப்படலாம்.
தற்போது வர்ஜின் விமானங்களில் உள்ள GPRS மட்டுப்படுத்தப்பட்ட பேன்ட்-வித்துடன் இயங்குவதால், ஒரே நேரத்தில் 10 பயணிகள் மட்டுமே செல் போனை பயன்படுத்த முடியும். ஆனால், அடுத்த வாரத்தில் இருந்து பேன்ட்-வித் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமானங்களிலும் டேக்-ஆஃப், மற்றும் லேன்டிங் நேரங்களில் செல்போன் உபயோகிக்க முடியாது. அத்துடன், அமெரிக்கா தமது வான்பகுதியில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், லண்டன்-நியூயார்க் விமானம் மேற்கே பறக்கும்போது, அமெரிக்காவில் இருந்து 250 மைல் வான் எல்லையை அடைந்துவிட்டால், அதன்பின் செல்போன் பயன்படுத்த முடியாது. அதேபோல, விமானம் கிழக்கே லண்டனை நோக்கிச் செல்லும்போது, அமெரிக்காவை விட்டு வெளியேறி முதல் 250 மைல்களுக்கு, செல்போன் பயன்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் விளம்பரத்துக்கு 25 கோடி



செல்வி. ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு நிறைவு விழா விளம்பரங்களுக்காக மட்டும் தமிழக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெ. தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஓராண்டு நிறைவு விழாவையொட்டி அதிமுக அரசு நாட்டின் அனைத்து நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பெரிய விளம்பரத்தைக் கொடுத்துள்ளது. அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் இந்த விளம்பரங்களுக்காக மட்டும் அதிமுக அரசு ரூ.25 கோடி செலவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
நூற்றாண்டு பேசும் ஓராண்டுச் சாதனை என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த விளம்பரத்தின் விவரம் வருமாறு…
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்- இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
இதுதான் என்னுடைய இலட்சியம்!

-செல்வி ஜெ. ஜெயலலிதா-
தமிழக முதல்வர்

மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் துரித நடவடிக்கைகளால் செயலற்றுக்கிடந்த தமிழகம் மீண்டும் புதுப்பொலிவுடன் புத்தெழுச்சி பெற்றுள்ளது.
அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்
பசியாறி மகிழ விலையில்லா அரிசி,
பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம்,
மகளிர் மனம்குளிர விலையில்லா மிக்சி,
கிரைண்டர், மின்விசிறி, எளியோர் ஏற்றம் பெற விலையில்லா கறவை மாடுகள்/ஆடுகள்,
மாணவ, மாணவியர் கல்வியில் சிறக்க விலையில்லா மடிக்கணினி,
சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள்,
தரமான மருத்துவ சேவைக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை விட பெரிய சாதனை, விளம்பரங்களுக்கு 25 கோடி செலவு செய்ததே…!
இந்த விளம்பர செலவுக்கு பதிலாக ஏழை விவசாயிகளின் கடன் சுமையை குறைத்திருக்கலாமே அம்மா…!
(அமிதாப்பச்சன் விவசாயிகளின் கடனை குறைக்க சொந்த பணமாக 35 இலட்சம் கொடுத்தது இங்கு குறிப்பிடப்படுகிறது)

காப்பியில் ஓவியம் வரையும் பெண் (video)

சூப்பர் ஸ்டாரின் திருமண பரிசு



சினேகாவும் பிரசன்னாவும் கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர். ஆனால் கோச்சடையான் பணிகளில் ரஜினி பிஸியாக இருந்தமையால் இந்த திருமண விழாவில் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூப்பர்ஸ்டார்.
ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், “இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்,” என்றார்.

இனி நடக்கவும் தேவையில்லை: Honda நிறுவனத்தின் ரோபோ ஆசனங்கள் (video)

இவ் ஆசனங்கள் தட்டையான மேற்பரப்பில் மட்டுமல்லாது மின் உயர்த்தியின் ஏற்ற இறக்கமான வாயில் என்பவற்றிலும் இயங்கக்கூடியவை.
உடல் அசைவுகள் மூலம் இயக்கக்கூடிய ரோபோ ஆசனத்தை யப்பானின் Honda நிறுவனம் தயாரித்துள்ளது.
UNI-CUB என பெயரிடப்பட்டுள்ள இவ் ரோபோ ஆசனம் 360 பாகைகள் சுற்றி நகரும் சில்லுகளுடன் ஆக்கப்பட்டுள்ளது.
lithium-ion பற்றரி மூலம் இயங்கக்கூடிய இவ் ரோபோ ஆசனம், 74.5 cm உயரமும் 34.5 cm அகாலமும் கொண்டது. அத்துடன் ஒருமுறை பற்றரியை சார்ச் ஏற்றிவிட்டால் 6 கிலோமீற்றர்கள் தூரம் பயணிக்கக்கூடியது. அத்துடன் இதன் உயர் வேகம் 6 Km/h ஆகும்.
இவை அலுவலகங்கள், நூல்நிலையங்கள், ஆராட்சிக்கூடங்கள் போன்றவற்றில் பயன்படுத்த பொருத்தமானவை என Honda நிறுவனத்தினர் கூறுகிறனர் 


2.30 க்கு கொல்லப்பட்ட ராமஜெயம் எப்படி 5.20 க்கு வாக்கிங் போனார் - அதிரடி மர்மங்கள்



முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பில் அவரது மனைவி தனது கணவர் அதிகாலை 5.20 க்கு வெளியில் கிளம்பியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், ராமஜெயம் அதிகாலை 2.30 க்கு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றனர்.
ராமஜெயத்தின் மனைவி கைப்பட எழுதிக் கொடுத்த புகாரில் ராமஜெயம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் ராமஜெயம் இறந்த நேரம் என்ன என்று குறிப்பிடவில்லை.
இதனால் மீண்டும் பிரேத பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் மறு ஆய்வு செய்த போது ராமஜெயம் கொல்லப்பட்ட நேரம் மார்ச் 29ம் தேதி அதிகாலை 2.30 என்று தெரியவந்துள்ளது.
ராமஜெயத்தின் மனைவி ஏன் அப்படி தவறான தகவலைத் தர வேண்டும்? அப்படியானால் அதிகாலை 2.30 மணிக்கு ராமஜெயம் எங்கிருந்தார்? ஏன் பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்பே நேரம் குறிப்பிடப்படவில்லை? என்று அடுத்தடுத்த சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

பூநகரி – யாழ் பேரூந்து சேவை 17 வருடங்களின்பின்


தென்மராட்சி தெற்கு தனங்கிளப்பு, கேரதீவு மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் மீளக் குடியமர்ந்த மக்களும் பூநகரி அரச அலுவலங்களில் பணி புரிவோரும் விடுத்த வேண்டுகோளை அடுத்து சாவகச்சேரி கேரதீவு மார்க்க 810 இலக்க பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பஸ் தினமும் காலை 5.30, 8.45 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் காலை 6.00 மணி மு.ப. 9.30 பி.ப. 1.30, பி.ப.3.45 ஆகிய நேரங்களில் சாவகச்சேரியில் இருந்தும் பூநகரி நாலாம் கட்டைவரை சென்று அங்கிருந்து காலை 7.15 மு.ப. 11.30, பி.ப. 2.15 மாலை 5.00மணி ஆகிய நேரங்களில் புறப்படும்.

அனேமாவை தேடிப்போன மகிந்த



சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
நேற்றுமாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் சிறிலங்கா அதிபரை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.
இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.
 “சில சிறிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இன்றுகாலை நான் சிறிலங்கா அதிபரைச் சந்தித்தேன். இந்த விடுதலை தொடர்பாக எந்தவொரு தரப்பும் நிபந்தனை விதிக்கவில்லை“ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அனோமா பொன்சேகாவை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேசும் முயற்சிகள் தோல்வி கண்ட நிலையிலேயே, அவரைத் தேடிச்சென்று மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் இவ்வாறு படியிறங்கிப் போனது ஏன் கேள்வி கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

செவ்வாய் தொசமா இதோ உங்களுக்கு


ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் களஸ்தர தானத்தில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு இருக்கும். இதனால் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் தடை ஏற்படும். இந்த தோஷத்தை நீக்க எளிய முறையில் பரிகாரம் உள்ளது. அரசமரம், வேம்பு சேர்ந்திருக்கும் இடங்களில் விநாயகரும் இருக்க வேண்டும்.
இந்த இடத்திற்கு செவ்வாய்க் கிழமை அன்று காலையில் சென்று செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முதலில் விநாயகருக்கு பால், நாட்டு சர்க்கரை வைத்து வணங்கி 9 முறை வலம் வரவேண்டும். 48 நாட்கள் இவ்வாறு செய்தால் செவ்வாய்தோஷம் நீங்கி திருமணம் கைகூடும்.

நட்சத்திரமும் அதிஸ்ட தெய்வங்களும்



அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் – ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் – ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் – ஸ்ரீ லக்மி நாரயணர்
கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் – ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்

அமரிக்ககா பிரயை இலங்கையில் தற்கொலை


கொழும்பு கொம்பனிவீதி சிற்றம்பலம் ஏ காடினர் மாவத்தை நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே குதித்து அமெரிக்க பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (16) காலை 9.45 மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிற்பகல் 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
ஜோன் எட்வின் கொல்ஸ்டன் ரயன் என்ற 46 வயதுடைய அமெரிக்க பிரஜையே உயிரிழந்தவராவார்.

காறின் இஞ்சினுக்குள் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுளைந்தவர் கைது

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் முகமாக காரொன்றின் முன்பக்க இயந்திரப் பகுதிக்குள் 20 மணி நேரமாக மறைந்து பயணம் செய்த 18 வயது ஆப்கானிஸ்தான்இளைஞர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி நிஸான் காரானது படகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிறீஸிலிருந்து கொண்டு வரப்பட்ட மேற்படி கார் பாரி நகருக்கு பயணித்த போது குடிவரவு அதிகாரிகள் அக்காரை வழிமறித்துள்ளனர்.
காரை பரிசோதித்த பின் அக்காரை மேற்கொண்டு செல்வதற்கு அனுமதிக்க தயாரான அதிகாரிகள், அக்காரின் சாரதியான கலோயனோ இவயலோவும் (24 வயது) பெண் பயணியான ஜோர்ஜிவா சடனி ஸ்லாவாவும் (39 வயது) மிகவும் பதற்ற நிலையில் காணப்படுவதையும் அவதானித்து சந்தேகம் கொண்ட னர்.
இந்நிலையில் அதிகாரிகள் அக்காரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்திய போது, காரின் முன்பக்கத்தில் வெப்பத்தில் தகிக்கும் இயந்திரப் பகுதியில் விரிக்கப்பட்ட போர்வை மற்றும் மெத்தை என்பவற்றின் மீது தண்ணீர் போத்தல் ஒன்றுடன் மேற்படி ஆப்கானிய சட்ட விரோத குடியேற்ற வாசி மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன்போது அந்த ஆப்கான் இளைஞர் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சட்டவிரோத குடியேற்ற வாசியை பிரித்தானியாவுக்குள் கடத்த உதவியளித்த காரின் சாரதியும் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆகக் குறைந்தது 5000 யூரோ தண்டனை பணம் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி இருவருக்கும் ஆப்கான் இளைஞர் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு 6000 யூரோ பெறுமதியான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
அந்தப் பணத்தை 8 வருட காலமாக ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள செல்வந்த குடும்பத்தில் பணியாளராக பணியாற்றி சேகரித்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கைதுசெய்யப்பட்ட பெண் பயணியின் கணவரும் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவில் அங்கம் வகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.