//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

சுண்டிக்குளம் பகுதியில் 200 சிங்கள கடத்தொழிலாளர்கள்


வடமாராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் தமிழ்மக்கள் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் சிறீலங்கா படையினரின் துணையுடன் சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள.

வடக்கே யாழ்ப்பாணம் கடற்கரைதொடக்கம் திருகோணமலை புல்மோட்டை வரையான கடற்கரை பகுதிகளில் அத்துமீறிய சிங்கள கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
தமிழ்மக்கள் வாழ்இடங்களில் நிலஅபகரிப்பினை மேற்கொண்டு படையினரின் செறிவினை மேலும்அதிகரிக்கும் நோக்கில் சிங்கள படையினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளை கடற்தொழில் நடவடிக்கைக்காக பெருமளவான சிங்களவர்கள் வடக்கு கடற்கரைஓரங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
புல்மோட்டடை,கொக்குத்தொடுவாய்,கொக்கிளாய்,நாயாறுமற்றும் முள்ளிவாய்க்கால்,முல்லைத்தீவு,சாலை,சுண்டிக்குளம் வடமராட்சி கிழக்கு மற்றும் யாழ்ப்பாணத்தின் பகுதிகளிலும் சிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள்,வடக்கில் முழுமையாக தமிழ்மக்களை மீள்குடியேற்றம் செய்யாத சிங்கள அரசு தமிழ்மக்களின் வளங்களை சுறண்டுவதற்காக திட்டமிட்டுசிங்கள மக்களை குடியேற்றுகின்றார்கள் கடற்தொழில் என்ற போர்வையில் இவ்வாறு சிங்களவர்கள் சென்று அமர்கின்றார்கள்.
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் சிறீலங்கா கடற்படையினரின் உதவியுடன் 200ற்கும் அதிகமான சிங்கள கடல்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் சுண்டிக்குளம் பகுதியில் இருந்த மக்களை அங்கு கண்ணிவெடிகள் உள்ளன என்று கூறி இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை இன்னிலையில் சிங்கள மக்கள் குறிப்பிட்ட பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு தமிழர்களின் கடல்வளங்களை சுறண்டும் நோக்கில் சிறீலங்காவின் கடற்தொழில் அமைச்சின் அனுமதி பெற்றுஎன்று தெரிவித்த சிங்கள கடற்தொழிலாளர்கள் இன்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக