//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

பஸ்களை ஏமாற்றி வந்த இளம் ஜோடிக்கு விளக்கமறியல்!


பல்வேறு பாதைகளில் பஸ் ஊழியர்களை ஏமாற்றி வந்த ஓர் இளம் ஜோடியை ஜுன் 25 வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று பணித்துள்ளார்.

பஸ்ஸொன்றில் பணிபுரியும் சாரதி, நடத்துநர் ஆகியோரை கொழும்பு, பல்கலைக்கழத்துக்கு அண்மையில் ஏமாற்ற முயன்றபோதே கறுவாத்தோட்ட பொலிஸார் இந்த தம்பதியை கைது செய்து கொழும்பு பிரதம நீதவான் முன் ஆஜர் செய்தனர்.
பொதுவாக பஸ்ஸில் ஏறும் இந்த ஜோடி தூர இடத்தில் உள்ள மரணவீட்டிற்கு செல்வதற்கு பஸ்ஸை வாடகைக்கு விடமுடியுமா என கேட்பர். கட்டணம் தொடர்பாக பேரம் முடிந்தபின் மரண வீட்டுக்கு செல்லவுள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்கு பஸ்ஸை கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு விடும்படி இந்த தம்பதியினர் கூறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில், உணவுப்பொதிகளை வாங்க வேண்டுமென கூறி; நடத்துனரிடமிருந்து கடனாக பணம் பெற்றுக்கொள்வர். கொழும்பு பல்கலைக்கழகத்தை சென்றடைந்ததும் பஸ் பணியாளர்களை வாசலில் காத்திருக்குமாறும், தாம் மாணவர்களுடனும் பணத்துடனும் வருவதாக கூறி பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றவர்கள் திரும்புவதில்லை.
இவ்வகையில் இவர்கள் பஸ் பணியாளர்கள் பலரை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் கூறினர். இவ்விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கறுவா தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கபில – பிரேமதாஸ, சந்தேக நபர்களை பிடிப்பதற்காக நிறுத்தியிருந்த இரண்டு கான்ஸ்;டபிள்கள் மூலம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை ஜுன் 25 வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக