//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

கண்ணா சந்திரனுக்கு டூர் போகஆசையா


அமெரிக்கா… சுவிர்சலாந்து என எக்ஸ்பென்சிவ் டூர் போய்வரும் காலம் மலையேறிவிட்டது.

வரும் 2015-ம் ஆண்டு முதல் சந்திரனுக்கான சுற்றுலா தொடங்குகிறது. இதற்கான செலவு ரூ700 கோடி மட்டுமே…!  லண்டனைச் சேர்ந்த Excalibur Almaz என்ற நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்தைத் தாண்டி சந்திரனுக்கும் டூர் போய்வர அருமையான ரூர் பக்கேஜை தயார் செய்துள்ளது.
இதற்காக ரஷியாவிடம் இருந்து 6 சிறப்பு விண்கலங்கள் கூட வாங்கப்பட்டுவிட்டன. இதில் ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்கின்றனர். பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் வகையிலான இத்திட்டம் தொடர்பாக நேற்று லண்டனில் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக