//]]>3

வியாழன், 17 மே, 2012

2.30 க்கு கொல்லப்பட்ட ராமஜெயம் எப்படி 5.20 க்கு வாக்கிங் போனார் - அதிரடி மர்மங்கள்



முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பில் அவரது மனைவி தனது கணவர் அதிகாலை 5.20 க்கு வெளியில் கிளம்பியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், ராமஜெயம் அதிகாலை 2.30 க்கு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றனர்.
ராமஜெயத்தின் மனைவி கைப்பட எழுதிக் கொடுத்த புகாரில் ராமஜெயம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில் ராமஜெயம் இறந்த நேரம் என்ன என்று குறிப்பிடவில்லை.
இதனால் மீண்டும் பிரேத பரிசோதனை அறிக்கையை கடந்த வாரம் மறு ஆய்வு செய்த போது ராமஜெயம் கொல்லப்பட்ட நேரம் மார்ச் 29ம் தேதி அதிகாலை 2.30 என்று தெரியவந்துள்ளது.
ராமஜெயத்தின் மனைவி ஏன் அப்படி தவறான தகவலைத் தர வேண்டும்? அப்படியானால் அதிகாலை 2.30 மணிக்கு ராமஜெயம் எங்கிருந்தார்? ஏன் பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்பே நேரம் குறிப்பிடப்படவில்லை? என்று அடுத்தடுத்த சந்தேகங்கள் அதிர வைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக