//]]>3

புதன், 20 ஜூன், 2012

பாகிஸ்தான் பிரதமர் அதிரடி நீக்கம்- நீதித்துறை


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியை பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்து பரபரப்பு தீர்ப்பளித்தது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்


கோர்ட் அவமதிப்பு வழக்கில் இந்த பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதன் படி ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அவர் பிரதமர் பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

அதிபர் அசிப் அலி சர்தாரிக்கு எதிரான அயல்நாட்டு பண மோசடி குறித்து சுவிஸ் வங்கி அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் கோரிக்கை வைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து கூறியும் அவர் அதனை ஏற்காமல் கடிதம் எழுத மறுத்து வந்தார்.

இதனையடுத்து இந்தக் குற்றசாட்டிற்காக பிரதமர் கிலானியை 37 வினாடிகள் கைதும் செய்தது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்.

ஆனால் இதனை எதிர்த்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் கிரிக்கெட் வீரரும் இன்றைய அரசியல் வாதியுமான இம்ரான்கான் ஆகியோர் மனு செய்திருந்தனர்.

இந்த மனுவின் மீதான விசாரணைகள் முடிந்தவுடன் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக