238 வருடங்கள் பழமை வாய்ந்த திருநெல்வேலி ஸ்ரீ நீலாயதாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண சுவாமி என அழைக்கப்படும் பரவைக்குளம் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று (06.04.2012 ) காலை 8.30 மணிக்கும் 10.30 மணிக்குமிடைப்பட்ட சுப நேரத்தில் நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் புனருத்தாரன காலத்தில் எல்லா சிலைகளும் அகற்றி ஓரிடத்தில் வைத்து கிரியைகள் நடைபெற்றாலும் மூலவரான காயாரோகண சுவாமி மூலலிங்கம் மட்டும் அகற்றப்படாமல் அடே இடத்தில் வைத்து 6 கால கிரியைகள் நடைபெற்றது.

திருநெல்வேலி திருவருள் மிகு ஸ்ரீ நீலயதாட்சி சமேத காயா ரோகண சுவாமி ஆலயம் 1774 ஆம் ஆண்டு திருமடந்தை நாத முதலியார் பரம்பரையினரால் கட்டப்பட்டது.
ஆலயத்தின் வடபுறத்தே முத்துமாரியம்மன் ஆலயமும், வடகிழக்கில் தலங்காவற் பிள்ளையார் கோயிலும், தெற்கே வீரமாகாளி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

இவ்வாலய காவற்தெய்வமாகத் தலங்காவற் பிள்ளையார் கோயில் விளங்குகிறது. இவ்வாலயத்தின் மூலவராக காயாரோகணேஸ்வரரும் தெற்கு நோக்கிய திசையில் நீலாயதாட்சி அம்பாளும், உட்பிரகாரத்தில் ஏனைய பரிவார மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

இந்த ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக பூசகர்களாகவும் ஆதீன கர்த்தாக்களாகவும் விளங்கி வருபவர்கள் அந்தணர்களே. அந்த வழியில் பரமசாமிக்குருக்கள் வழி வந்தோரால் இன்றும் நித்திய, நைமித்திய கிரிகைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 1994 இல் பங்குனி மாத உத்தர நட்சத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் பொதுமக்களின் உதவியுடன் காலந்தோரும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆலய புனர் நிர்மானப்பணிகளை திருப்பணியாக நிறைவேற்ற தேவஸ்தான பரிபாலன சபையினரும் சிவனடியார்களும் விரும்பியமைக்கமைய 3 கோடி ரூபா செலவில் பணிகள் நடைபெற்றன.

ஆலயத்தின் கட்டடப் பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு சீர்காழி தொல்லிடத்தைச் சேர்ந்த சிற்பாசாரி கலைஞர் புருஷோத்மன், கட்டட ஒப்பந்தக்காரரான ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் மற்றும் அன்பர்கள் ஆகியோரே சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற குப்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக