//]]>3

ஞாயிறு, 10 ஜூன், 2012

போனா வராது உங்களுக்கு ஒரு அதிஸ்டம்


பிரபல ஏல நிறுவனமான ஸதபிஸ், அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய முதல் ஆப்பிள் மக் கம்ப்யூட்டரை ஏலத்துக்கு விடுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைகளாலேயே உருவாக்கினார்கள். 1976-ம் ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு வந்த போது இதன் விலை 666.66 டாலர்கள். அன்றைய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ. 6 ஆயிரம். வரும் 15-ந் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஏலத்தில் இவ் ஆப்பிள் கம்ப்யூட்டர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் ஆரம்ப கால பர்சனல் கம்ப்யூட்டர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள். இன்றைய மிகப் பிரபலமான ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட் வகையறாக்களை உருவாக்கிய நிறுவனத்தின் முதல் தொழில்நுட்ப படைப்பு இந்தக் கம்ப்யூட்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக