//]]>3

புதன், 20 ஜூன், 2012

மதங்களை அவமதிக்கும் சிங்களவர்கள்.


சிறீலங்காவில் குடியிருக்கும் சிங்களவர்கள் மனித நேயத்தை மட்டுமன்றி மதங்களையும் அவமதிக்கும் தன்மை கொண்டவர்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் தற்பொழுதும் அது தமிழ் மக்களை எந்த அளவில் பாதித்துள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் வெளியாகியுள்ளது.



யாழ்ப்பாணம் நல்லூர் கீரிமலை நைநாதீவு நாகபூசணி மற்றும் தொண்டமனாறு செல்வச்சன்னிதி என்று நீளும் மத ஆக்கிரமிப்பு பட்டியலுக்கு அடுத்த கட்டமாக கிறிஸ்தவ மக்களின் அருள்மிக்க புனித தலமாக போற்றப்படும் மடு ஆலயத்தில் அண்மையில் நிறுவப்பட்டுள்ள அறிவித்தல் பலகை ஒன்று அங்கு எந்த அளவில் மத அவமதிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

ஆக்கிரமிப்பு போர்க்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆதரவு வழங்கியபோது முன்னொரு சந்தர்ப்பத்தில் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளான இவ் ஆலயம் தற்போது படையெடுக்கும் சிங்களவர்களின் கலாச்சார ஊடுருவலின் மையமாகிவிடும் அச்சம் காணப்படுவதை உணர்ந்த நிர்வாகம் அங்கு சில அறிவித்தல்களை செய்துள்ளது.

அதில் மிக முக்கியமானது ஆடைகளினால் ஆன கலாச்சார பிரதிபலிப்பு பற்றியதாகும். மடு ஆலய வளாகத்துக்குள் பிரவேசிக்கும் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள இல் அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல தமிழ் இளைஞர் பெண்கள் முன்னர் போன்றே இவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டவாறு தமது கலாசாரத்தைப் பேணி வருகின்றனர்.

கண்டி புனித தலதா மாளிகையினுள் உள்நுளைய பிரத்தியோக கட்டளைகளை பின்பற்றும் சிங்களவர்கள் ஏன் தமிழ் மக்களின் ஆலயங்களை அவமதிக்கின்றார்கள் என்பதற்கு விடை இனவாதமே என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் என இந்த ஆலயத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் எமது செய்தியாளரிடம் ஆதங்கம் வெளியிட்டிருக்கின்றார்.


சிங்களவர்கள் ஆடை அணிவதில் ஒழுக்கத்தைப் பேணத் தவறுவதாலேயேஇ இந்த அறிவிப்புப் பலகையில் முதலில் சிங்களத்தில் எழுதி பின்னர் ஒப்புக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக