//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

124 முறைப்பாடுகள்



புத்தாண்டு காலத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் தொடர்பில்  124 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகள் கடந்த ஒரு வாரகாலத்திற்குள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிக கட்டணம் அறவிடல், பயணச்சீட்டு வழங்கப்படாமை,  உரிய நேரத்தில் சென்றடைய வேண்டிய இடத்தை சென்றடையாமை, வரையறையற்ற முறையில் பயணிகளை ஏற்றுதல் மற்றும் குளிரூட்டிகள் செயற்படாமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பதிவு செய்யப்பட்ட அடையாள  அட்டைகளை இரத்து செய்வதோடு போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக  இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக