//]]>3

வெள்ளி, 18 மே, 2012

8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் !



8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளங்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியச் சிறுவர்கள் அடிமையாகிறார்களாம் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது, பிரித்தானிய முன்னணி நாளேடு ஒன்று. தமது பெற்றோரால் தமக்கு வாங்கித் தரப்பட்டுள்ள ஸ்மாட் போபைல் போனில் இருந்தே, மிக இலகுவாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்ல முடிவதாக பல சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இரகசிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திய பிரித்தானிய டெய்லி மெயில் பத்திரிகையே இத் தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக 8 வயதுச் சிறுவர்கள் முதல் 17 வயது இளைஞர்கள் வரை மோபைல் போனைப் பாவித்தே கூடுதலாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்வதாக அக் கருத்துக்கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இளைய தலைமுறையினரை எடுத்துகொண்டால் ஒவ்வொரு 10 பேரில் சுமார் 7 பேர் இவ்வாறான செக்ஸ் இணையங்களைப் பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். பிரின்னா செல்வடோர் என்னும் 13 வயதுச் சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது இச் சிறுமி செக்ஸ் இணையத்தளங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகிவிட்டாராம். ஒரு நாள் கூட அதனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 17 வயதேஆனா நேத்தன் ஹாக் என்னும் இளைஞன் தெரிவிக்கும்போது, தான் நிதமும் விரும்பிப் பார்க்கும் இணையம் அதுதான் என்று கூறியுள்ளார். அதாவது தன்னால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது எனவும், தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு மத்தியில், மதுபானவகைகள் மற்றும் சிகரெட் பாவனை என்பன பரவிவருவதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இப் பழக்கங்களுக்கு எல்லாம் அடிமையாகாத பலர் செக்ஸ் இணையத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என, தற்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளமையானது, பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு செய்தியாக உள்ளது. பொதுவாக வீட்டில் உள்ள கணணி என்றால் அதில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோருக்குத் தெரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மோபைல் போன்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. தேவையே இல்லாமல் எதை எதையோ கண்டு பிடிக்கும் நொக்கியா, சாம் சுங், அப்பிள் போன்ற மோபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு பிள்ளைகள் பாவனைக்கு என்று ஒரு லாக் சிஸ்டத்தை போனில் இன்னும் ஏன் அறிமுகப்படுத்தவில்லை ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக