தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகுளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சிங்கம், ஜாகுவார், மற்றும் சிறுத்தை ஆகிய மிருகங்களின் தலைகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து காணாமல் போனமை தொடர்பான தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். இவ்விடயத்தை ஆராய்வதற்காக அமைச்சும் தனியான பிரிவொன்றை ஆரம்பித்தள்ளது என தேசிய மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன கூறினார்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மிருகக் காட்சிசாலையில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நாம் மேலதிக விசாரணை நடத்தி எவ்வளவு காலமாக இத்தகைய நடவடிக்கை இடம்பெறுகிறது என்பதை அறிவதுடன் காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்க விரும்புகிறோம் எனவும் பணிப்பாளர் பஷ்வர குணரட்ன தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக