//]]>3

சனி, 7 ஏப்ரல், 2012

புளியம் பொக்கணையில் பெருவிழா



வரலாற்றுச் சிறப்பு மிக்க கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடந்த பங்குனி உத்தரப் பெருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தூக்கு காவடிகள், ஆட்டக் காவடிகள், பாற்செம்புகள் என்பவற்றுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்ததிக் கடன்களை நிறைவேற்றினர்.
இதேவேளை, நேரத்திக் கடனுக்காக ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆடுகள், கோழிகள் எனபன ஏலத்திற்கு விடப்பட்டது. இதன்போது பலர் இவற்றை ஏலத்தில் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு நின்றமையை அவதானிக்க முடிந்ததது.
அத்துடன், ஏராளமான வியாபார நிலையங்கள், ஆலயச் சூழலைச் சுற்றி அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் களைகட்டியது.
பக்தர்களின் போக்குவரத்திற்கான ஒழுங்குகளை கிளிநொச்சி தனியார் போக்குவரத்து கழகமும், இலங்கை போக்குவரத்து சபையும் ஏற்பாடுசெய்திருந்தபோதும், ஆலயத்திற்கு அண்மையில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உழவு இயந்திரங்களில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
400 வருடங்களுக்கு முற்பட்ட கால வரலாற்றினைக் கொண்ட இந்த ஆலயத்தில் பொங்கலுக்காக 8 நாட்களுக்கு முன்னராகவே விளக்க வைக்கின்ற வைபவமும், இந்த நிகழ்வினைத் தொடர்ந்து ஆலயத்தின் பரம்பரைப் பூசகர்கள் பண்டமேற்றும் வண்டியில் சென்று அடியார்களின் நேர்த்திப் பொருட்களை பெற்றவந்து பொங்கல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக