//]]>3

சனி, 9 ஜூன், 2012

பூனைக் ஹெலிகொப்டர்

நெதர்லாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது வளர்ப்புப் பூனை இறந்தவுடன் அதன் உடலை பறக்கும் ஹெலிகொப்டராக மாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீது மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்



கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார்
இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அதனை பிரபல்யமடையச் செய்யாது தடுக்கும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள் ஓன்றுக்கு 1000 பேர உயிரிளப்பு



இலங்கை வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு தொற்றா நோயினால் 700 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் நாள் ஒன்றிற்கு 950 – 1000 வரையான மரணங்கள் பதிவாவதாகவும் இதில் 700 மரணங்கள் தொற்றா நோயினால் சம்பவிப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



தொற்றா நோய்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்கதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால இந்தத் தகவல்களை வெளியிட்டார்.


2000 அண்டில் பயன்படுத்திய பொருட்களுக்கு 2012 பயன்படும் பொருட்கள்



மனிதன் 2000 ஆம் ஆண்டில் குறித்த தேவைகளுக்காக பயன்படுத்திய உபகரணங்களுக்கு பதிலாக 2012 இல் என்ன உபகரணங்களை பயன்படுத்துகிறான் என்பது தொடர்பான சுவாரஸ்ய விளக்கம்.

வாங்க சிக்கன் பக்கோடா செய்யலாம்



சாதாரண கடலைமா பக்கோடாவே சாப்பிட்டு அலுத்திடிச்சா? வாங்க புதுசா சிக்கனில பக்கோடா செய்து அசத்தலாம்…!
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – சிறிதளவு
இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்

சாட் மசாலா – 1/4 ஸ்பூன்
சீரக தூள் – 1/4 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
கடலை மாவு – 5 ஸ்பூன்
கார்ன் ப்ளார் – 5 ஸ்பூன்
சோடா உப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
ஓமம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

முதலில் எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். பின் சிக்கனை மிக்ஸி அல்லது ஷாப்பரில் போட்டு கொத்துகறி போல் அரைத்து எடுத்து கொள்ளவும் (நைசாக அரைக்க வேண்டாம்). வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு அந்த சிக்கனுடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, சீரக தூள், கரம்மசாலா தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள், ஓமம், சோடா உப்பு, உப்பு, கேசரி பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தனியாக பிசைந்து ஊற வைத்துள்ள சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் சிக்கன் உருண்டையை மாவிற்குள் போட்டு முக்கி எடுக்காமல், கையை மாவில் நனைத்து, அந்த மாவை சிக்கன் உருண்டை மேல் தடவ வேண்டும். (சிக்கனை மாவிற்குள் போட்டு முக்கி எடுத்தால் சிக்கனை விட மாவு நிறைய இருப்பது போல் காணப்படும்.)
பிறகு அந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் பக்கோடா ரெடி!!!
இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம், ஜாகுவார், சிறுத்தை தலைகள் மாயம்



தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகுளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சிங்கம், ஜாகுவார், மற்றும் சிறுத்தை ஆகிய மிருகங்களின் தலைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து காணாமல் போனமை தொடர்பான தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். இவ்விடயத்தை ஆராய்வதற்காக அமைச்சும் தனியான பிரிவொன்றை ஆரம்பித்தள்ளது என தேசிய மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன கூறினார்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மிருகக் காட்சிசாலையில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் மேலதிக விசாரணை நடத்தி எவ்வளவு காலமாக இத்தகைய நடவடிக்கை இடம்பெறுகிறது என்பதை அறிவதுடன் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க விரும்புகிறோம் எனவும் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிதம்பரத்தை ராஜினாமா செய்ய சொல்ல ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி



ஊழல் குற்றச்சாட்டு போடப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட உடனேயே ஒருவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்ட விதி முறைகளின் படி நியாயமாகாது 
குற்றச்சாட்டு விரிவான விசாரணையின் மூலம் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும்.என தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய கருணாநிதி, சிதம்பரத்தை பதவி விலக சொல்ல ஜெயலலிதாவுக்கு தகுதி இல்லை என்பதை மறைமுகமாக சாடியுள்ளார்.

வயது கூடிய பெண்ணை மணக்கலாமா



ஜாதகத்தில் சனி 7 வது வீட்டில் இருந்தால் வயது கூடிய மனைவியே பொதுவாக அமைவாள் என ஜோதிடம் கூறுகிறது. ஆனால் வயது கூடிய பெண்ணை மணப்பதை ஜோதிடம் ஆகாது என்று எதிர்க்கவில்லை.
பொதுவாக ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது. எதற்காக என்றால், ஒருத்தர் நோயாலோ, வயோதிபத்தாலோ சங்கடங்கள் அனுபவிக்க நேர்ந்தால் இன்னொருத்தர் அதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்கள் இதுபோன்று இடைவெளி வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு குறைந்தபட்சம் 5 அல்லது 6 வயது குறைவான பெண்ணையே திருமணம் முடிப்பார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் 12 வயது 13 வயது வித்தியாசமெல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலைமை அப்படி கிடையாது. பெண், ஒத்த வயதுடைய ஆணையோ அல்லது ஓரிரண்டு வருடம் குறைவான வயதுடைய ஆணை முணம் முடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக இந்த வயது வித்தியாசம் என்பதே ஒருத்தர் சங்கடப்படும் போது மற்றொருவர் இளமையுடன் இருந்து செயல்படுவதற்காகத்தான் செய்யப்பட்டது.
ஜோதிடத்தின் பிரகாரம் வயது கூடிய பென்னை திருமணம் செய்வது தவறு இல்லை.

பியர் எப்படி தயாரிக்கப்படுகிறது? (video)

பீர் பொதுவாக மெல்லக் கொல்லும் மது வகைக்குள் அடக்கப்படுகிறது. பீர் குடிப்பதும் உடலுக்கு தீங்கு தான் என்றாலும் ஏனைய மது வகைகள் போல் அதிக பாதிப்பை தருவது இல்லை.
அதை விடுங்க, பீர் எப்படி யார் ஆகிறது தெரியுமா? வாங்க படிப்படியாக அலசலாம்…!



ராதாவின் அக்கா மகளும் சினிமாவில்



பழைய நடிகை ராதாவின் மகள் கார்த்திகா, ”கோ” படத்துக்கு பின்னர் தமிழ் சினிமாவில் திண்டாடிவருகிறார். இந் நிலையில் ராதாவின் அக்கா மகளும் சினிமாவில் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஐ.கணேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படமான ”செம்பட்டை” இல் நடிப்பதற்காக கார்த்திகாவின் பெரியப்பா மகள் கவுரி நம்பியார் என்ற கேரளத்து பங்கிளி ஒப்பந்தமாகியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய கவுரி…
சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன்
என்றார்.
கார்த்திகா படங்களில் ஒப்பந்தமாவதும், பின்னர் விலகுவதாகவும் இருக்கும் இந் நிலையில், இவராவது நீடித்து நல்ல பெயர் வாங்குவாரா என்று பார்ப்போம்…!

தமிழ் நடிகைகளின் பெயர் மாற்றும் அதிஸ்டம்



ஜோதிடம் என்ற பெயரில் மூடநம்பிக்கையில் முக்கி முத்தெடுப்பவர்களில் தமிழ் சினிமா காரர்கள் முன்னனியில் இருக்கிறார்கள்.
பட பூஜை தேதி முதல், ரிலீஸ் தேதி வரை ஜோதிடம்… ஜோதிடம்…. ஜோதிடம்…..
ஹன்ஷிகா மோத்வானி எண் ஜோதிட பிரகாரம் தனது பெயரில் இருந்து மோத்வானியை நீக்கினார். ”பாய்ஸ்” புகழ் ஹரினியும் தனது பெயரை ஜெனிலியா னு மாற்றிக்கொண்டார்.
இந் நிலையில் புது முகங்கள் சிலரும் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் அறிமுகமான மனோ சித்ரா, அந்த பெயரில் ராசி இல்லாமல் நந்தகி என மாற்றினார். அதுவும் கை கொடுக்கவில்லை. எனவே இரண்டாவது தடவையாக மனுமிகா என பெயரை மாற்றியுள்ளார்.
இதே போல் ஹனிரோஸ் தனது பெயரை சவுந்தர்யா என மாற்றினார். அதில் ராசி இல்லாமல் இரண்டாவது தடவையாக துவானி என மாற்றி இருக்கிறார்.

அன்னா ஹசாரே பல்டி அடித்தார் சிம்பு – தலை சொரிகிறார் இயக்குனர்


பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள 14 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்த அன்னா ஹசாரே, அண்மையில் மன்மோகன் சிங் ரொம்போ நல்லவர் என்று பல்டி அடித்தார். (அது தொடர்பான செய்தியை படிக்க


இதே பாணியில் நடிகர் சிம்புவும் நாக்கை புரட்டிப்போட்டு பல்டி அடித்துள்ளார்.
”என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்” என்ற தனுஷ் பட டயலாக்கை சீண்டும் வகையில் தனது ”வாலு” பட ட்ரெய்லரில் ”ஒரு சில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும்” என்ற வசனத்தை சேர்த்து தனுஷ் ஐ கடுப்பாக்கினார் சிம்பு. (இது தொடர்பான முழுமையான செய்தியை படிக்க
இந் நிலையில் தற்போது அந்த வசனத்தை நான் எழுதவில்லை, இயக்குனர் விஜய் தான் எழுதினார் என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.
சிம்புவின் குறித்த வசனம் தொடர்பில் தனுஷ் ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் பல்டி ஒன்று போட்டிருக்கிறார் சிம்பு.
சிம்பு கோபப்படுவாரோ என்று அஞ்சி சிம்பு அறிக்கையை மறுக்க முடியாது தலையை செரிகிறாராம் இயக்குனர்…!

வெள்ளி, 8 ஜூன், 2012

பகல் கனவு எப்படி



விஞ்ஞான நீதியில் நிறைவேறாத ஆசைகள், ஆழ்மனம் என்பவை உணர்வற்ற நிலையில் இருந்து வெளிப்படுவது கனவுகள் எனப்படுகிறது.
பகல் நேரங்களில் வரும் கனவு, படுத்து சிறு நேரத்திலேயே வரும் கனவு போன்றவற்றிற்கெல்லாம் பலன் இல்லை என்று ஜோதிடத்தில் குறப்பட்டுள்ளது.
ஆனால் நள்ளிரவு 12.30 மணிக்குப் பிறகு வரக்கூடிய கனவுகளைத்தான் காலங்களாக பிரித்து ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 12.30 மணி முதல் 2 மணிக்குள் வரும் கனவு 3 மாதங்களில் நிறைவேறும்.
2 மணியிலிருந்து 3 மணிக்குள் காணும் கனவு ஒரு மாதத்தில் நிறைவேறும்.
3 மணியிலிருந்து 5.30 மணிக்குள் காணக்கூடிய கனவு உடனடியாக நிறைவேறும்
என்று பட்டியலிட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விடியற்காலை கனவுகள், அதாவது 3 மணி முதல் 5.30 மணி வரை வரும் கனவுகள் உடனடியாக நல்ல பலன்களைக் கொடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

நடிகைகளின் அம்மாக்கள் சினிமா



தமிழ் நடிகள் முன்னரெல்லாம் தமது மனேஜர்ஸ், மெய் பாதுகாவலர்களுடன் விழக்களுக்கு வலம் வருவார்கள். ஆனால் இப்பொழுது தமது அம்மாக்களையே தமது பாடிகார்ட்ஸ் ஆக்கியுள்ளனர்.
தாய்க்குலமும் நடிகைகளுக்கு நிகராக ஒப்பனைகளில் சக்கை போடு போடுகிறார்கள்.








த்ரிஷாவின் ஒரு கோடியை நூதனமாக ஆட்டை



தமிழ் நடிகை த்ரிஷாவின் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய் மாயமானது தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் த்ரிஷாவின் கணக்கில் இருந்து கடந்த வாரம் ஒருகோடி ரூபாய் காணாமல் போய் இருந்தது.
வங்கி அதிகாரிகளின் விசாரணை மூலம், குறித்த வங்கிக் கிளையில் பணி புரிந்த பணம் வரவு வைக்கும் ஊழியர் ஒருவரால் நூதன முறையில் குறித்த ஒருகோடி ரூபாய் களவாடப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கி அதிகாரிகளின் விண்ணப்பத்தின் பெயரில் இதுவரை த்ரிஷாவால் பொலிசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
குறித்த களவாடப்பட்ட பணம் த்ரிஷாவிடம் மீள ஒப்ப்டைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இன்னும் தகவல் வெளிவரவில்லை.
பிரபல நட்சத்திரங்களிடமே ஆட்டைய போடுகிறார்களே… பொதுமக்கள் ரொம்போ உசாரா இருக்கனும்…!

புதிய பள்சரின் விசேடங்கள்



இந்தியாவின் முன்னனி மோட்டார் நிறுவனமான பஜாஜ், தனது தயாரிப்பான ”பள்சர் 200NS” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பள்சர் 220 இல் சிறு சிறு தவறுகள் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இப் புதிய பள்சர் வெளியிடப்பட்டுள்ளது.
இப் புதிய பள்சர் 200NS, பிரபல BMW நிறுவன மோட்டார் சைக்கிள்களான BMW S1000RR மற்றும் BMW R1200GS ஆகியவற்றை வடிவமைத்த Mr. Edgar Heinrich என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
பிரபல ஸ்போர்ட்ஸ் பக் ஆன KTM Duke 200 இன் எஞ்சின் வடிவமைப்பை மையப்படுத்தி பள்சர் 200 இன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சினை குளிர்மைப்படுத்துவதற்காக திராவக குளிர்மை நுட்பம் ( liquid cooled Teck) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நுட்பம், அதி வேகத்திலும், பைக்கின் எஞ்சின் சீராக இயங்க உதவும்.
இதுவரை பஜாஜ் பள்சர்களில் Twin Spark தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பள்சரில் Triple Spark தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

23.17 bhp வலு இயந்திரம் அதி சிறந்த ஸ்போர்ட்ஸ் அனுபவத்தை அளிக்கக்கூடியது.
அத்துடன் ஒரு லீற்றர் பெற்றோலில் 58 கிலோமீற்றர்கள் ஓடக்கூடியது.
ஆறு கியர் காணப்படுகிறது, முன், பின் சக்கரங்கள் இரண்டிற்கும் டிஷ் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப் புதிய பள்சரின் விலை 85000 இந்திய ரூபாய்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.
இப் புதிய பஜாஜ் பள்சர் 200NS சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கமலின் விஸ்பரூபம் – என்ன கதை? (ட்ரெய்லர் இணைப்பு)


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் கமலின் திரைப்படம் ”விஸ்பரூபம்”. அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை குறித்து கமல்ஹாஸன் கூறுகையில்…
“விஸ்வரூபம் என்மனதிலும் என் கனவிலும் கடந்த ஏழு வருடங்களாக உட்கார்ந்திருந்த கதை. என் மனதில் இடம் பிடித்ததுபோல் ரசிகர்கள் மனதிலும் அது இடம்பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
கதை என்ன?
அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்கத்து தமிழ்ப் பெண் நிருபமா, அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி.எச்.டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள். தனது நடன பள்ளியை மனைவியின் தொந்தரவின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத்.
ஆனால் நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள். மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள்.
அதன் பின்னர் ஏற்படும் வில்லங்கங்களின் தொகுப்பு தான் இந்த விஸ்பரூபம்!
ம்ம்…. விஸ்பரூபத்தை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு காத்திருப்போம்…!


தவமிருக்கும் வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகை சமந்தா



புகழ் பூத்த இயக்குனர்களில் மணிரத்தினமும் ஒருவர். இன்றைய பல நடிகைகளின் கனவே, மணிரத்தினத்தின் படம் ஒன்றில் நடித்துவிடவேண்டும் என்பதுதான்.
அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்தும், அதை தூக்கி எறிந்துள்ளார் நடிகை சமந்தா.
பலத்த எதிர்பார்ப்ப எற்படுத்தியுள்ள மணிரத்தினத்தின் ”கடல்” திரைப்படத்தில் சமந்தா ஒப்பந்தமாகியிருந்தார்.
கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று பேட்டி அளித்திருந்தார்.
ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார்.
மணிரத்தினம் விலக்காத நிலையில் தானாகவே சமந்தா இவ் அரிய வாய்ப்பை தூக்கி எறிந்தது தொடர்பில் கோடம்பாக்கத்தில் மர்மம் நிலவுகிறது…!
தானாக விலகினாரா, இல்லை வற்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

பாகிஸ்தானின் வயிற்றில் புளியை கரைக்கும் ஹிஸ்புல்



காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாலுதீன்…
காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பல சுற்று அமைதிப் பேச்சுகளை நடத்தி வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்துக்கு ஆயுதவழிப்பட்ட தீர்வுதான் சரியானதாக இருக்கும். இதனால் பாகிஸ்தானும் இந்தியாவும் நடத்துகின்ற அமைதிப் பேச்சுகளை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸாதான் இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் இந்த புதிய நிலைப்பாடு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தை காயப்படுத்துவதாக உள்ளது.
ஈராக்கிலும் ஆப்கானிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியா படைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன? இந்த வகையில் காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் தானாகவே விலக வேண்டிய நிலைமை ஏற்படும்.என தெரிவித்துள்ளார்.
இது போன்ற தீவிரவாத அமைப்புக்களின் எச்சரிக்கைகளுக்கு அடிபணியாது சமாதான போக்கை கடைப்பிடித்தால் தான் நாட்டுக்கு நன்மை விளையும் என்பதை பாகிஸ்தான் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலியானாவின் கவர்ச்சி படம்

இலியானாவின் ஒளி ஊடுபுகவிடும் சூடான புடவை கவர்ச்சி படம் உங்களுக்காக