//]]>3

புதன், 20 ஜூன், 2012

மன்னார் முள்ளிக்குளத்தில் சிங்கள குடியேற்றம் தடுக்க முடியாத நிலையில் மக்கள்


முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது.

இடம் பெற்ற யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உற்பட முசலியில் உள்ள அணைத்து கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர்.
இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009 ஆம்2010 ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
5 வருடங்களுக்கு மேலாக அம்மக்கள் மேற்கொண்டு வந்த முயற்சியின் பலனாக தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர்த்தாது அருகில் உள்ள கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமம் சுற்றிவர கடற்படையினருடைய பாதுகாப்பில் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளினுள் சென்ற மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தடையங்கள் காணப்பட்டுள்ளது.குறித்த கிராமத்தினுள் மக்களுடைய வீடுகள் பல திருத்தப்பட்ட நிலையில் சிங்கள மக்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற விடையம் தெரிய வந்துள்ளது.கடற்படையினர் தமது குடும்பங்களை அழைத்து வந்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து தமது குடும்பங்களை குடியேற்றியுள்ளனர்.
சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.உள்லே எவரும் சென்று பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள வயற்காணியில் தற்போது கடற்படையினர் சிறு போக நெற் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருவதோடு மரக்கறி தோட்டம் ஒன்றையும் செய்து வருகின்றனர்.முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கடற்கரையில் கடல் உணவுகளை பிடித்து தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.எமது சொந்த மண்ணில் எம்மை மீள் குடியேர விடாது அதனை அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கி கடற்படையினருடைய குடும்பங்களை குடியமர்த்தி விட்டு எம்மை நடுக்காடுகளினுள் குடியமர அனுமதித்துள்ளமை எவ்வகையில் நீதி என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக