//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

இந்தியா-சீனா இரகசியப்போச்சு


இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், சீனா பிரதமர் வென்ஜியாபோ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.மெக்சிகோ நாட்டின், லாஸ் கபோஸ் நகரில் நடந்த, “ஜி20′ உச்சி மாநாட்டில் பங்கேற்ற, பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், பிரேசிலில் நடக்கும், “ரியோ பிளஸ் 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக, நேற்று, ரியோடி ஜெனிரோ சென்றடைந்தார்.
சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்தும், தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுவை குறைப்பது குறித்தும், இந்த மாநாட்டில் பங்கேற்கும் பன்னாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். இதற்கிடையில் இந்தியா- சீனா பிரதமர்கள் இருவரும் சுமார் 40 நிமிடம் தனியாக சந்தித்து பேசிக்கொண்டனர். இந்த பேச்சில் இரு நாட்டு ராணுவ ரீதியிலான உறவை வலுச்செய்து கொள்வது என்றும், 2015 ல் 100 பில்லியன் டாலர் வரை வர்த்தகம் செய்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக