//]]>3

புதன், 20 ஜூன், 2012

11 வருடங்களுக்கு பின்பு ஒட்டி பிறந்தவர்கள் இன்று பிரிப்பு


மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் ஆராதனா, ஸ்துதி என்னும் 11 வயதான இரு பெண்குழந்தைகள் பிறக்கும் போதே நெஞ்சு ஒட்டிப் பிறந்தன
.
இவர்களது குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் குழந்தைகளின் உடல்களைத் தனித்தனியாகப் பிரிப்பதில் சிரமம் இருந்தது.

எனவே பிறந்தது முதல் கடந்த 11 வருடங்களாக அக்குழந்தைகள் இருவரும், அங்குள்ள பாதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தாதிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று குழந்தைகள் இருவரும் அறுவை சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட உள்ளனர்.

சுமார் பத்து மணிநேரம் நீடிக்க உள்ள இந்த அறுவை சிகிச்சையை இந்திய மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவர்கள் 23 பேர் கூட்டாக செய்ய உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 11 மருத்துவ தாதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்ற நடக்க உள்ள அறுவை சிகிச்சை பற்றி பேசிய மருத்துவர்கள், இரண்டு குழந்தைகளின் இதயங்களும் ஒரே சவ்வினால் சூழப்பட்டுள்ளதாகவும், அவை கவனமாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும் கூறினர்.

மேலும், குழந்தைகள் இருவரையும் தனித்தனியாகப் பிரிப்பதற்கு நாங்கள் சிறந்த மருத்துவக் குழுவை அமைத்துள்ளோம். குழந்தைகளின் இதயம் மற்றும் கல்லீரலைப் பிரிப்பது மிகவும் சவாலானது என்றனர்.

இதுகுறித்து குழந்தைகளின் தாய் மாயா யாதவ் கூறுகையில், ‘நான் இன்னும் நான்கு தினங்கள் மருத்துவமனையில் இருப்பேன். எனது குழந்தைகளின் உடல்களைப் பிரிப்பதற்காக மருத்துவ நிபுணர்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும் நான் இப்போதும் பதற்றமாகவே இருக்கிறேன்’ என்றார்.

அறுவை சிகிச்சை முடிந்தாலும், குழந்தைகளின் உடல்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட மேலும் ஒரு வாரம் ஆகும். எனினும் இந்த அறுவை சிகிச்சையால் ஏற்படும் காயங்கள் குணமடைய மேலும் பல வருடங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக