//]]>3

வியாழன், 12 ஏப்ரல், 2012

இரும்பு வியாபாரத்தில் சிறுவர்கள்



யுத்த காலத்தில் சேதமடைந்த துருப்பிடித்த இரும்புகளுக்கு தற்போது வர்த்தக சந்தையில் பெரும் கிராக்கி  ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்னியிலிருந்து தினமும் பாவனைக்கு உதவாத பெருமளவு துருப்பிடித்த இரும்புகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் கொழும்பிற்கு குறைந்தது பத்து லொறிகள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் பழைய இரும்புகளை சேகரித்து வி்ற்பனை செய்யும் நடவடிக்கையில் சிறுவர் கூட்டம் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகி்ன்றது.

வறுமை காரணமாகவே கல்வியை  இடைநிறுத்திவிட்டு,  நாளாந்தம் வருமானம் பெறும் தொழிலில் சிறுவர்கள் ஈடுபட்டுவருகின்றனர் என நிவாரண பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் நடைபெற்ற காலத்தில் காங்கேசன்துறைமுகத்தில் கடலில் மூழ்கிய கப்பல்கள் தற்போது இந்திய அரசின் உதவியுடன் வெளியே  கொண்டுவரப்பட்டு கப்பலின்  இரும்புகளும் வெட்டி கொழும்பிற்கு கொண்டு செல்லப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக