//]]>3

சனி, 7 ஏப்ரல், 2012

புனித வெள்ளிதினத்தில் யேசு வந்தது உன்மை


புனித வெள்ளியான நேற்றைய தினம், தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கேரளா பெண் ஒருவருக்கு உடலில் ரத்தம் வழிந்ததால் பரபரப்பு எற்பட்டு உள்ளது.


இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது எப்படி அவரது கை,கால்களில் ரத்தம் வந்ததோ அதுபோல் இந்த பெண்ணின் உடலில் ரத்தம் வழிந்தது.
அவர் கேரளா மாநிலம் பாலகாடு தொட்டிபாறையை சேர்ந்த ஜோஸ்பின் விமலா(வயது 30). இவர் வருடம் தோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார்.
ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆஸ்ரமத்தில் தங்கி இருப்பார். இந்த ஆஸ்ரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு நடத்துவார்கள்.
அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொண்டு, தவக்காலமான 40 நாட்களும் இங்கேயே தான் இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும் தவக்காலத்தில் பங்கு கொண்டு ஜோஸ்பின் விமலா இன்று புனித வெள்ளி என்பதால் ஆஸ்ரமத்தில் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.
அப்போது பிரார்த்தனையில் ஆழந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் உடலில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதாவது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவரது 2 கை, 2 கால்கள், முகத்தில் ரத்தம் வழியும். அதுபோன்று ஜோஸ்பின் விமலாவிற்கும் ரத்தம் வழிந்தது. இதனை அருகே இருந்தவர்கள் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் மெல்ல மெல்ல அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கார்மல் ஆஸ்ரமத்திற்கு படையெடுத்தனர். அவர்கள் ஜோஸ்பின் விமலா உடலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தம் இது ஆண்டவரின் சித்தம். அதனால் தான் இந்த புனித வெள்ளி தினமான இன்று ஜோஸ்பின் விமலா மூலம் காட்சி தருகிறார் என்று வணங்கினர்.
இந்த தகவல் சேலம் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் பரவியது. இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த காட்சியை பார்ப்பதற்காக ஏற்காட்டிற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட ஜோஸ்பின் விமலாவிற்கு உடலில் ரத்தம் வழிவது இது முதல் முறை அல்ல. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அதுவும் புனித வெள்ளி அன்று தான் ரத்தம் கொட்டி வருகிறது.
கேரளாவில் இதுபோன்ற தகவல் பரவியதால் ஜோஸ்பின் விமலா பிரார்த்தனை செய்ய முடியாத அளவிற்கு கூட்டம் மொய்த்து விடும். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏற்காட்டிற்கு வந்து செல்கிறார்.
இதுவரை ஜோஸ்பின் விமலா உடலில் ரத்தம் வழிவது பற்றி தமிழகத்தில் தெரியாத நிலையில் இந்த ஆண்டு புனித வெள்ளியையொட்டி தெரிய வந்தது. இதனால் ஜோஸ்பின் விமலாவை பார்க்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவால் ரட்சிக்கப்பட்ட பெண் என்றே கூறுகின்றனர்.

மொபையிலில் TE



USB இணைப்பில் பயன்படுத்தக் கூடியதும், எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதுமான Power Pot எனப்படும் மின்சார அடுப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுவே USB இணைப்பைக் கொண்ட முதலாவது வெப்ப இலத்திரனியல் மின்சார அடுப்பாகும். இவற்றை மின்சார வசதியற்ற இடங்களில் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்.

இவை 5W, 10 W, 15 W ஆகிய வேறுபட்ட வலுவுடைய மின்சாரத்தில் பயன்படுத்த கூடியவாறு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.
இதன் பெறுமதியானது பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவிற்கு அமைய 125 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்களுக்குள் மாறுபடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

9 வயது மகளை ஓநாய்களுடன் அடைத்து வைத்து தந்தை சித்ரவதை



ஓநாய்களுடன் கூண்டில் 9 வயது மகளை அடைத்து வைத்த தந்தையால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் வசிக்கும் சீனர் ஒருவர் தனது 6 வயது மகனை கொட்டும் பனியில் சட்டை ஏதும் இல்லாமல் ஓடவிட்டு பயிற்சி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் 9 வயது மகளை ஓநாய்களுடன் கூண்டில் அடைத்து பயிற்சி அளித்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ரும்கி. இந்நகரில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடந்தது. இங்கு 2 ஓநாய்கள் அடைக்கப்பட்ட கூண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த கூண்டில் 9 வயது சிறுமி ஸு லின் என்ற சிறுமியும் அடைக்கப்பட்டிருந்தாள். இதுகுறித்து அவளது தந்தை ஸு யாங்ஷெங் கூறுகையில், என் மகள் துணிச்சலுடன் வளர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி. ஆனால் நான் கொடூரமானவன் என்று சிலர் கூறுகின்றனர் என்று சாதாரணமாக கூறினார்.
ஓநாய்களுடன் கூண்டில் சிறுமி இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தைக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாய் மற்றும் ஓநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தொழில் செய்து வருகிறார் ஸுயாங் என்பது குறிப்பிடத்தக்கது.


238 வருடங்கள் களித்து நேற்று


238 வருடங்கள் பழமை வாய்ந்த திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண சுவாமி என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று (06.04.2012 ) காலை 8.30 மணிக்கும் 10.30 மணிக்குமிடைப்பட்ட சுப நேரத்தில் நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் புனருத்தாரன காலத்தில் எல்லா சிலைகளும் அகற்றி ஓரிடத்தில் வைத்து கிரியைகள் நடைபெற்றாலும் மூலவரான காயாரோகண சுவாமி மூலலிங்கம் மட்டும் அகற்றப்படாமல் அடே இடத்தில் வைத்து 6 கால கிரியைகள் நடைபெற்றது.

IMG01232-20120406-1044

திருநெல்வேலி திருவருள் மிகு ஸ்ரீ நீலயதாட்சி சமேத காயா ரோகண சுவாமி ஆலயம் 1774 ஆம் ஆண்டு திருமடந்தை நாத முதலியார் பரம்பரையினரால் கட்டப்பட்டது.

ஆலயத்தின் வடபுறத்தே முத்துமாரியம்மன் ஆலயமும், வடகிழக்கில் தலங்காவற் பிள்ளையார் கோயிலும், தெற்கே வீரமாகாளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

IMG01231-20120406-1034

இவ்வாலய காவற்தெய்வமாகத் தலங்காவற் பிள்ளையார் கோயில் விளங்குகிறது. இவ்வாலயத்தின் மூலவராக காயாரோகணேஸ்வரரும் தெற்கு நோக்கிய திசையில் நீலாயதாட்சி அம்பாளும், உட்பிரகாரத்தில் ஏனைய பரிவார மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

IMG01229-20120406-1033

இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக பூசகர்களாகவும் ஆதீன கர்த்தாக்களாகவும் விளங்கி வருபவர்கள் அந்தணர்களே. அந்த வழியில் பரமசாமிக்குருக்கள் வழி வந்தோரால் இன்றும் நித்திய, நைமித்திய கிரிகைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 1994 இல் பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் பொதுமக்களின் உதவியுடன் காலந்தோரும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

IMG01207-20120406-0954

இந்த ஆலய புனர் நிர்மானப்பணிகளை திருப்பணியாக நிறைவேற்ற தேவஸ்தான பரிபாலன சபையினரும் சிவனடியார்களும் விரும்பியமைக்கமைய 3 கோடி ரூபா செலவில் பணிகள் நடைபெற்றன.

IMG01211-20120406-1002

ஆலயத்தின் கட்டடப் பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு சீர்காழி தொல்லிடத்தைச் சேர்ந்த சிற்பாசாரி கலைஞர் புருஷோத்மன், கட்டட ஒப்பந்தக்காரரான ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் மற்றும் அன்பர்கள் ஆகியோரே சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற குப்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புளியம் பொக்கணையில் பெருவிழா



வரலாற்றுச் சிறப்பு மிக்க கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடந்த பங்குனி உத்தரப் பெருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தூக்கு காவடிகள், ஆட்டக் காவடிகள், பாற்செம்புகள் என்பவற்றுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்ததிக் கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை, நேரத்திக் கடனுக்காக ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள், கோழிகள் எனபன ஏலத்திற்கு விடப்பட்டது. இதன்போது பலர் இவற்றை ஏலத்தில் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு நின்றமையை அவதானிக்க முடிந்ததது.
அத்துடன், ஏராளமான வியாபார நிலையங்கள், ஆலயச் சூழலைச் சுற்றி அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் களைகட்டியது.
பக்தர்களின் போக்குவரத்திற்கான ஒழுங்குகளை கிளிநொச்சி தனியார் போக்குவரத்து கழகமும், இலங்கை போக்குவரத்து சபையும் ஏற்பாடுசெய்திருந்தபோதும், ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உழவு இயந்திரங்களில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
400 வருடங்களுக்கு முற்பட்ட கால வரலாற்றினைக் கொண்ட இந்த ஆலயத்தில் பொங்கலுக்காக 8 நாட்களுக்கு முன்னராகவே விளக்க வைக்கின்ற வைபவமும், இந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஆலயத்தின் பரம்பரைப் பூசகர்கள் பண்டமேற்றும் வண்டியில் சென்று அடியார்களின் நேர்த்திப் பொருட்களை பெற்றவந்து பொங்கல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதி குளமானது



கிளிநொச்சி பாரதிபுரத்திற்கும் அம்பாள் குளத்திற்கும் இடையேயான பிரதான வீதியின் நடுவில் குளம் போன்று பாரிய குழி ஒன்று காணப்படுவதால் இவ்வீதியால் பயணம்செய்ய முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் விவேகானந்தா வித்தியாலம் போன்றவற்றிற்கு செல்லும் பிரதான வீதியாகக் இந்த வீதி காணப்படுவதால் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
மழை காலங்களில் வீதியில் காணப்படும் பாரிய குழியினுள் நீர் தேங்கி நிற்பதால் பலர் விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவில் வீதியை புனரமைத்துத் தருமாறும் இந்தப் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குட்டி நகரம் ஏலம்




2012ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதியன்று நகரம் ஏலம் விடப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஓன்லைனில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
அதன்படி பபோர்ட் நகரம் நேற்று ஏலம் விடப்பட்டது. 12 பேர் பங்கேற்றனர். முதலில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்தது.
கடைசியில் ரூ.4.5 கோடிக்கு ஏலம் முடிந்தது. வியட்னாமை சேர்ந்த 2 கோடீஸ்வரர்கள் நகரை ஏலம் எடுத்தனர். ஏலம் முடிந்தவுடன், அந்த 2 பேரையும் டான்ஜா அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். மீடியாவிடம் பேச அவர்களை அனுமதிக்கவில்லை. அதனால் ஏலம் எடுத்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
ஏலம் குறித்து டாம் சம்மன்ஸ் கூறுகையில், என் பாதி வாழ்நாளை இந்த நகரத்தில் கழித்துவிட்டேன். இப்போது நகரை விட்டு பிரிவது வருத்தமாக இருக்கிறது. மகன் வசிக்கும் இடத்துக்கு அருகில் வாடகைக்கு வீடு பார்ப்பேன் என்கிறார்.
கடந்த 1980ம் ஆண்டில் இருந்து இதுவரை பபோர்ட் நகரில் கிடைத்த அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சம்மன்ஸ்.
பபோர்ட் நகரத்தை 2 பேர் விலைக்கு வாங்கியதால், இதன் மக்கள் தொகை இப்போது இரண்டு மடங்காகி விட்டதாம். அதனால் அமெரிக்காவில் குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்ற பெருமையை பபோர்ட் இழந்து விட்டது.
 விட்டது.

இன்று: ஏப்ரல் 07



1927: முதலாவது தொலைதூர தொலைக்காட்சி ஒளிபரப்பு வாஷிங்டன் டி.சி நகரிலிருந்து நியூயோர்க் நகருக்கு மேற்கொள்ளப்பட்டது.

1939:அல்பேனியா மீது இத்தாலி படையெடுத்தது.

1943: உக்ரேனின் டேராபோவ்லியா நகரில் 1100 யூதர்கள் உள்ளாடைகள் வரை ஆடைகள் களையப்பட்டு அருகிலுள்ள கிராமொன்றுக்கு பேரணியாக கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946: பிரான்ஸிடமிரந்து சிரியா சுதந்திரம் பெற்றது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

1948: உலக சுகாதார ஸ்தாபனம் ஐ.நாவினால் அமைக்கப்பட்டது.

1978: நியூத்திரன் குண்டு தயாரிப்புத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஒத்திவைத்தார்.

2003:  அமெரிக்கத் துருப்புகள் ஈராக்கின் பாக்தாத் நகரை கைப்பற்றின

இலங்கைக்கு எந்தவித தடைகளும் இல்லை


ரோம், மிலன் மற்றும் மொஸ்கோவிற்கான இலங்கை எயார்லைன்ஸ் சேவைகள் எந்தவித தடைகளும் இன்றி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

தற்போது உள்ள அட்டவணைப் படி எந்தவித மாற்றங்களும் இன்றி செயற்படும் என இலங்கை எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

அதிநவீன ஒன்லைன் வசதியைக் கொண்ட இரகசியக் கமெராக்கள்



பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொருத்தப்படும் இரகசியக் கமெராக்கள் மேற்கொள்ளும் பதிவுகளை சேமிப்பதற்கு கணினியுடன் நேரடியாக இணைக்கப்படுவது அவசியமாகும். இதனால் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடும்.
ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ION Air Pro POV இரகசியக்கமெராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளை நேரியாக ஒன்லைன் சேமிப்பான cloud storage ல் சேமிக்க முடியும். மேலும் ஐந்து மெகா பிக்சல் வில்லையைக் கொண்ட இந்த வீடியோ கமெரா மூலம் 1080 பிக்சல்கள் உயர் பிரிதிறன் கொண்ட காட்சிகளாக பதிவு செய்ய முடிவதுடன் அதன் முன் 170 டிகிரில் காணப்படும் காட்சிகளை உள்ளடக்கவல்லது.

நல்லதா...?



கித்துலக வருண 2012' கண்காட்சி இன்று சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விற்பனைப் பொருட்களைப் பார்வையிடுவதை படங்களில் காணலாம். 

நாட்டின் பல பாகங்களிற்கும் இன்று சூரியன்



இன்று சூரியன் நாட்டின் பலபாகங்களிற்கும் மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

இன்று நண்பகல் 12.13இற்கு நாட்டின் சில பிரதேசங்களிற்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன்படி வக்கடுவ, பெல்மதுளை, யட்டியந்தோட்டை, ராகமை, கொத்மலை, கரவனெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

இந்நிலைமையானது கடந்த 5ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தமிழ் அமிதாப்..?



ஆசியாவைப் பொறுத்தமட்டில் ஒரு சில சூப்பர் ஸ்டார்களே இருக்கிறார்கள். ஜக்கிசான், ரஜினி, அமிதாப் பச்சான் போன்ற முன்னணி நடிகர்களே சூப்பர் ஸ்டார்களாக, நடிப்புலகின் ஜாம்பவான்களாக இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். ஆனால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அநேகமானோர் அமிதாப் பச்சனைத்தான் குறிப்பிடுவார்கள்.


அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்று கணிப்பினை ரசிகர்கள் வாயிலாக மேற்கொண்டது. அந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்திருந்தது. இருப்பினும், அண்மையில் கோச்சடையான் படம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட ரஜினி - உண்மையான சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன்தான் என்று கூறியிருந்தார். இப்படி பல புகழுக்கு சொந்தக்காரரான அமிதாப்புடன் தான் வெகுவிரைவில் இணைந்து நடிக்கப்போவதாகவும் ரஜினி கூறியிருந்தார். 

இது இப்படியிருக்க, அமிதாப் பச்சனை தமிழ் படமொன்றில் எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பல இயக்குநர்கள் முயற்சித்தார்கள். அமிதாப்பின் நெருங்கிய நண்பர்களான ரஜினி, கமல் உட்பட பலர் முயற்சித்தும் அது சாத்தியப்படவில்லை. கடைசியாக எந்திரனில் அமிதாப்பை எப்படியாவது நடிக்க வைத்துவிடவேண்டும் என பலர் முயற்சித்தும் அதுவும் இறுதிநேரத்தில் கைகூடாமல் போயிருந்தது. அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதை வைத்துப் பார்த்தபோது அவருடன் இணைந்து அமிதாப் நடிப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதற்கு முன்பாக வேறு ஒரு செய்தி இப்போது வெளிவந்திருக்கிறது.

காமராஜர், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கிறன. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து தமிழ் படமொன்றினை பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதை அமிதாப் பச்சனுக்கு பிடித்துப் போய்விட்டதாம். தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இப்படத்தினூடாக நிறைவேறப்போகிறது என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியதாக நம்பகமான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

வியாழன், 5 ஏப்ரல், 2012

இலங்கையின் இரட்டை அழகு..!



2012ம் ஆண்டுக்கான தெரண வீற் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை இம்முறை இரண்டு பேர் தட்டிச்சென்றுள்ளனர். முதலாவது இடத்தை வீனு உதானி சிறிவர்தன மற்றும் சுமுது பிரசாதினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

மூன்றாவது இடத்தை ரமாஷா கலப்பத்தி பெற்றுக்கொண்டார். வரலாற்றில் முதற் தடைவையாக இருவர் மிஸ் ஸ்ரீலங்கா பட்டத்தை 


சுவீகரித்துக்கொண்டாலும் 2012ம் ஆண்டுக்கான உலக அழகிப்போட்டியில் சுமுது பிரசாதினி கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் பிறந்தநாள் துபாயில்


நடிகை சிம்ரன் தனது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் கேக் வெட்டி கொண்டாடினார்.

வெள்ளித்திரையில் கொடிகட்டி பிறந்த நடிகை சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டார்.

இப்போது சின்னத்திரையில் அசத்தி கொண்டிருக்கும் சிம்ரன், ஜெயா டி.வி.யின் ஜாக்பாட் நிகழ்ச்சி‌யை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியின் 500வது எபிசோட்டை துபாயில் நடத்தி வருகின்றனர் ஜெயா டி.வி. குழுவினர். இதற்காக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றிருந்தார் சிம்ரன்.

சிம்ரனுக்கு நேற்று 04.04.12ம் திகதி பிறந்தநாள். தனது பிறந்தநாளை துபாயில் உள்ள இந்திய‌ உய‌ர்நிலைப்ப‌ள்ளியின் ஷேக் ராஷித் அர‌ங்கில் த‌ன‌து க‌ண‌வ‌ர், குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் ர‌சிக‌ர்க‌ளுட‌ன் எளிய‌ முறையில் கொண்டாடினார்.

ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ளின் பிர‌முக‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து வாழ்த்துக்க‌ளை ந‌டிகை சிம்ர‌னுக்கு தெரிவித்துக் கொண்ட‌ன‌ர்.

1 மாத கைக்குழந்தையை வீசிய 17 வயது திருமணம் ஆகாத தாய்



17 வயது சிறுமி ஒருவர் தான் ஈன்றெடுத்த 1 மாத கைக்குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசிய சம்பவமொன்று தொடம்கொட – கந்தனகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் பற்றி எமக்கு மேலும் தெரியவருவதாவது,
தொடம்கொட – கந்தனகொட பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி திருமணம் ஆகாதவர்.
இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதன் விளைவாக ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்றை ஈன்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (03) அதிகாலை 3.30 மணியளவில் தான் ஈன்ற குழந்தையை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.
இந்த சம்பவத்தை காலை வேளையில் அறிந்து கொண்ட அயலவர்கள் குழந்தையை கிணற்றில் இருந்து மீட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தபோது குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து தொடம்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் 17 வயது தாயை (சிறுமியை) கைது செய்துள்ளனர்.

டைட்டானிக் மாண்டது ஆணிகளே

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.


இக்கப்பலில் பயணிகள், ஊழியர்கள் என 2,200க்கும் அதிகமானோர் பயணிகள் இருந்தனர். டைட்டானிக் கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. மீதி 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர்.

உலக வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த இந்த துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி டைட்டானிக் விபத்து தொடர்பான பல தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
தரம் குறைந்த ஆணியால் வந்த வினை: 
அமெரிக்காவை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிவியல் கதை எழுத்தாளர் ரிச்சர்ட் கார்பீல்டு டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கான முக்கியமான காரணங்களை கூறியுள்ளார்.

உலோகவியல் (மெட்டாலர்ஜி) துறையில் அதிக அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் டிம் போக், ஜெனிபர் ஹூப்பர் மெக்கர்ட்டி ஆகியோர் உடைந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை ஆராய்ச்சி செய்தனர்.
அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லண்ட் உல்ஃப் தளத்தில்தான் டைட்டானிக் கப்பல் 1909-11ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அங்கு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கப்பலின் அடிப்பகுதியை கோர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘ரிவிட்’ (ஆணி) தரமானதாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது.

அந்த ரிவிட்கள் சரியாக வார்க்கப்படவில்லை என்றும் அவற்றை ஒழுங்கின்றி அடித்து கப்பலை கோர்த்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால், கப்பலின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட உறுதித் தன்மை குறைவாக இருந்திருக்கிறது. அந்த பகுதி பனிப் பாறையில் இடித்ததும் உடைந்துவிட்டது என்று தெரியவந்துள்ளது.

செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற ஆணிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தியதே படுபயங்கர விபத்தையும் உயிரிழப்பையும் ஏற்படுத்திவிட்டது.

அடுத்ததாக, வெப்ப மாற்றம். 1912-ல் கரீபியன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் காணப்பட்டது. இதனால், கடலுக்குள் நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருந்திருக்கிறது.

இந்த நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பனிப் பாறைகள் திரண்டு கப்பல் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆக, கடலில் ஏற்பட்டிருந்த இயற்பியல் மாற்றங்களும் துரதிர்ஷ்டவசமாக கப்பல் விபத்துக்கு காரணமாகிவிட்டது என்று ரிச்சர்ட் கூறியுள்ளார்.

3D யில் மாறிய டைட்டானிக்: 
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ல் வெளியான படம் டைட்டானிக்.

கப்பல் விபத்தை சித்தரித்து பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டைட்டானிக் (1997) படம் வெளிவந்த பிறகு, நீல் டிகிராஸ் டைசன் என்ற வானியல் நிபுணர் ஒருவர் கேமரூனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

படத்தின் நாயகி கேத் வின்ஸ்லெட் வானில் இருக்கும் நட்சத்திரங்களை ரசிப்பது போல ஒரு காட்சி அமைத்திருக்கிறீர்கள். ஆனால், 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இரவு (கப்பல் மூழ்கிய இரவு) நட்சத்திரங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை.

எல்லாவற்றையும் மிக துல்லியமாக கவனித்து செய்யும் கேமரூன் இந்த சாதாரண தவறைக் கூட செய்திருக்க கூடாது என அதில் கூறியிருந்தார்.

இதை கருத்தில் கொண்டு, சம்பவம் நடந்த போது நட்சத்திரங்கள் எப்படி இருந்ததோ, அச்சு அசலாக அதே போலவே 3டி படத்தில் மாற்றம் செய்திருப்பதாக கேமரூன் கூறியுள்ளார்.

ஜெனிவால் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்



சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த, இரண்டு நாள் சிறப்பு விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. 

இந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சிறிலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினர்.
அதேவேளை, எதிர்க்கட்சியினர், சிறிலங்கா ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் – நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக எச்சரித்தனர்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்துகள்-
சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெரும-
“மனிதஉரிமைகள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, அபிவிருத்தி அடைந்த நாடுகளை சக்திவாய்ந்த நாடுகள் மிரட்டுவதை ஐ.நா அனுமதிக்கக் கூடாது.
ஜெனிவா தீர்மானம் நாட்டில் மீண்டும் சிங்கள- தமிழ் இனங்களுக்கிடையிலான பிரச்சினைக்கே கொண்டு செல்லும்.
சிறிலங்கா மீதான இந்தத் தீர்மானம் மனிதஉரிமைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இராஜதந்திர ரீதியாக நாம் உண்மையை உலகிற்கு சொல்வோம்.
சிங்கள மக்கள் அனுபவிக்கும் எல்லா சுதந்திரத்தையும் உரிமைகளையும் தமிழ்மக்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.“
சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச-
“ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், ஏற்பட்ட சவால்களை முறியடிப்பதில் சிறிலங்கா அதிபர் மிகவும் தைரியத்துடன் செயற்பட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இரகசியச் சதி செய்கின்றன.
வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து அவர்களால் செய்ய முடியாது போனதை, பராக் ஒபாமாவை வைத்து செய்ய முனைகிறார்கள்.
வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டுடன் ஆட்சிக்கு வரலாம் என்று கனவு காண்கிறார்கள்.“
ஐதேக. நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன்-
“ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்கா அமைச்சர்கள் கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையிலன்றி கண்டபடி கருத்துகளை வெளியிடுகிறார்கள்.
எந்தவொரு நாடும் சிறிலங்கா விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறது சிறிலங்கா அரசின் கொள்கை அறிக்கை.
இதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு என்றால், ஐ.நாவின் உறுப்புரிமையில் இருந்து உடனடியாக விலக வேண்டும்.“
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க–
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான அறிக்கைகளை வெளியிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்கக் கூடாது- அது முழுமையற்றது.
அதில், இந்தியாவும் அமெரிக்காகவும், விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் கொடுத்த – போரின் முன்னைய காலகட்டங்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை.“
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல-
“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் வேறு விதமாகச் சொல்கிறார்.
ஜெனிவா தீர்மானம் சட்டரீதியாக சிறிலங்காவைக் கட்டுப்படுத்தாது என்றும், அது நாட்டின் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறுகிறார்.
இந்தத் தீர்மானத்தை வைத்து சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்குநாடுகள் கொண்டு வரக் கூடும்.
சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐ.நா ஊடாக விதிக்கத் தேவையில்லை. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அதனைச் சுயமாகவே செய்யலாம்.
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்த தவறிவிட்டது. அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு 13வது திருத்தம் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியையும் இல்லை என்று கூறியது.
இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் சரிவரக் கையாளாது போனால், சூடானில் ஏற்பட்டது போன்று நாட்டை பிளவுபடுத்தும் நிலைக்குக் கொண்டு செல்லும்.“

செல்சி, ரியல் மாட்ரிட் அரையிறுதிக்கு தகுதி



சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் பார்சிலோனா- செல்சி, ரியல் மாட்ரிட்- பேயர்ன் மியூனிச் அணிகள் மோதுகின்றன.

நேற்று லண்டன் ஸ்டிராம் போர்டு பிரிட்ஜ் மைதானத்தில் செல்சி, பென்பிகா அணியை சந்தித்தது. ஏற்கனவே நடந்த முதல் லெக் காலிறுதி ஆட்டத்தில் செல்சி 1-0 என்று வெற்றி பெற்றிருந்தது.

நேற்று நடந்த ஆட்டத்தில் 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செல்சி வீரர் பிராங்க் லேம்பர்டு கோலாக மாற்றினார். இதற்கு 85வது நிமிடத்தில் பென்பிகா அணியின் சேவி கார்சியா பதில் கோல் அடித்தார்.
ஆனாலும் கடைசியில் 92வது நிமிடத்தில் செல்சி அணியின் ரால் மெர்சிலஸ் 2வது கோலை அடித்தார். இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் செல்சி வெற்றி பெற்று 3-1 என்ற சராசரி கோல் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.

யாழ்.மாவட்டத்தில் வர்ணத்திலான சீருடை



யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் பணியாற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே வர்ணத்திலான சீருடை வழங்ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இதற்காக பெண்களுக்கான சேலைகள் அடங்கிய ஒரு தொகுதி சீருடைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


எதிர்வரும் புதுவருடத்திலிருந்து இவர்கள் கடமையின் போது கட்டாயம் இதனையே அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகிருந்த நிலையிலேயே இந்நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் நீல நிலத்திலான சீருடையே வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. ஏற்கனவே ஒரு பகுதி உத்தியோகஸ்தர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.