//]]>3

வியாழன், 17 மே, 2012

காறின் இஞ்சினுக்குள் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுளைந்தவர் கைது

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் முகமாக காரொன்றின் முன்பக்க இயந்திரப் பகுதிக்குள் 20 மணி நேரமாக மறைந்து பயணம் செய்த 18 வயது ஆப்கானிஸ்தான்இளைஞர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி நிஸான் காரானது படகொன்றின் மூலம் பிரித்தானியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கிறீஸிலிருந்து கொண்டு வரப்பட்ட மேற்படி கார் பாரி நகருக்கு பயணித்த போது குடிவரவு அதிகாரிகள் அக்காரை வழிமறித்துள்ளனர்.
காரை பரிசோதித்த பின் அக்காரை மேற்கொண்டு செல்வதற்கு அனுமதிக்க தயாரான அதிகாரிகள், அக்காரின் சாரதியான கலோயனோ இவயலோவும் (24 வயது) பெண் பயணியான ஜோர்ஜிவா சடனி ஸ்லாவாவும் (39 வயது) மிகவும் பதற்ற நிலையில் காணப்படுவதையும் அவதானித்து சந்தேகம் கொண்ட னர்.
இந்நிலையில் அதிகாரிகள் அக்காரை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்திய போது, காரின் முன்பக்கத்தில் வெப்பத்தில் தகிக்கும் இயந்திரப் பகுதியில் விரிக்கப்பட்ட போர்வை மற்றும் மெத்தை என்பவற்றின் மீது தண்ணீர் போத்தல் ஒன்றுடன் மேற்படி ஆப்கானிய சட்ட விரோத குடியேற்ற வாசி மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதன்போது அந்த ஆப்கான் இளைஞர் அரை மயக்க நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்படி சட்டவிரோத குடியேற்ற வாசியை பிரித்தானியாவுக்குள் கடத்த உதவியளித்த காரின் சாரதியும் பயணியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆகக் குறைந்தது 5000 யூரோ தண்டனை பணம் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி இருவருக்கும் ஆப்கான் இளைஞர் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு 6000 யூரோ பெறுமதியான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
அந்தப் பணத்தை 8 வருட காலமாக ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள செல்வந்த குடும்பத்தில் பணியாளராக பணியாற்றி சேகரித்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கைதுசெய்யப்பட்ட பெண் பயணியின் கணவரும் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவில் அங்கம் வகித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக