//]]>3

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

பந்துல குணவர்த்தனவிற்கும் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் மோதல்





தனிநபர் ஒருவர் மாதத்திற்கு உணவு உண்டு நீர் அருந்தி உயிர்வாழ 2500 ரூபா போதுமானது என்ற கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கருத்து தொடர்பில் இன்று (03) எமது சகோதர தொலைக்காட்சி சேவையான தெரண ரீவியில் விவாதம் இடம்பெறவுள்ளது. 

தான் கூறிய 2500 ரூபா விடயம் தொடர்பில் பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஒருவருடன் விவாதம் நடத்தி தனது கருத்தை நிரூபித்துக் காட்ட தன்னால் முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன அண்மையில் சவால் விடுத்திருந்தார்

அமைச்சர் விடுத்த இந்த சவாலை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அமைச்சர் பந்துல ரவி கருணாநாயக்கவுடன் விவாதிக்க சம்மதம் தெரிவித்தார். 

இதனை அடுத்து தெரண தொலைக்காட்சியில் பிரதி செவ்வாய் இரவு ஔிபரப்பாகும் ´வாத பிட்டிய´ நிகழ்ச்சியில் 2500 ரூபா விடயம் குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பந்துலவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் சம்மதம் தெரிவித்தனர். 
இந்த நிலையில் இன்று (03) செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு தெரண ரீவியில் ஔிபரப்பாகும் ´வாத பிட்டிய´ நிகழ்ச்சியில் ´2500 ரூபாவை கொண்டு தனிநபர் மாதமொன்றிற்கு வாழ முடியுமா´ என்ற தலைப்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »