//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

இமைதி காக்குமா இலங்கை இராணுவத்தினர்


அமைதி காக்கும் பணிகளுக்காக 150 இலங்கைப் படையினர் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்
.
அமைதி காக்கும் பணிகளுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பத்து அதிகாரிகளும் 140 உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி லெபனான் செல்லவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட 7 இராணுவ அதிகாரிகள் மற்றும் 111 இராணுவ சிப்பாய்கள் எதிர்வரும் ஜூலை மாதம் அங்கு செல்லவுள்ளனர். வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 12000 வீரர்கள் கடமையாற்றி வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக