//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

பொலிஸ் வலைவீச்சுத் தேடுதல்: 59 பேர் கைது


மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று 19ம் திகதி மாலை 4 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான 8 மணிநேரத்தில் பொலிஸார் மேற்கொண்ட வலைவீச்சுத் தேடுதலில் 59 பேர் சிக்கியுள்ளனர். 

இவ்வாறு சிக்கியவர்களில் இராணுவ விட்டோடிகள் 20 பேர், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 21 பேர், சந்தேகநபர்கள் 8 பேர் தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர், வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் மற்றும் துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த ஒருவர் உள்ளடங்குகின்றனர். 

இத்தேடுதல் நடவடிக்கை மாத்தறை மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கை செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வெற்றிகொள்ள ஒரே ஆயுதம் கல்வியே..!



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை ஒலுவில் வளாக பல்கலைக்கழக பூங்காவில் நடைபெற்றது. வேந்தர் பேராசிரியர் ஏ.எம்.இஸ்ஹாக் தலைமையில், பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

இப்பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 454 உள்வாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் இலக்கிய கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு பேருரையை நிகழ்த்தினார். இரண்டாம் நாள் பட்டமளிப்பு வைபவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. 

யாழில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!


பாழடைந்த கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்ள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பிரதேசத்தின் வசந்தபுரம் பகுதியிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி மில்லி மீற்றர் 81 ரக மோட்டார் ரவைகள் 18 மற்றும் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலியில் பூமியதிர்வு; நால்வர் பலி


இத்தாலியின் வடபகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வடமேற்கு பொலோக்னவில் 6.0 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த பூமியதிர்ச்சி காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்களை  மதிப்பீடு செய்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

வெறுமனே தெரிவுக் குழுவுக்குள் செல்லாதீர்கள்! யாழ். பல்கலை.மாணவன் தர்சானந்



போர் முடிவடைந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. இனப்பிரச்சினை என தீர்க்கப்படுவதற்கு இனி எதுவும் கிடையாது என அரசாங்கம் கூறிவந்தது.

எனினும் பல்வேறு பட்டவகையில் வெளியுலகில் இருந்து அரசாங்கத்திற்குக் கிடைத்த அழுத்தங்களை சமாளிக்கும் நோக்குடன் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வளிப்பதாகக்கூறி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவென ஒரு குழுவை தற்போது முன்னிறுத்தியுள்ளார்கள்.

இதில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வடகிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்ற கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் உள்வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது வெற்றி பெற்றுள்ளது போலவே தோன்றுகின்றது.

கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவிற்குள் செல்வது சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்கள் சார்பாக நாம் சகல விட்டுக்கொடுப்புகளையும் செய்துவிட்டோம் எனக் காட்டுவதாகவும் அதன் மூலம் ஓர் தீர்வைப் பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களாகவும் அமையும் என எதிர்பார்த்தாலும் தெரிவுக் குழுவிற்குள் வெறுமனே பிரவேசிப்பது புத்திசாலித்தனமானதல்ல.

இத் தெரிவுக் குழுவுடன் எமக்கு என்று இறுதித் தீர்வு கிட்டவேண்டும் என்ற நிபந்தனையை கூட்டமைப்பு முன்வைப்பது அவசியமானது. உலகை ஏமாற்ற இக்குழு பயன்படக்கூடாது.

தெரிவுக் குழுவிற்குள் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உறுதியான தீர்வை அங்கு கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்ற முடியுமா என்ற உறுதிமொழியை அரசாங்கம் எதோ ஒருவகையில் வழங்க வேண்டும்.

தெரிவுக் குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இல்லையேல் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெறும் மூடுமந்திரமான பேச்சுகளாகவும் காலத்தினை வெறுமனே இழுத்தடிப்பதற்கும் அரசாங்கம் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களைத் தீர்ப்பதற்குமான உத்தியாகவே இப் பேச்சுகள் நோக்கப்படும்.

அரசாங்கத்தினால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் அங்கம் வகிக்கக் கூடிய உச்ச இனவாதத்தினைக் கொண்டுள்ள கட்சிகள் குழுவில் முடிவுகளுக்குத் தடையாக அமைகின்றன எனக்கூறி தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகள் தொடர்ச்சியாக புறந்தள்ளப்பட்டு ஏமாற்றவும் படலாம்.

அவ்வாறாக ஏமாற்றப்படும் சூழலில் அது கால ஓட்டத்தினைக் கொண்டதாகவும் இக்காலத்தில் சர்வதேச அளவில் புவி நலன்சார் அரசியலை மையப்படுத்திய எம் மீதான கரிசனைசார் கண்ணோட்டங்கள் அனுதாபங்கள் குறைவடைந்தும் விடத்தக்க ஆபத்துகள் உள்ளன.

இந்நிலையில் தெரிவுக்குழு தொடர்பான சரியாக சூழ்நிலைகள் கூட்டமைப்பினால் ஊகிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக இனப்பிரச்சினைத் தீர்வில் ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் பலம்வாய்ந்த சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பதும் அவசியம். 

செல்போன் பயன்பாடு குறித்து திடுக்கிடும் தகவல்கள்!



வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே செல்போன் இருக்கா என்றுதான் கை தொட்டுப் பார்க்கிறது. அந்த அளவிற்கு செல்போன் நம்மில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
செல்போன் பயன்பாடு குறித்து இங்கிலாந்தின் ’செக்யூர் என்வாய்’ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன அவை உங்களுக்காக :
58 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு தனியாகவும், சொந்த பயனுக்கு தனியாகவும் ஒரு செல்போன் வைத்து கொள்கின்றனர். 41 சதவிகிதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்தது.
நோமொபோபியா (கையில் செல்போன் இல்லையோ என்ற பயம்), செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது. இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும் ஆளாகியுள்ளனர்.
செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், 75 சதவீதம் பேர் பாத்ரூமிலும் செல்போன் பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நிறுவனம் நடத்திய ஆய்வில் நோமொஃபோபியா விற்கு 53 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது 66 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு இங்கிலாந்தில்தான் நடைபெற்றுள்ளது. நம் ஊரில் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டாலும் செல்போனுக்கு டாப் அப் செய்ய மறப்பதில்லை. இதுபற்றி யாராவது ஆய்வு செய்வார்களா?

அழகில் தானே முதல் என கூறிய நடிகை -ஸ்ரேயா



தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இளம் நாயகிகள் வரத்து அவரது மார்க்கெட்டை சரித்து உள்ளது. இது குறித்து ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் முக்கியம். எனக்கு ஒரு சமயம் அதிர்ஷ்டம் இருந்தது நிறைய படங்களில் நடித்தேன். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தேன். இப்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. ஆனால் மீண்டும் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது.
சமீபத்தில் சேலை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த படங்களை பார்த்த போது நான் இத்தனை அழகா என்று ஆச்சரியப்பட்டேன். அவ்வளவு அழகாக இருந்தேன். நிறைய பேர் அந்த படங்களை பார்த்து விட்டு இத்தனை நாள் இந்த அழகை எங்கே ஒளித்து வைத்து இருந்தாய் என்று வியந்தார்கள்.
தெலுங்கு படத்தில் அறிமுகமான போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். மும்பையில் ஒரு பேஷன் ஷோவில் சமீபத்தில் பங்கேற்றேன். மேடையில் நான் நடந்து வந்த போது கிடைத்த கைதட்டல்கள் மறக்க முடியாதவை. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

பெட் ரூமில் இடம் கொடுக்காத ஜஸ்வர்யா


காலை முதல் 24 மணி நேரமும் குழந்தையை கவனிப்பதால் பெட் ரூமில் என்னை ஐஸ்வர்யாராய் அனுமதிப்பதில்லை என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
“குழந்தை ஆரத்யாவுடன் எப்போதும் பொழுதை கழிப்பேன். அவளுடன் விளையாடுவேன். உச்சா போய் டயபரை நனைத்துவிட்டால் அதை மாற்றுவேன். ஆனால், அதற்கு ஐஸ்வர்யா என்னை அனுமதிப்பதில்லை.
நன்றாக தூங்கி கொண்டிருக்கும் நள்ளிரவு நேரத்தில் திடீரென்று ஆரத்யா விழித்து கொண்டு அழ ஆரம்பித்து விடுவாள். உடனே எனக்கும் தூக்கம் கலைந்துவிடும். குழந்தையை கொஞ்ச ஆரம்பித்து விடுவேன். மறுபடியும் தூங்க செல்ல மாட்டேன். இதனால் மறு நாள் ஷூட்டிங் போவதற்கு தாமதமாகிவிடும். இதை ஐஸ்வர்யா விரும்பவில்லை.
மறுநாள் ஷூட்டிங் இருந்தால், என்னை குழந்தையுடன் தூங்க அனுமதிக்கமாட்டார். பெட்ரூமுக்கு வராதீர்கள், வேறு அறையில் தூங்குங்கள் என்று என்னை அனுப்பிவிடுவார்.
ஆரத்யாவுக்கு மே 16 ஆம் திகதி 6 மாதம் நிறைவடைகிறது. இன்னும் கொஞ்சம் வளரும் வரை எனக்கு பெட்ரூமில் தூங்க அனுமதி கிடைக்காது என்று நினைக்கிறேன்.
ஐஸ்வர்யாவை பொறுத்த வரை அவரது காலைப்பொழுது குழந்தையுடன் தொடங்கி இரவுப் பொழுதும் குழந்தையுடனே முடிகிறது. மசாஜ் கொடுப்பது, குளிப்பாட்டுவதில் தொடங்கி நாள் முழுவதும் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறார்.
இப்போதெல்லாம் ஐஸ்வர்யாவின் கவனிப்புக்காக நான் கியூவில் காத்திருக்க வேண்டி உள்ளது.”
இவ்வாறு அபிஷேக் பச்சன் கூறினார்.

சனி, 19 மே, 2012

அயலவரின் தூக்கத்தை கெடுத்த sex வீடியோ

இந்தச் சம்பவம் பிரித்தானியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டில் செக்ஸ் வைத்துக் கொள்வதால் தங்களது தூக்கம் தொலைவதாக தெரிவித்த அயலவர்கள் சத்தமாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஜோடியின் ஓடியோவை ஒலிப்பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது அந்த ஓடியோ இணையத்தில் செம ஹிட் ஆகியுள்ளது. 26 வயதான Lee Moore என்பவர் எடுத்த ஓடியோ தான் இணையத்தில் மில்லியன் கணக்கானோரைக் கவர்ந்துள்ளது.

ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் நடந்தது என்ன


சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
வொசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு-
 கேள்வி – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா?
நுலன்ட் – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.
தனியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மை, திறந்த, பொதுவான செயற்பாடு அவசியம் என்று இராஜாங்கச்செயலர் ஊக்கப்படுத்தினார்.
பொறுப்புக்கூறலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நல்லிணக்கத்தை பலப்படுத்த சிறிலங்காவுக்குள்ளேயும் வெளியேயும் பொது நம்பிக்கையை ஏற்படுத்தும் நகர்வுகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இதனை நீங்கள் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கு, உலகிற்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
வடக்கில் படைக்குறைப்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், மனிதஉரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எப்போதும் போலவே வலியுறுத்தினார்.
ஈரானின் மசகு எண்ணெயில் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகள் குறித்தும், அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர்.
இந்த விடயத்தில் சிறிலங்கா எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஊக்குவித்தோம்.
கேள்வி – பொறுப்புக்கூறுதல் பற்றிக் குறிப்பிட்டபோது, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட – போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் குறித்து அவர் பேசினாரா?
நுலன்ட்- நாம் பொறுப்புக்கூறல் என்று பேசும்போது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அர்த்தம்.
கேள்வி – எனக்குத் தெரியும், ஆனால் அவர் (ஹிலாரி) எப்படி அதுபற்றிக் கேட்டார்?
நுலன்ட் – அவர் பொதுவான சொற்களிலேயே பேசினார். பொப் பிளேக், மைக் போஸ்னர் ஆகியோருடன் அவர்கள் விரிவாகப் பேசுவதற்கு தனியான சந்திப்புகள் இருந்தன.
கேள்வி – பொதுச்சந்திப்பிலும், தனிப்பட்ட சந்திப்பிலும், அவர்கள் பேசுவதற்கு செலவிட்ட நேரம் அதிகமா?
நுலன்ட்- இல்லை.
கேள்வி – எனவே, அது ஏறத்தாழ சமம் என்கிறீர்களா?
நுலன்ட் – அவர்கள் பொதுவாக 10 நிமிடங்கள் பகிரங்கமாகவும், தனியாக 35 நிமிடங்கள் தனியாகவும் பேசினார்கள்.
கேள்வி – 10 நிமிடங்கள் நடந்த பகிரங்க சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தான் பேசுவதற்கு எட்டரை நிமிடங்களை எடுத்துக் கொண்டாரே. அவர் தனிப்பட்ட அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதுகிறீர்களா?
நுலன்ட் – இல்லையில்லை…. அது ஒரு சமமான கலந்துரையாடல்

வெள்ளி, 18 மே, 2012

அச்சுறுத்தல் இருக்கும் வரை இராணுவமுகாம்கள் அகற்றப்படாது


"20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

யுத்த வெற்றி விளாவில் 15 உயர் விருதுகள்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது. 

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் காலி முகத்திடலில்


யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமாகியது.  

இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  

இந்த அணிவகுப்பில் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 854 அதிகாரிகள் உட்பட 12 ஆயிரத்து 828பேர் பங்குபற்றினர்.இவர்கள், கிழக்கு, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என மூன்று முன்னணிகளாக அணிவகுப்பில் ஈடுபட்டனர். 

8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள் !



8 வயதிலேயே செக்ஸ் இணையத்தளங்களுக்கு அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியச் சிறுவர்கள் அடிமையாகிறார்களாம் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது, பிரித்தானிய முன்னணி நாளேடு ஒன்று. தமது பெற்றோரால் தமக்கு வாங்கித் தரப்பட்டுள்ள ஸ்மாட் போபைல் போனில் இருந்தே, மிக இலகுவாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்ல முடிவதாக பல சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். இரகசிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்திய பிரித்தானிய டெய்லி மெயில் பத்திரிகையே இத் தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. பொதுவாக 8 வயதுச் சிறுவர்கள் முதல் 17 வயது இளைஞர்கள் வரை மோபைல் போனைப் பாவித்தே கூடுதலாக செக்ஸ் இணையத்தளங்களுக்குச் செல்வதாக அக் கருத்துக்கணிப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இளைய தலைமுறையினரை எடுத்துகொண்டால் ஒவ்வொரு 10 பேரில் சுமார் 7 பேர் இவ்வாறான செக்ஸ் இணையங்களைப் பார்ப்பதாக ஒத்துக்கொண்டுள்ளனர். பிரின்னா செல்வடோர் என்னும் 13 வயதுச் சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது இச் சிறுமி செக்ஸ் இணையத்தளங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகிவிட்டாராம். ஒரு நாள் கூட அதனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 17 வயதேஆனா நேத்தன் ஹாக் என்னும் இளைஞன் தெரிவிக்கும்போது, தான் நிதமும் விரும்பிப் பார்க்கும் இணையம் அதுதான் என்று கூறியுள்ளார். அதாவது தன்னால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது எனவும், தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு மத்தியில், மதுபானவகைகள் மற்றும் சிகரெட் பாவனை என்பன பரவிவருவதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துவரும் நிலையில், இப் பழக்கங்களுக்கு எல்லாம் அடிமையாகாத பலர் செக்ஸ் இணையத்தைப் பார்க்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என, தற்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளமையானது, பெற்றோர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு செய்தியாக உள்ளது. பொதுவாக வீட்டில் உள்ள கணணி என்றால் அதில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோருக்குத் தெரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மோபைல் போன்களை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. தேவையே இல்லாமல் எதை எதையோ கண்டு பிடிக்கும் நொக்கியா, சாம் சுங், அப்பிள் போன்ற மோபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், சிறு பிள்ளைகள் பாவனைக்கு என்று ஒரு லாக் சிஸ்டத்தை போனில் இன்னும் ஏன் அறிமுகப்படுத்தவில்லை ?

பெண்களுக்கும் மாரடைப்பாம் கவனம்


பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன?
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள்
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள்
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள்
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

பரந்தன் முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் வெடிவிபத்து தொடர்ந்து துப்பாக்கிச்சத்தம்


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுகள் (video)

ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
போரில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கு தம் இன்னுயிரை ஆகுதியாக்கி மாவீரர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்கள் சார்பாக மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டும் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன.


நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கலந்து கொண்டன இவ்வஞ்சலி நிகழ்வில், மாணவ மாணவிகளின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதோடு பேராசிரியர் ஒருவரும் உரையாற்றினார்.
இதேவேளை மாணவர் ஒன்றியச் செயலாளர் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டும், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் எவையும் தடையின்றி நடைபெற்றன.

கூகுல் angry birds அசதல் பூங்கா!



கூகுலால் அறிமுகப்படுத்தப்பட்ட angry birds இணைய விளையாட்டு, சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவர் மத்தியிலும் சக்கைபோடு போடுகிறது.
இவ் angry birds ஐ மையமாக வைத்து சிறுவர் பூங்கா ஒன்று பின்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28 இல் இப் பூங்கா திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆடையை கிழித்து உடுத்து வரும் ஹெலிவூட் நட்சத்திரங்கள்


நாகரீகம் என்ற பெயரில் நல்ல ஆடைகளை கிழித்துப்போடும் பழக்கம் மாலைத்தேய கவர்ச்சி மாடல்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அண்மையில், பிரபல கவர்ச்சி மாடல் ஆன கிம் கடார்சியனின் தங்கை கிழிந்த ஆடையுடன் வலம்வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக…

பாம்பை மனிதன் கடித்ததால் பாம்புக்கு என்னவாயிற்று -இந்தியா


குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பாகரன் பணியை முடித்து விட்டு வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் கிடந்த ஒரு நல்ல பாம்பை பார்க்காமல் அதை மிதித்துவிட்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை கடித்தது. வலியால் துடித்த புஷ்பாகரன் அந்த பாம்பை பழி வாங்க தீர்மானித்தார். பாம்பை விரட்டிச் சென்று பிடித்து அதை கடித்து குதறினார்.
இதில் அந்த பாம்பு இறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் உடலில் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் புஷ்பாகரனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.