செவ்வாய், 3 ஏப்ரல், 2012
பிரித்தானிய பா.உ-யாழ். இன்னும் இரு வருடங்களில் மேலும் வளரும்
யாழ். விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதிநிதி லோட் நஸ்பியும் அவரது துணைவியாரும் இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். மாவட்டச் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொருட்டு, சமூர்த்தி கிளை, மீள்குடியேற்றக் கிளை, திட்டமிடல் கிளை, நிதிக்கிளை, நிர்வாகக் கிளை மற்றும் புள்ளி விபரக் கிளை என்பனவற்றுக்கு சென்று பார்வையிட்டு அவைகளின் செயற்பாடுகள் தொடர்பில் இவர்கள் கேட்டறிந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து நேரில் பார்வையிட்டு பிரிட்டன் அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலேயே தமது பயணம் அமைந்துள்ளதாக பிரித்தானிய பிரதிநிதி கருத்து தெரிவித்தார்.
அத்துடன் இன்னும் இரு ஆண்டுகளில் தற்போதுள்ள யாழ்ப்பாணம் மிகுந்த வளர்ச்சியைக் காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தேசிய மலர் தொடர்பில் இணக்கம்
தேசிய மலர் தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சு இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது.
சரியான தேசிய மலர் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் நேற்றைய சந்திப்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய நிம்பியா ஸ்டெலாடா என்ற விஞ்ஞானப் பெயரினால் அழைக்கப்படும், நீலோற்பமலர் நாட்டின் தேசிய மலரென குறித்த குழு தீர்மானித்துள்ளதாக உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் அஜித் சில்வா குறிப்பிட்டார்.
இதற்கமைய நீலோற்பல மலரின் புகைப்படம் அனைத்து பாடசாலைப் புத்தகங்களிலும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மலர் தொடர்பான புகைப்படம் தவறாக பிரசுரிக்கப்பட்டமை தொடர்பில் எழுந்த பிரச்சினையால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானம் எதிர்வரும் சில வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக உயிர்ப் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் அஜீத் சில்வா மேலும் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 23ம், 16ம் திகதிகளில் இரண்டாம் தவணை கல்விஆரம்பம்
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் 23ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 16ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் 5ம் திகதி ஆரம்பமாகிறது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் யாழில்
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பீ.சி. லோட் நெசபி இன்று செவ்வாய்கிழமை யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகையை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ். அரசியல் குறித்த மக்களின் எதிர்ப்பு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கை, அபிருத்தி, சுகாதாரம் மிதிவெடியகற்றல் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆயருடன் உரையாடி ஆராய்ந்தார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விதவைகளின் வாழ்வதார அபிவிருத்தி, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதாக யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் தெரிவித்துள்ளார்.

பந்துல குணவர்த்தனவிற்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் மோதல்
தனிநபர் ஒருவர் மாதத்திற்கு உணவு உண்டு நீர் அருந்தி உயிர்வாழ 2500 ரூபா போதுமானது என்ற கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கருத்து தொடர்பில் இன்று (03) எமது சகோதர தொலைக்காட்சி சேவையான தெரண ரீவியில் விவாதம் இடம்பெறவுள்ளது.
தான் கூறிய 2500 ரூபா விடயம் தொடர்பில் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஒருவருடன் விவாதம் நடத்தி தனது கருத்தை நிரூபித்துக் காட்ட தன்னால் முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன அண்மையில் சவால் விடுத்திருந்தார்.
அமைச்சர் விடுத்த இந்த சவாலை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அமைச்சர் பந்துல ரவி கருணாநாயக்கவுடன் விவாதிக்க சம்மதம் தெரிவித்தார்.
இதனை அடுத்து தெரண தொலைக்காட்சியில் பிரதி செவ்வாய் இரவு ஔிபரப்பாகும் ´வாத பிட்டிய´ நிகழ்ச்சியில் 2500 ரூபா விடயம் குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பந்துலவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (03) செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு தெரண ரீவியில் ஔிபரப்பாகும் ´வாத பிட்டிய´ நிகழ்ச்சியில் ´2500 ரூபாவை கொண்டு தனிநபர் மாதமொன்றிற்கு வாழ முடியுமா´ என்ற தலைப்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
குட்டி ஐஸ்...படப்பிடிப்பில் மயங்கி விழுந்தது
நடிகை ஐஸ்வர்யா ராயின் க்ளோனிங் மாதிரி தெரியும் தோனி திரைப்பட கதாநாயகி ராதிகா ஆப்தேவுக்கு இப்போது தமிழில் நிறைய வாய்ப்புக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்று 'வெற்றிச் செல்வன்'. இந்தத் திரைப்படத்தில் நடிகர் அஸ்மலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே.
'வெற்றிசெல்வன்' படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகின்ற நிலையில், படப்பிடிப்பு நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார் ராதிகா. ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகின்ற நிலையில், ராதிகாவுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டே அவர் மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படப்பிடிப்பு சில மணி நேரங்கள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நினைவு திரும்பி சகஜ நிலைக்கு வந்த ராதிகா ஆப்தே கூறும்போது, ஊட்டியில் இவ்வளவு குளிர் இருக்கும் என நினைக்கவில்லை. இரவு படப்பிடிப்பில் இன்னும் அதிக பனி பெய்ததால் தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டேன்,' என்று கூறியுள்ளார்.
ரூ 1,16,87240 வசூல் 3 படத்துக்கு முதல் மூன்று நாட்களில்
கிட்டத்தட்ட ரஜினி படத்துக்கு அடுத்த ஆரம்பம் கிடைத்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியாகியுள்ள 3 படத்துக்கு. முதல் மூன்று நாட்களில் சென்னை நகரில் மட்டும் இந்த கொலவெறி புகழ் படத்துக்குக் கிடைத்துள்ள வசூல் இந்திய ரூ 1,16,87240.
படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாதான் படத்தை சென்னையில் விநியோகம் செய்துள்ளார். சென்னை நகருக்குள் மட்டும் 25 அரங்குகளில் கிட்டத்தட்ட 100 சதவீத பார்வையாளர்களுடன் இந்தப் படம் ஓடுகிறது. இன்று திங்கள்கிழமையும் கூட காலை மற்றும் பகல் காட்சிக்கு 90 சதவீத பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.
படம் குறித்து சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், படத்துக்கான வசூல் நல்ல நிலையில் இருப்பது ஐஸ்வர்யாவை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னை தவிர்த்து செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 50 அரங்குகளில் 3 வெளியாகியுள்ளது. அனைத்திலுமே நல்ல வசூல். மூன்று நாட்களும் 95 சதவீத பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல அரங்குகளில் ஹவுஸ்புல் போர்டுகள்!
மதுரையில் இந்தப் படத்தை அன்பு வெளியிட்டுள்ளார். வசூல் குறித்து அன்பு கூறுகையில், "மதுரையில் இதுவரை தனுஷ் படம் எதுவும் இந்த அளவு அதிக கலெக்ஷன் குவித்ததில்லை. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் தொடரும் என நம்புகிறேன்,´ என்றார்.
ஆனால் இந்த போக்கு நீடிக்குமா? முதல் மூன்று நாள் வசூலை வைத்து படத்தின் வெற்றியைக் கணிக்க முடியுமா?
இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்பு, "கொலவெறி பாட்டுக்கு கிடைத்த பாப்புலாரிட்டி, படத்துக்கான அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு போன்றவைதான் இந்த பெரிய ஓபனிங்குக்கு காரணம். இதே காரணங்கள்தான் படம் குறித்த சில எதிர்மறை விமர்சனங்களைக் கிளப்பிவிட்டுள்ளன. சிலர் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் இப்போதே லாபகரமான ஒன்றுதான். இன்னும் ஒரு வாரம் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடினாலே போதும்... 3 சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடலாம்," என்றார்.
படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா கூறுகையில், "விநியோகஸ்தர்கள் ஸ்வீட் கொடுத்து இந்தப் பட வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வார முடிவிலேயே அவர்களுக்கு போட்ட முதலுக்கு மேல் லாபம் கிடைத்துவிடும். மதுரை அன்பு போன்றவர்கள் வெளிப்படையாகவே படத்தின் வசூல், லாபம் போன்ற விவரங்களைக் கூறி வருகின்றனர். வேறென்ன வேண்டும்?," என்றார்.
சத்யம் திரையரங்கில் இந்தப் படம் இன்று வரை 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடுகிறது. இதுகுறித்து சத்யம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில் வெளியான படங்களில் அசாதாரணமான துவக்கம் என்றால் அது ஐஸ்வர்யா இயக்கியுள்ள 3 படத்துக்குத்தான். வணிக ரீதியில் இது ஒரு நல்ல படம்," என்றார்

ரஜினி- அமிதாப் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்
என்னைப் பொறுத்தவரையில் அமிதாப் பச்சன்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என, நாங்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என அழைக்கின்ற ரஜினி கூறியுள்ளார். லண்டன் மாநகரில் அண்மையில் நடைபெற்ற கோச்சடையான் படம் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரஜினி மேற்படி கூறியுள்ளார்.
ஊடகங்களில் பேசுவதும் ஊடகவியலாளர்களுடன் பேசுவதும் தனக்கு எப்பொழுதும் கூச்சமான விடயம் என்று குறிப்பிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி – அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் சரளமாக பதிலளித்துள்ளார்.
அச்சந்திப்பில் 'சூப்பர் ஸ்டார் அந்தஸ்து' தொடர்பாக கேட்கப்பட்டபோதே, தான் எப்பொழுதும் நேசிக்கின்ற அமிதாப் பச்சன்தான் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார். அத்தோடு அமிதாப் பச்சனுடன் சேர்ந்து மீண்டும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோச்சடையான் படம் பற்றி ரஜினி கூறுகையில்... 'இப்படம் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். சர்வதேச தரத்தில் வெளிவரவிருக்கின்ற இப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் என்ற உத்தரவாதத்தினை நான் தருகின்றேன். அத்தோடு கோச்சடையான் படம் இவ்வருட தீபாவளிக்கு அதாவது நவம்பர் 13ஆம் திகதி நிச்சயமாக திரைக்கு வரும்' என்று கூறினார்.
'நான் இப்பொழுது 90 வீதம் அல்ல... முழுமையாகவே குணமடைந்துவிட்டேன். என் அன்பான ரசிகர்களின் பிரார்த்தனை என்னை பிழைக்க வைத்திருக்கிறது. எனவேதான் அவர்களுக்கான கோச்சடையானில் நான் பாடியிருக்கிறேன்... நான் பாடியிருக்கிறேனா அல்லது வாசித்திருக்கிறேனா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கோச்சடையானுக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது' என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி மேலும் குறிப்பிட்டார்.

திங்கள், 2 ஏப்ரல், 2012
ரஜினி ,கமல் ரசித்து பார்த்தது
தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் கமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் ஸ்ருதிஹாஸனுக்காக அவர் நடித்த ’3’ படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்திருக்கிறார்.
கமல் படத்தை ரசித்து பார்த்தாராம். படம் பார்த்து முடித்த பின் 3 படக்குழுவையும் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யாவையும் பாராட்டியிருக்கிறார்.தனுஷ்-ஸ்ருதி இடையேயான கெமிஸ்டிரி அற்புதமாக இருப்பதாக கூறினாராம்.
படத்தின் ஹீரோவான தனுஷை தனியே அழைத்து நன்றாக நடித்துள்ளதாக பாராட்டியுள்ளார். சில வாரங்களுக்கு முன்பே ரஜினி படத்தை பார்த்துவிட்டார். அப்போது ரஜினி தனுஷையும்-ஸ்ருதிஹாஸனையும் பாராட்டினார். அப்படிப்பட்ட ஜோடிப் பொருத்தமா!(படத்தில்) இருவருக்கும்…..
‘3’ படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே பெருகிக் கொண்டே வருகிறது. “ஊர்ல இப்ப 3-னு ஒரு காய்ச்சல் பரவிடுச்சு. இதுக்கு மருந்து 30-தேதி தான் மார்க்கெட்ல வருதாம்” என்று ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கலப்பாக சமூக இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். ரஜினி-கமல் இணைந்து நடிப்பதை விட மறுபடியும் தனுஷ்-ஸ்ருதி எப்போது இணைவார்கள் என்ற கேள்விகளே அதிகம் பறக்கின்றன.

கரையோர ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளன.
கரையோர ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கல்கிஸ்ஸ ரயில் தரிப்பிடத்திற்கு அருகில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்தமையினால், சில கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
செயலிழந்த ரயில் வேறு என்ஜின் ஒன்றின் ஊடாகவே ரயில்வே பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.
517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிக்கலாம்
1976 ஆம் ஆண்டு சமுத்திர வலய சட்டத்தின் மூலம் இலங்கைக்கு உரித்தான 200 கடல் மைல் துரத்தினைக் கொண்ட 517,000 சதுர கிலோமீற்றருடைய கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடலாம் என யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் புதிய உதவிப்பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தற்போது பாவனையிலுள்ள மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கையை 2013ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கென 25 மில்லியன் ரூபா நிதியுதவியினை வழங்குவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு தற்போது தகுதி அடிப்படையில் மானிய அடிப்பையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாகவும், பத்து தொடக்கம் பதினைந்து நாட்களை வரை கடலில் நின்று மீன்பித் தொழில் ஈடுபடும் மீனவர்களுக்கு 30,000 ரூபா மானியமும், ஒவ்வொருநாளும் மீன்பிடிக்கச் சென்று தீரும்புபவர்களுக்கு 18,000 ரூபா மானியமும், வெளி இயந்திர தும்புக் கண்ணாடிப் படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா மானியமும் வழங்கப்படுவதுடன், வெளி இயந்திரப் பாரி படகு உரிமையாளர்களுக்கு 6,250 ரூபா எரிபொருள் மானியமும் வழங்கப்படுவதாகவும் கணேசமூர்த்தி நடராஜா குறிப்பிட்டுள்ளார்.
சூழல் மாசடையாத புதிய ஓட்டோ
சூழல் மாசடைதல்
என்பது உலகம் எதிர்நோக்கியிருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை. அதிகரித்து வரும்
சனத்தொகை, இதனால் அதிகரித்து செல்கின்ற வாகனங்கள் என பல
பிரச்சினைகளுக்கு உலகம் முகம்கொடுத்து வருகிறது. எதிர்பார்க்காதளவு
உற்பத்தியாகியிருக்கும் வாகனங்களினால் வெளியிடப்படுகின்ற புகை - சூழலை மாசுபடுத்தி
வருகிறது. இதனை எவ்வாறு தடுப்பதென்பது பற்றி விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில்தான் இந்தியாவில் புதுடெல்லியில் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஓட்டோ ரிக்ஷாவை கண்டுபிடித்திருக்கிறார்கள். இலங்கை, இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஓட்டோ வண்டிகளினால் வெளியிடப்படுகின்ற புகைகள் சூழலை அதிகளவாக மாசுபடுத்தி வருகின்றன. இப்படியான நிலையில் சூழலை மாசுபடுத்தாத ஓட்டோ வண்டியின் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.
இந்தியாவின் தொழிற்றுறை மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி மத்திய நிலையத்துடன் இணைந்து மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவகம் இந்த அரியவகை ஓட்டோவினை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வடிவத்திற்கு 'சொலெக்ஷோவ்ஸ்' என பெரிட்டிருக்கிறார்கள். முச்சக்கர வண்களை ஆங்கிலத்தில் 'றைஷோ' என அழைப்பார்கள். அதனைப்போலவே சூரிய சக்தியில் இயங்குகின்ற முச்சக்கர வண்டி என்பதால் 'சொலெக்ஷோவ்ஸ்' என பெயரிட்டுள்ளார்கள்.
இக்கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக டெல்லியின் குறிப்பிட்ட சில நகரங்களில் 1000 ஓட்டோக்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்திலிருக்கும் 'சொலெக்ஷோவ்ஸ்' எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து பாவனைக்கு வரவிருக்கிறது.
மணித்தியாலத்திற்கு 25 கிலோமீற்றர் என்ற வேகத்தில் செல்லக்கூடிய இந்த முச்சக்கர வண்டிகள் மூன்று வடிவங்களில் வெளிவரவிருக்கின்றன. இந்திய ரூபாய்களில் 45 ஆயிரம், 75 ஆயிரம் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் பெறுமதிகளில் இந்த ஓட்டோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
ஆரம்ப கட்டமாக சூரிய சக்தியில் இயங்கும் இந்த அரியவகை முச்சக்கர வண்டிகள் 1000இனை டெல்லியின் முக்கிய நகரங்களில் பாவனைக்கு விடவுள்ளனர். குறிப்பாக கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் இதனை பாவனைக்கு விடவுள்ளனர். இந்த ஓட்டோக்களின் தேவை 10 ஆயிரத்தினை இலகுவில் தொடும் என கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)