//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

வரி அதிகரிப்பு மக்கள் சிரமம்



வாகன இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருளுக்கான கேள்வியை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரி திருத்தத்தின் பிரகாரம் 2009 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பத்து ஒன்பதாயிரமாக காணப்பட்ட மோட்டார் சைக்கிள் பதிவிற்கான கட்டணம், 2011 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று பதிணெட்டு ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.

இதேவேளை 2009 ஆம் ஆண்டில் 34,563 ஆக காணப்பட்ட முச்சக்கரவண்டி பதிவிற்கான கட்டணம், 2011 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து எண்ணூற்று பதினாறாக உயர்த்தப்பட்டது.

வசந்த சமரசிங்க- தலைவர் அனைத்து நிறுவன ஊழியர் சங்கம்

தற்போது வாகனம் இல்லாதவர்களுக்கு அவை இல்லை. வாகனம் உள்ளவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு உள்ளன. அவற்றில் வரையறை விதிப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை ஆனால் அன்றாடம் வேலைக்குச் செல்பவர்களும், விவசாயிகளும், சுயதொழில்களில் ஈடுபடுபவர்களுமே மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்கின்றனர். அதற்கும் வரி அறவிடுகின்றனர்.

கயந்த கருணாதிலக்க - ஊடகப் பேச்சாளர் ஐக்கிய தேசியக் கட்சி

இந்த வரி அதிகரிப்பின் பாதிப்பினை இப்போது அவதானிக்க முடிகின்றது. குறைந்த பட்சமாக மோட்டார் சைக்கிளொன்றின் விலையில் எண்பதிணாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையில் அதிகரிப்பு ஏற்படலாம். அத்துடன் முச்சக்கரவண்டியொன்றின் விலையானது ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவாக உயர்வடையலாம். இந்த வரி அதிகரிப்பினூடாக விலையிலும் உயர்வு ஏற்படும் என்பது தற்போதும் பதிவாகின்றது. அரசாங்கத்தின் வரி வருமானத்தை மில்லியன் கணக்கில் உயர்த்திக் கொள்வதற்காகவே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வரி அறவிடப்படுகின்றது. இதனாலேயே சாதாரண மக்களினால் செலுத்த முடியாத அளவிற்கு வரியை அறிவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக