//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நுழைவுக் கட்டணமாக 2.50 டொலரிற்கு மேல்


இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டிகளுக்கான நுழைவுசீட்டின் குறைந்த பெறுமதி 0.25 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டிக்கான நுழைவுக் கட்டணமாக 2.50 டொலரில் இருந்து 45 டொலர் வரை அறவிடப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான உலகளாவிய நுழைவுச் சீட்டு விற்பனை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலிடத்தை இழந்துள்ளார் குமார் சங்ககார


சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார முதலிடத்தை இழந்துள்ளார்.

நேற்று நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்க தவறியதை அடுத்து குமார் சங்கக்கார மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக முதலிடத்தில் இருந்த குமார் சங்க்கார இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்சில் ஒட்டமெதுவும் பெறாமலும், இரண்டாம் இன்னி்ங்ஸில் 14 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் மைக்கல் கிளார்க் மற்றும் ஏ.பி.டி வில்லியஸ் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய இருவரும் தலா 821 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.


இலங்கை அணிவீரர் குமார் சங்கக்கார 813 புள்ளிகளைப் பெற்று, மூன்றாம் இடத்திலுள்ளதுடன், யூனுஸ் கான் நான்காம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடhத ஜக் கலீஸ் புள்ளிகளை இழந்துள்ளதுடன், இரண்டாம் இடத்தில் தொடர்ந்தும் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

சிவ் நரேன் சந்திரபோல் ஐந்தாம் இடத்தையும் திலான் சமரவீர ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளதுடன், ஹசீம் அம்லா, ஜொனதன் ட்ரொட், ரோஸ் டெய்லர் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

முதல் பத்து இடங்களுக்குள் எந்தவொரு இந்திய வீரர்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருதயக் கோளாறுகள் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு































நாட்டில் ஒவ்வாமை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாகவும் இருதயக் கோளாறுகள் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

நாட்டிலுள்ளவர்கள் அதிக உப்பு பாவனை காரணமாக, உயர் குருதியமுக்கம், இருதயக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமைக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக உப்பு பாவனை, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை மற்றும் மதுபான பாவனை காரணமாக உயர் குருதியமுக்கம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

உணவிற்கு அதிகளவில் உப்பை சேர்த்துக்கொள்ளல் உயர் குருதியமுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணமென அமைச்சு தெரிவிக்கின்றது.

மனித உடலுக்குத் தேவையான அளவு உப்பு, உணவு மற்றும் நீரில் அடங்கியுள்ளதாகவும், மேலதிக உப்பு பாவனை அவசியமற்றது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

3 படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை


3 படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார்.

இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகவும், இந்த படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து, இணையதளங்கள் மற்றும் இருவெட்டுகளில் வெளியிட வாய்ப்புள்ளதால், இதனை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கஸ்தூரி ராஜாவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து 3 படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் படத்தை திருட்டுத்தனமாக இருவெட்டுக்களில் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கி வரும் புதியபடம் கடல்.

ராவணனுக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதியபடம் கடல். இப்படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் - கவுதமும், அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கின்றனர். 


கவுதமின் அப்பாவாக மணிரத்னத்தின் ஆஸ்தான நாயகனான அரவிந்த்சாமி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி நடிக்கும் படம்  இது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே ராஜீவ் மேனன் மணிரத்னத்தின், பம்பாய் மற்றும் குரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் கடல்

நாயகன், நாயகி தெரிவு பெயர் வைப்பதில் குழப்பம் என கடந்த ஓராண்டு காலமாக இழுபறி நிலையில் இருந்த கடல் படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக கடந்த வாரம் திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறைந்த, செம்மண் பகுதி மணப்பாடாகும். ரொம்பவே அமைதியான சூழலில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். மேலும் படத்தின் பாடல் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை கடலில் வைத்து படமாக்கி வருகிறார், இதற்காக ஹெங்கொங்கில் இருந்து பிரத்தியேகமான தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்துள்ளார். 

மணப்பாடு பகுதியில் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்தக்கட்ட படிப்பிடிப்பை கேரளா மாநிலம், மூணாறில் நடத்த இருக்கும் மணி, கடல் படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முனைப்போடு வேகமாக இயக்கி வருகிறார்.

மீனவர்களின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் கடல் படத்தில், ஒரு அருமையான காதலையும், சேர்த்து இருக்கிறாராம் மணிரத்னம்.

வடமாகாணத்தில் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு போதியளவு வசதிகள் இல்லை


வடமாகாணத்தில் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் நலின் பெரேரா இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்ப்பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் கூறினார்.

தற்போது 468 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்ற போதிலும் உத்தியோகப்பூர்வ குடியிருப்பு, குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காமல் அங்கு சேவையாற்றுவது கடினமெனவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார தடை விதித்தால் எமக்கே பாதிப்பு - திஸ்ஸ விதாரண


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கை எதிர்காலத்தில் சிறப்பான பாதையில் பயணிக்க முடியுமென சோஷலிச மக்கள் முன்னணி குறிப்பிடுகிறது.

ஜெனீவா மாநாட்டின்போது இலங்கை தொடர்பான பிரேரணையை முன்வைத்த நாடுகளை தூற்றுவதில் எவ்வித பயனுமில்லை என கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இவ்வூடகச் சந்திப்பில் அமைச்சர் ரோசிரியர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் டி.யூ.குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

374 மில்லியன் செலவில் ஊடகங்களுக்கு வசதிகளை புதிய ஊடக அபிவிருத்தி நிலையம்


உண்மையின் பலத்தை பயன்படுத்தி இலங்கை தொடர்பான சிறந்த செய்தி ஒன்றை உலகம் முழுவதும் பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று நடைபெற்ற ஊடக அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஊடக அபிவிருத்தி நிலையம் ஜனாதிபதியால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்திற்காக 374 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பகங்களைக் கொண்ட கேட்போர் கூடம்,  நூலகம்,  இரண்டு ஆய்வுகூடங்கள்,  கணணி மையம், அருங்காட்சியகம், ஒலி ஒளி வசதிகளைக் கொண்ட பிரிவு ஆகியன இந்த ஊடக அபிவிருத்தி நிலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஊடகம் ஜனநாயகத்தின் காவலன் என்பதன் அடிப்படையில் அசாதாரணத்திற்கும் அநீதிக்கும் எதிராக முன்நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவ்வாறு முன்நிற்பதோடு மாத்திரமல்லாமல், மக்களின் அபிவிருத்திக்காகவும் சந்ததியினரின் அடுத்தக் கட்ட பயணத்திற்காகவும் முன்நிற்பது ஊடகங்களின் பொறுப்பென ஜனாதிபதி தெரிவித்தார்.

30.03.2012 இன்று எப்படி காலநிலை


Colombo
Friday
30.03.2012
+28°
568 millibars
81%
1 m/s W
Saturday
31.03.2012
+28°..+31°
567 millibars
67%
1 m/s W
Sunday
01.04.2012
+29°..+32°
567 millibars
64%
1 m/s SW
Monday
02.04.2012
+28°..+31°
567 millibars
64%
1 m/s SW
Tuesday
03.04.2012
+28°..+31°
567 millibars
65%
1 m/s SW
Jaffna
Friday
30.03.2012
+14°
567 millibars
78%
2 m/s SW
Saturday
31.03.2012
+14°..+16°
567 millibars
71%
2 m/s SW
Sunday
01.04.2012
+14°..+16°
567 millibars
67%
0 m/s NNE
Monday
02.04.2012
+14°..+16°
567 millibars
66%
0 m/s SSE
Tuesday
03.04.2012
+14°..+16°
567 millibars
65%
0 m/s WSW